விளக்கைப் போடக் கூடிய ஒரு மனிதன் இங்கிருக்கிறார் Jeffersonville, Indiana, USA 63-1229M 1...இப்பொழுது நாம் தலைவணங்குவோம். எங்கள் பரலோகப் பிதாவே, உமது நன்மைகளுக்காவும், இரக்கங்களுக்காகவும், அழகான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாங்கள் மகத்தான நித்தியத்துக்கு இப்புறம் ஒரு நாளில் தொழுது கொள்ள இங்கு மறுபடியுமாக கூடி வர எங்களுக்கு நீர் அளித்த சிலாக்கியத்திற்காகவும் இந்த காலை வேளையில் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவர் இவ்வுலகிற்கு வந்து, பாவமுள்ள வாழ்க்கையிலிருந்து எங்களை மீட்டுக் கொண்டு அவருடைய நீதியின் மூலம் எங்களுக்கு இந்த மகத்தான சுதந்தரவீதத்தை அளித்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இங்கு காத்திருக்கும் சபையோருக்கு, உம்முடைய ராஜ்யத் தூதர்கள் என்னும் முறையில், ஜீவ அப்பத்தை பிட்டுக் கொடுக்க நாங்கள் வந்திருக்கும் இக்காலை வேளையில், பரிசுத்த ஆவியானவர் தாமே ஒவ்வொரு வார்த்தையையும் ஊக்குவித்து, எங்கள் தேவைக்கேற்ப ஜனங்களின் இருதயங்களில் பதியச் செய்வாராக. இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். உட்காருங்கள். 2மறுபடியுமாக இக்காலையில் உங்கள் மத்தியில் நின்று கொண்டிருப்பதை ஒரு பெரிய சிலாக்கியமாக நிச்சயம் கருதுகிறேன். ஜனங்களுக்கு சௌகரியத்தை அளிக்க இதைக் காட்டிலும் அதிக இடவசதி இல்லாததால் வருந்துகிறேன். நம்முடைய கூடாரம் இருக்க வேண்டிய அளவுக்கு பெரிதாயில்லை. விடுமுறையின் போது நாங்கள் டூசானிலுள்ள எங்கள் வீட்டிலிருந்து இங்கு வந்திருப்பதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். வான்நிலை ஒருவாறு மோசமாயிருந்த போதிலும், இங்கு வந்து கூட்டத்தில் பங்கு பெறுவதைக் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்றிரவு சுகமளிக்கும் ஆராதனை இருக்கும், அப்பொழுது வியாதியஸ்தருக்கு ஜெபிக்கப்படும் என்று அறிவிக்க விரும்புகிறேன். இப்பொழுது தான் பில்லியிடம் கூறினேன்... அவன், “நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டான். நான், “இன்றிரவு 6.30 மணியளவில் சில ஜெப அட்டைகளை விநியோகம் செய். அப்பொழுது ஜனங்கள்...” பாருங்கள், ஜன நெருக்கடி இங்கு இருப்பதால், அட்டையிலுள்ள எண்ணைக் கூப்பிட்டு, அவர்களை ஒருவர் ஒருவராக இங்கு கொண்டு வந்தால், நெருக்கம் இருக்காது. அவர்களை ஒருவர் ஒருவராக அழைத்து வரிசையில் வரும்படி செய்து, அவர்களுக்காக ஜெபிக்கலாம். 3எனவே நீங்கள்... நீங்கள் வியாதிப்பட்டிருந்தால், அல்லது உங்களுக்கு அருமையானவர்கள் வியாதிப்பட்டிருந்து அவர்களை இங்கு கொண்டு வர விரும்பினால், 6.30 அல்லது 7.00 மணியளவில் இங்கு வந்து ஜெபஅட்டையை பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் உள்ளே வரும் போது, பில்லி கதவண்டையில் இருப்பான் - அல்லது வேறெங்காவது இருந்து அட்டைகளைக் கொடுப்பான். சில நாட்களுக்கு, இங்கு நான் வருவது இதுவே கடைசி முறையாக இருக்கும். ஏனெனில் எனக்கு அதிக பிரசங்க அழைப்பு உள்ளது. இருப்பினும் வசந்த காலம் வரைக்கும் நான் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தான் இருப்பேன். ஒருக்கால் சிறிது கழிந்து, கோடை காலத்தில் நாங்கள் இங்கு வரக்கூடும். கர்த்தருக்கு சித்தமானால், இந்த இடம் அதற்குள் 'ஏர் கன்டிஷன்' செய்யப்படுமானால், அதைக் குறித்து பில்லியைக் கேட்க வேண்டுமென்றிருந்தேன்; எனக்கு ஏழு எக்காளங்கள் மேல் பேசப் பிரியம் (உரைக்கப்பட்ட வார்த்தை வால்யூம் 3, எண் 16, எக்காளப் பண்டிகை - ஆசி) கர்த்தருக்கு சித்தமானால் ஏழு எக்காளங்களுக்காக ஒரு கூட்டம் வைப்போம். ஏழு சபை காலங்கள், பிறகு ஏழு முத்திரைகள், இப்பொழுது ஏழு எக்காளங்கள். ஜுன் மாதத்தில் விடுமுறையின் போது உங்களுக்கு நேரம் கிடைக்குமானால், நீங்கள் வருவதற்காக உங்களுக்கு போதிய அவகாசம் அளிக்கிறோம். 4இன்று காலை சகோதரன் ஷெப்பர்டை இங்கு காண்பதில் எனக்கு மகிழ்ச்சி. அவர் மருத்துவமனையிலிருந்த போது அன்றொரு நாள் அவரைக் காண அங்கு சென்றிருந்தேன். சகோதரன் ஷெப்பர்ட், உங்களை நான் நேற்று தொலைபேசியில் கூப்பிடவில்லை. நீங்கள் எனக்கு எழுதி அனுப்பியிருந்த சொப்பனம் மிக, மிக அருமை. நீங்கள் கிறிஸ்துவை வானத்தில் வெள்ளைக் குதிரையின் மேல், ஆனால் இன்னும் கட்டப்பட்டவராகக் கண்டீர்கள். பாருங்கள்? அது மறைவதற்கு முன்பு உங்கள் குடும்பத்தினர் அதை கண்டனர். சொப்பனத்தின் அர்த்தம் என்னவெனில், இந்த கடைசி காலத்திலுள்ள தேவனுடைய அசைவை உங்கள் குடும்பத்தினர் அது கடந்து செல்வதற்கு முன்பு கண்டுவிட்டனர்... எனவே அது மிகவும் ஆவிக்குரியதாய், உங்களுக்கு ஒரு பெரிய ஆசீர்வாதமாய் உள்ளது. உங்கள் குடும்பத்தினருக்கும், இன்றைக்கு அவர்கள் உள்ள நிலையை அடைவதற்கு, அந்த குடும்பம் சில பெரிய உபத்திரவங்களைக் கடந்து வர வேண்டியதாயிருந்தது. 5இன்று காலை நமக்கு வருத்தமான ஒரு செய்தி உள்ளது. சென்ற முறை நான் இங்கு வந்து போன பிறகு, நமது விலையேறப்பெற்ற நண்பரில் ஒருவரும் இந்த கூடாரத்துக்கு வருபவர்களும், கோட்ஸ் குடும்பத்தினரை நாம் அனைவரும் நேசிக்கிறோம். அவர்கள் கிழக்கு பாகத்திலிருந்து இங்கு வந்தவர்கள்... அல்லது சிக்காகோவின் சுற்று வட்டாரத்தில். சகோதரி மில்லி ஹபிப், இங்கு சகோதரி ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் எல்லா பெண்களும் உள்ளனர். அவர்கள் முன்பு நசரீன் ஸ்தாபனத்தை சேர்ந்திருந்தனர் என்று நினைக்கிறேன். அதிலிருந்து அவர்கள் தேவனிடம் வந்தனர். அவர்கள் மிகவும் விலையேறப்பெற்ற நண்பர்கள். சகோதரன் மற்றும் சகோதரி கோட்ஸும், அவர்கள் தகப்பனும் தாயும் அன்றொரு நாள் மேற்கு பாகத்திலிருந்து வீடு திரும்பி காலையில் வந்து கொண்டிருந்த போது, எவனோ ஒருவன் காரை அவர்கள் மேல் மோதினதால், சகோதரி கோட்ஸ் அங்கேயே இறந்து போனார்கள். அவர்கள் டூசானிலிருந்த எனக்கு தொலைபேசியின் மூலம் தகவல் தெரிவித்த அந்த நேரத்தில், சகோதரி கோட்ஸ் எனக்காக செய்த இனிப்புப் பண்டப் பெட்டியுடன் மேசையில் உட்கார்ந்து அதை தின்று கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்கு எப்படியிருந்தது தெரியுமா? ஆனால் அவர்கள் கஷ்டப்படவில்லை என்பதற்காக இன்று காலை கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். அவர்களுக்கு வயதாகிக் கொண்டு வந்தது. அவர்கள் கஷ்டப்படாமல், தேவனுடன் இருக்க வீடு சென்றுவிட்டார்கள். 6அதைக் குறித்து நான் சிந்தித்து, சற்று முன்பு அந்த அறையில் அவர்களுடைய இரண்டு மகள்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். சகோதரன் கோட்ஸ் இன்று காலை இங்கிருக்கிறார். அவருடைய சில விலாவெலும்புகள் உடைந்துவிட்டன. அவர் மிஸ்ஸௌரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரை அங்கு போய் பார்த்தேன். அவருடைய விலாவெலும்புகள் உடைந்திருந்தன. அவருக்கு உண்மையில் தைரியம் உள்ளது. ஒரு உண்மையுள்ள கிறிஸ்தவன் என்னும் முறையில், அவருடைய சிறு ராணி மரிக்கவில்லை என்றும், அவள் என்றென்றைக்கும் கிறிஸ்துவுடன் உயிரோடிருக்கிறாள் என்றும் அவர் அறிந்திருக்கிறார். பாருங்கள்? இணையும் நேரம் ஒன்று இருக்கும். ஒரு முறை யோபு, “நீர் என்னை பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீரு மட்டும் என்னை மறைத்துக் கொள்ளும்” என்றான். (யோபு 14:13) 7தேவன் இயற்கைக்கும் அதையே செய்கிறார் என்று எப்பொழுதாவது நீங்கள் கவனித்ததுண்டா? மரங்களில் உள்ள சத்து இலைகளை மரத்தில் பிடித்துக் கொண்டிருக்கிறது. குளிர் காலம் தொடங்கி, கோபம் பூமியின் மேல் ஊற்றப்படுவதற்கு முன்பு... பாருங்கள், ஒரு காலத்தில் பூமியில் குளிர் காலம் இருக்கவேயில்லை. ஆயிரவருட அரசாட்சியின் போது குளிர் காலம் இருக்காது. பாருங்கள்? எனவே அது பூமியின் மேல் ஊற்றப்படும் கோபம். அது நடக்கும் போது... பாருங்கள், கோபம் பூமியின் மேல் வருவதற்கு முன்பு, தேவன் தம்முடைய கிருபையினால் மரத்தின் சத்தை நிலத்தின் அடியிலுள்ள வேர்களுக்கு அனுப்பி, குளிர் காலத்தின் கோபம் தீரு மட்டும் அதை அங்கேயே வைத்து, வசந்த காலத்தின் போது அதை மேலே கொண்டு வருகிறார். “ஓ, நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீரு மட்டும் என்னை மறைத்துக் கொள்ளும்.” அவர் அதை தான் நமது சகோதரிக்குச் செய்திருக்கிறார். அதை தான் அவர் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் செய்கிறார். 8சகோதரன் கோட்ஸ், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இந்த துயர நேரத்தில் தேவனுடைய முத்திரை காக்கிறது என்பதைக் குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர் எத்தகைய துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் பல ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற துயரத்தை நான் அனுபவித்தேன். ஆனால் நான், நாம் ஒருவர் பின் ஒருவர் இந்த பெரிய நதியை கடக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். இந்நாட்களில் ஒன்றில் என்னுடைய தருணம் வரும், இந்நாட்களில் ஒன்றில் உங்கள் தருணமும் வரும். ஆனால் தாவீது கூறினது போல், “நான் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர். உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.” (சங்கீதம் 234). இப்பொழுது, தேவனிடம் சென்றுவிட்ட நமது விலையேறப்பெற்ற சகோதரி கோட்ஸின் ஞாபகார்த்தமாக... இன்று காலை அவர்களுக்கு சிறு ஞாபகார்த்தமாக, சிறிது நேரம் சபையோர் எழுந்து நிற்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நாம் தலைவணங்கி, சில நாட்களுக்கு முன்பு இந்த கூடாரத்தில் நமது மத்தியில் நடந்து, நம்முடன் கைகுலுக்கி, ஒரு அருமையான கிறிஸ்தவளாக, அண்மையில் நான் காணும்படி கர்த்தர் அனுமதித்த அந்த இடத்துக்கு சென்று, இளம் பெண்ணாக, வந்து கொண்டிருக்கும் குடும்பத்தினருக்காக காத்திருக்கும் அந்த சகோதரியை நினைவு கூருவோம். 9எங்கள் பரலோகப் பிதாவே, சகோதரி கோட்ஸின் நினைவுகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். என்ன ஒரு அருமையான விலையேறப்பெற்ற சகோதரி! இப்பொழுது, எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாழ்நாள் நிறைவேறி முடிந்த பின்பு, நாங்களும் நதியைக் கடக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். அவர்கள் கஷ்டப்படாமல் சென்றுவிட்டதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவர்கள் கஷ்டப்படுவதற்கென அவர்களுக்கு விரோதமாக இங்கு ஒன்றும் இருக்கவில்லை. அவர்கள் நேரடியாக ஒரு நொடிப் பொழுதில் தேவனுடைய கரங்களை அடைந்துவிட்டார்கள். கர்த்தாவே, அவர்களுடைய கணவரும் பிள்ளைகளும் தங்கள் கடமையை நிறைவேற்ற இங்கு திரும்ப வந்துவிட்டார்கள். அந்த தீரமுள்ள விசுவாசம், அந்த இருண்ட பாதாளம், அக்கினி, பட்டயம் இவைகளுக்குப் பதிலாக நமது பிதாக்களின் விசுவாசம் இன்றும் நிலைத்திருப்பதற்காக உமக்கு எவ்வளவாக நன்றி செலுத்துகிறோம்! இவை அனைத்துக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தாவே, அவர்களுடைய விலையேறப்பெற்ற ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் தாரும். அவர்கள் எங்கள் சகோதரி. அவர்களுடைய பிரிவை நினைத்து நாங்கள் கண்ணீர் வடிக்கிறோம். எங்கள் இருதயத்தில் துயரம் உண்டாகிறது. ஆனால் அந்த கண்ணீர் துளிகளிலிருந்து மகிழ்ச்சி பொங்கி, அவர்கள் என்றென்றைக்கும் மரிக்காத வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்னும் உறுதியை உமது வார்த்தை அளித்துள்ளது என்பதை எங்களுக்கு அறிவிக்கிறது. அவர்கள் இப்பொழுதுள்ள இடத்தில் எந்த விபத்தும் நேரிடாது. அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களைச் சேர்ந்து கொள்ள இருப்பவர்களுக்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கர்த்தாவே, சகோதரி கோட்ஸையும், குடும்பத்திலுள்ள பெண் பிள்ளைகளையும், அவர்களுக்கு அருமையானவர்களையும், அவர்களை நேசிக்கும் அனைவரையும் ஆசீர்வதிப்பீராக. பிதாவே, என்றாவது ஒரு நாள் அவர்களை மறுபுறத்தில் சந்திப்போம் என்று நம்புகிறோம். அங்கு வியாதி, துயரம், மரணம் எதுவும் இருக்காது. அதுவரைக்கும் எங்கள் அனைவரையும் ஆரோக்கியமாக வைத்து, உம்மை நாங்கள் சேவித்து, அந்த நாளை எதிர்நோக்கியிருக்கும்படி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். இந்த கூடாரத்தில் நம்முடன் தொடர்பு கொண்டு, அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தி தரும் அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே, அவர்களுடைய தீரமுள்ள ஆத்துமாவுக்கு, நாம் அவர்களைச் சந்திக்கும் வரைக்கும், இளைப்பாறுதல் அளிப்பாராக. 10இன்று காலை இங்கு உஷ்ணமாயுள்ளது, ஏனெனில் அது சரீரங்கள், உங்களுக்குத் தெரியும்... மனித உடலிலிருந்து வெளிவரும் வெப்பம். இப்பொழுது சில அறிவிப்புகளைச் செய்ய விரும்புகிறோம். சில நேரங்களில் இங்கு நடக்கும் காலை ஆராதனைகள் நீண்டுவிடுகின்றன. அதற்கு காரணம் என்னவெனில், அவ்வளவு நேரம் ஆராதனை நடத்துவது உண்மையில் சரியல்ல, ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் அல்லது சில நேரங்களில் இரண்டு மணி நேரம். நான் என்ன செய்கிறேன் என்றால், செய்தியை ஒலிநாடாவில் பதிவு செய்கிறேன். பாருங்கள்? இந்த ஒலி நாடாக்கள் உலகம் முழுவதும் செல்கின்றன. ஆகையால் தான் நாம் காலையில் அவ்வளவு நேரம் இங்கு கூடியிருக்கிறோம். நான் இங்கு வந்து ஒலிநாடாவில் பதிவு செய்கிறேன். அது... இப்பொழுது அவர்கள்... பாருங்கள், இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுவதை நீங்கள் அந்த அறையில் காணலாம். இப்பொழுது... அவை உலகில் எல்லாவிடங்களுக்கும் செல்கின்றன. 11இப்பொழுது, விரைவில், கர்த்தருக்கு சித்தமானால், இந்த இடத்தை விட்டு நான் சென்றவுடனே... கர்த்தருக்கு சித்தமானால், நான் நாளை அரிசோனாவுக்கு புறப்படுவேன். ஏனெனில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அது தென்பகுதியில் நடக்கும். ஜார்ஜியா, மிஸ்ஸிஸிப்பி, டெக்ஸாஸ், அலபாமா போன்ற தென்பகுதியிலுள்ள இடங்களிலிருந்து வந்துள்ளவர்களே, நாங்கள் விரைவில் பிளாரிடாவுக்கு வருகிறோம். இங்கிருந்து நான் பீனிக்ஸுக்கு செல்கிறேன். அங்கிருந்து கலிபோர்னியாவுக்கு, பின்பு டல்லாஸுக்கு, அதன் பிறகு ஒருக்கால் சான் அன்டோனியாவுக்கு செல்வேன் என்று நினைக்கிறேன், பின்பு அலபாமாவுக்கும், பிளாரிடாவுக்கும். எனவே கர்த்தருக்கு சித்தமானால் அங்கு வசிக்கும் உங்களை நாங்கள் விரைவில் காண்போம். 12நீங்கள் எங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருங்கள், நாங்கள் எப்பொழுது என்று உங்களுக்கு அறிவிப்போம்... வரப்போகும் கோடையில் சில நாட்கள் இங்கு நடத்த வேண்டுமென்று கர்த்தர் எங்கள் இருதயத்தை ஏவினால்... எனக்கு சில கூட்டங்கள் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தன... நியூயார்க்கிலுள்ள உங்களில் அநேகர், ஸ்கான்டினேவியன் நாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று எனக்கு உண்டான தரிசனத்தைக் குறித்து அறிந்திருக்கிறீர்கள்... அவர்கள் அங்கு ஒழுங்கு செய்த கூட்டங்கள் உங்களுக்கு ஞாபகமுள்ளது அல்லவா? நான் நியூயார்க்கில் இருந்த போது, ஏதோ ஒரு காரணத்தினால் அத்தனை கூட்டங்களும் ரத்தாகிவிடுமென்று எனக்கு தரிசனம் உண்டானது. நான் நியூயார்க்கில் இருந்த போது உங்களில் சிலருக்கு அதைக் குறித்து கூறினது எனக்கு நினைவிருக்கிறது. அது அப்படியே சம்பவித்தது. எல்லோருக்கும் ஒரே நாளில் அது வேண்டியதாயிருந்தது. அவர்களுக்கு அந்த கட்டிடம் கிடைக்கவில்லை. எனவே ஜூன் மாதத்தில் எனக்கு சிறிது நேரம் இருக்கும். தாமதமாவதற்கு முன்பு நான் இங்கு வந்து எக்காளங்களைக் குறித்து பிரசங்கிப்பது கர்த்தருடைய சித்தமாயிருக்குமோ என்று எண்ணினேன், பாருங்கள்? எல்லாமே சரியானபடி நடக்கிறது. அது என் இருதயத்தில் இருந்தது. ஒருக்கால் அதை தான் நான் செய்ய வேண்டுமென்று அவர் எண்ணுகிறார் போலும். 13நீங்கள் ஒருவருக்கொருவர் இடம் மாற்றிக் கொள்வதை காண்கிறேன். வெளியிலுள்ள அறைகளில் இருப்பவர்கள். எல்லாரும் உட்கார இடமிருந்தால் நலமாயிருக்கும். நாம் எக்காளங்களைக் குறித்து பிரசங்கிக்கும் போது, உயர் நிலைப்பள்ளி உடற்பயிற்சி அரங்கத்தை எடுக்கலாம் என்றிருக்கிறோம். அதில் ஐந்நூறு பேர்கள் உட்கார்ந்து அமைதியாக கேட்க தருணமிருக்கும்... எக்காளங்கள், அவை மிக, மிக அருமையானவை. நான்... அன்றொரு நாள் அதை நான் பார்த்துக் கொண்டிருந்த போது... பாருங்கள், ஆறாம் முத்திரையில் ஏழு எக்காளங்களும் முழங்குகின்றன (பாருங்கள்?), ஏழாம் முத்திரை திறக்கப்பட்டு கர்த்தருடைய வருகை உண்டாவதற்கு முன்பு. 14இன்றிரவு என்னிடம் முக்கியமான செய்தி ஒன்றுள்ளது. இதை நான் சுகமளிக்கும் ஆராதனைக்கு முன்பு பேச விரும்புகிறேன். நீங்கள் இரவு கூட்டத்துக்கு தங்க விரும்பினால், நாம் சிறிது நேரத்தோடே தொடங்க முயல்வோம். ஏனெனில் ஜெப வரிசை இருக்கும். நான் நீண்ட நேரம் பிரசங்கம் செய்யப் போவதில்லை, ஆனால் சில நாட்களாக சபைக்கு ஒன்றைக் கூற வேண்டுமென்று என் மனதில் இருந்து வருகிறது. இந்த நேரத்தில் காரியங்கள் எவ்விதம் நடந்து வருகின்றன, நாம் எங்கு நின்று கொண்டிருக்கிறோம் என்பது போன்றவைகளைக் குறித்து, எனக்குத் தெரிந்த வரையில் வேதத்திலிருந்து உங்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறேன். நீங்கள் என்னுடன் சேர்ந்து - நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், அல்லது எந்த பாகத்தைப் படிக்கிறோம் என்று எழுதி வைத்துக் கொள்ள விரும்பினால் - ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்துக்கு திருப்புங்கள். நான் ஏசாயா 42ம் அதிகாரத்திலிருந்து ஒரு பாகத்தைப் படிக்க விரும்புகிறேன். 15நம்முடன் சகோதரன் டச் இன்று காலை உட்கார்ந்து கொண்டிருப்பதில் நமக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் வேதாகமத்தை திருப்பிக் கொண்டிருக்கும்போது... உங்களுக்குத் தெரியுமா, அன்றொரு நாள் அவர், இங்கு ஷ்ரீவ்போர்ட்டில் உயிர் வாழமாட்டார் என்று எண்ணினர். அவருக்கு நிச்சயம் விசுவாசம் உள்ளது... ஆம், ஐயா! அதிலிருந்து அவர் வெளியேறினார், கர்த்தர் அவரை ஆசீர்வதித்தார். எனக்கு தெரியாது... பாருங்கள், சகோதரன் டச்க்கு தொண்ணூற்றொன்று வயது, அவருக்கு இருதயத்துடிப்பு நின்று போனது. அதற்கு மேலாக அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டது. சகோதரன் டோ உயிர் வாழ வழி எதுவும் இல்லை என்று கூறின மருத்துவர் இறந்துவிட்டார். சகோதரன் டச் இன்றும் உயிருடன் இருக்கிறார். அவர் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இருதயத் துடிப்பு நின்று போய், மாரடைப்பு ஏற்பட்ட தொண்ணூற்றொன்று வயதுள்ள ஒரு மனிதன். அங்கு நான் சென்று கொண்டிருந்த போது, அவர் தெருவில் நடந்து வருவதையும், சபையில் இருப்பதையும் தரிசனத்தில் கண்டேன். அவர் பிராண வாயு கூடாரத்தில் இருந்த சமயத்தில் நான் அவரிடம், “உங்களுடன் கைகுலுக்குவேன் என்று கர்த்தரின் நாமத்தினால் உரைக்கிறேன்... உங்களை சபையில் மறுபடியும் காண்பேன், உங்களுடன் தெருவில் கைகுலுக்குவேன்” என்றேன். அடுத்த ஆராதனையின் போது, அவர் சபையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். நான் லூயிவில்லுக்கு சென்ற போது 'ப்ளூ போர்' (Blue Boar) உணவு விடுதிக்கு உண்பதற்கு சென்றேன். நான் காரை விட்டு இறங்கி தெருவில் நடந்து சென்றபோது, இதோ சகோதரன் டோ தெருவில் நடந்து வந்தார். அது அங்கு பரிபூரணமாய் நிறைவேறினது. கர்த்தர் அவரை எவ்வளவாக ஆசீர்வதித்திருக்கிறார்! 16இன்றிரவு நாம் சுகம் பெறுதலைக் குறித்து பேசப் போகின்றோம். உங்களிடம் இன்றிரவு கூற அவர்களுக்கு சில தலை சிறந்த காரியங்கள் உள்ளன. இப்பொழுது ஒலிநாடாவில் பதிவு செய்ய அவர்கள் ஆயத்தமாகலாம். நான் ஏசாயா 42ம் அதிகாரம் 1 முதல் 7 வசனங்களையும், மத்தேயு 4ம் அதிகாரம், 15ம், 16ம் வசனங்களையும் படிக்க விரும்புகிறேன். இப்பொழுது நாம் ஏசாயா 42ம் அதிகாரத்திலிருந்து படிக்கப் போகிறோம். இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்து கொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர் மேல் அமரப் பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார். அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப் பண்ணவுமாட்டார். அவர் நெறிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். அவர் நியாயத்தை பூமியிலே நிலைப்படுத்து மட்டும், இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும். வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பின வரும், அதில இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவைகளுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது : நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிற வர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும், கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப் பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன் ஏசாயா 42:1-7 17இப்பொழுது மத்தேயு சுவிசேஷம் 4ம் அதிகாரத் திலிருந்து, ஏசாயா உரைத்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலை வாசிக்க விரும்புகிறேன். மத்தேயு 4ம் அதிகாரத்திலிருந்து வாசிக்கலாம். 15ம் வசனத்துக்குப் பதிலாக 12ம் வசனத்திலிருந்தே தொடங்கலாம் : யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய், நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர் நகூமிலே வந்து வாசம் பண்ணினார். கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே, இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறை வேறும்படி இப்படி நடந்தது. அது முதல் இயேசு, மனந்திரும்புங்கள்: பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். மத்4 : 12 -17 18கர்த்தர் தாமே வாசிக்கப்பட்ட தம்முடைய வார்த்தையுடன் தமது ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. இப்பொழுது வினோதமான ஒரு சிறு பொருள்... யாரோ ஒருவர் பேசிக் கொண்டிருக்கையில், இப்படி கூறினார். அதை என் பொருளாக உபயோகிக்க விரும்புகிறேன்: விளக்கைப் போடக்கூடிய ஒரு மனிதன் இங்கிருக்கிறார். இப்பொழுது வெளிச்சம் என்னும் பொருளின் மேல் நாம் பேசப் போகின்றோம். இது நாம் பேசின மூன்று பொருள்களைத் தொடர்ந்து வருகிறது. அவைகளில் ஒன்று டூசான், இல்லை பீனிக்ஸில், இயேசு ஏன் பெத்லெகேமில் பிறந்தார் என்பதைக் குறித்து அளிக்கப்பட்டது. அது... அவர் அங்குதான் பிறக்க வேண்டும், ஏனெனில் அவர் பெத்லெகேமாயிருக்கிறார். பெத்லெகேம், ''பெத்“ என்றால் ”வீடு“ என்றும், ”ஏல்“ என்றால் ''தேவன்” என்றும் ''ஏகம்'' என்றால் ''அப்பம்'' என்றும் பொருள். தேவனுடைய அப்பத்தின் வீடு கிறிஸ்துவுக்குள் பிறந்த ஒவ்வொரு கிறிஸ்தவனும பெதலெகேமில் - தேவனுடைய அப்பத்தின் வீட்டில் பிறந்தவனாயிருக்கிறான். 19அங்கு நான் தாவீது தன் ஜனங்களால் தள்ளப்பட்டு தப்பியோடி, பெத்லெகேம் முற்றுகையிடப்பட்டதை முன்னடையாளமாக எடுத்துப் பேசினேன். பெலிஸ்தியர் பெத்லெகேமைச் சூழ்ந்து கொண்டு அதை முற்றுகையிட்டனர். தள்ளப்பட்ட தாவீது இன்றைய சபைக்கு முன்னடையாளமாயிருக்கிறான். கிறிஸ்துவுக்கு - கிறிஸ்து இன்றைக்கு தமது சபையால் தள்ளப்பட்டவராயிருக்கிறார். அவர்கள்... 'fugitive' என்னும் ஆங்கிலச் சொல் “ஏற்க மறுத்து தள்ளப்பட்டவன்” என்று பொருள்படும். தாவீதை அவர்கள் ஏற்க மறுத்தனர். இருப்பினும் அவன் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டவன்... தீர்க்கதரிசி அவனை அபிஷேகம் பண்ணினான். அவன் ஜனங்களால் தள்ளப்பட்டு அலைந்து திரிந்த சமயத்தில், அநேக தீரமுள்ள புறஜாதிகளை தன் வசம் சேர்த்துக் கொண்டான். அவர்களில் ஒருவன் ஒரே நாளில் ஈட்டியால்... பட்டயத்தால் எண்ணூறு பேரைக் கொன்றவன். மற்றொருவன் பனி பெய்து கொண்டிருந்த ஒரு நாளில் ஒரு குழியில் குதித்து ஒரு சிங்கத்தைக் கொன்றவன். அவர்கள் வயலில் சிறுபயிற்றை சேகரித்துக் கொண்டிருந்த போது, பெலிஸ்தியரைக் கண்டு ஓடினர். அவன் அங்கு நின்று தன் கை சலித்துப் போகும் மட்டும் பெலிஸ்தியரைக் கொன்றுபோட்டான். அவர்கள் கோலியாத்தின் ராட்சத சகோதரர்களையும் கொன்று போட்டனர். பராக்கிரமசாலிகள் தாவீதின் கூட சேர்ந்து கொண்டனர். ஏனெனில் அவன் அதிகாரத்துக்கு வரப் போகிறான் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். யார் என்ன கூறின போதிலும், தேவன் தாவீதை அபிஷேகம் பண்ணியிருக்கிறார் என்று அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் புறஜாதிகள். அவனுடைய ஜனங்கள் அவனை எவ்வளவாக புறக்கணித்த போதிலும், அவன் அதிகாரத்துக்கு வரப் போகிறான் என்பதை இவர்கள் அறிந்திருந்தனர். ஒரு நாள் அங்கே... 20இன்று தள்ளப்பட்ட கிறிஸ்துவுக்கு அது எத்தகைய முன்னடையாளமாயுள்ளது! நீங்கள் “கிறிஸ்து தள்ளப்பட்டவரா?” எனலாம். வேதத்தின்படி நாம் தேவன் நம்மை ஏழு சபை காலங்களின் வழியாக தீரமாக கொண்டு வந்தார்... ஆனால் இந்த லவோதிக்கேயா சபையின் காலத்தில், கிறிஸ்து புறக்கணிக்கப்பட்டு தள்ளப்பட்டவராய், தமது சபைக்கு வெளியே நின்று கொண்டு, மறுபடியும் உள்ளே வர முயன்று கொண்டிருக்கிறார். பாருங்கள்? அவர் தமது சொந்த சபைக்கு வெளியே தள்ளப்பட்டவராயிருக்கிறார். அவர் வெளியே தள்ளப்பட்டதன் காரணம், அவர் வார்த்தை என்பதனால். அவர்கள் வார்த்தையை உள்ளே விட மறுக்கின்றனர். அதற்கு பதிலாக அவர்கள் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ளனர். நாம் காண்கிறோம், இந்த மகத்தான போராட்டத்தில், அந்த தீரமுள்ள வீரர்கள், புறஜாதிகள், தாவீதின் பக்கத்தில் இருந்து... 21பெத்லெகேம் எப்படி உண்டானது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அந்த பொருளுக்கு இப்பொழுது செல்ல விரும்பவில்லை. ஆனால் பெத்லெகேம் எப்படி... உண்மையில், ராகாப் வேசியின் மகன் தான் பெத்லெகேமை நிறுவினான். அது கோதுமை பயிரிடும் இடமாக இருந்தது. அங்கு நிறைய தண்ணீர் இருந்தது. அந்த சிறு பட்டினத்தை அவன் நிறுவினான். அது எல்லா பட்டினங்களிலும் சிறிய பட்டினம். ஏனெனில் தீர்க்கதரிசி, “அந்த... பெத்லெகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடமிருந்து புறப்படுவார்” என்று தீர்க்கதரிசனம் உரைத்தான். (மீகா 5: 2) அந்த சிறிய பட்டினத்திலிருந்து. தாவீது தன் திடகாத்திரமுள்ள சகோதரரின் மத்தியில் தெரிந்து கொள்ளப்பட்ட போது; அபிஷேகம் பண்ண சாமுவேல் தீர்க்கதரிசி அங்கு சென்ற போது, அங்கு எல்லோரும் திடகாத்திரமுள்ள வீரர்களாய் நின்று கொண்டிருந்தனர். எல்லோருமே காண்பதற்கு ராஜாக்களைப் போல் இருந்தனர். ஆனால் புறக்கணிக்கப்பட்ட அந்த தாவீதின் தலையில் தான் அபிஷேகத் தைலம் ஊற்றப்பட்டது. புறக்கணிக்கப்பட்ட பட்டினத்தில்தான் கிறிஸ்து... கிறிஸ்து எப்பொழுதுமே புறக்கணிக்கப்பட்டதை தெரிந்து கொள்கிறார். (பாருங்கள்), மற்றவர்கள் புறக்கணித்தவைகளை. 22நாம் காண்கிறோம், ஓபேத்துக்குப் பிறகு போவாஸ், வேறொரு புறஜாதி வருவதை - ரூத்தின் வழியாக. அதிலிருந்து ஈசாய், ஈசாயின் மூலம் தாவீது. மலைச்சரிவிலிருந்த ஒரு மாட்டுத் தொழுவத்தில் ராஜாதி ராஜாவாகிய இயேசு கிறிஸ்து, தாவீதின் குமாரன், அவனுடைய ஆவிக்குரிய மகன் தோன்றினார். இப்பொழுது, அப்படியானால் அவர்... தாவீதும் கூட அந்த ஊரில் பிறந்ததனால், அவர் அந்த சிறு இடத்தில் தோன்ற வேண்டியதாயிற்று. அது பெத்லெகேம் என்று அழைக்கப்பட்டது. அதற்கு, ''தேவனுடைய அப்பத்தின் வீடு“ என்று பொருள். அவர் தேவனுடைய அப்பத்தின் வீடு. தாவீது அன்று மலையின் மேல் படுத்துக் கொண்டு கீழே பார்த்தபோது, பெலிஸ்தியர் அப்படி சூழ்ந்து நிற்பதைக் கண்டான். அவன் உஷ்ணமடைந்து, அவனுக்கு தாகம் எடுத்தது. அவன், “ஓ, அந்த கிணற்றிலிருந்து எனக்கு குடிக்க தண்ணீர் கிடைத்தால் என்றான். அவனுடைய எண்ணங்களில் மிகச் சிறியதும் கூட அவனில் அன்பு கூர்ந்தவர்களுக்கு ஒரு கட்டளையாக அமைந்தது. 23அப்படித்தான் இன்றைக்கும், இயேசுவின் கருத்துக்களில் மிகச் சிறியதும் கூட - அவருடைய வார்த்தை - அவரில் அன்புகூரும் புறஜாதியாராகிய நமக்கு கட்டளையாக அமைய வேண்டும். ஏனெனில், அவர் எவ்வளவாக புறக்கணிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அதிகாரத்துக்கு வருவார் என்று நாம் அறிந்திருக்கிறோம். வானமும் பூமியும் ஒழிந்து போம், அவை ஒழிந்த போன பிறகும் இந்த வார்த்தை நிலைநின்று அரசாளும். அவர் அதிகாரத்துக்கு வருவாரென்று நாம் அறிந்திருக்கிறோம். அது நிறைவேறுவதை எதுவுமே தடை செய்ய முடியாது. இந்த வார்த்தை கிறிஸ்து, இது அவரைக் குறித்த வெளிப்பாடு, வார்த்தை என்ன கூறுகிறதோ அதன்படியே நடக்கும், ஏனெனில் அவர் வார்த்தையாயிருக்கிறார். அவருடைய கட்டளைகளில் மிகச் சிறியதும் கூட. அது எவ்வளவு சிறியதாய் இருந்த போதிலும்... அது மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டும், அல்லது வேறெதுவாக இருந்தாலும், அதை நாம் எப்படியும் செய்வோம். அது அவருடைய கட்டளை. 24தாவீதின் மிகச் சிறிய எண்ணம் கூட அந்த புறஜாதியாருக்கு ஒரு கட்டளையாக அமைந்திருந்தது - இன்றைய சபைக்கு அந்த தீரமுள்ள மனிதர் உதாரணமாகத் திகழ்கின்றனர். பாருங்கள்? தாவீதுடன் கூட இருந்த அவர்கள் புறஜாதிகள், தீரமுள்ளவர்கள், அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள். அவர்களுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. அவரிகளில் ஒருவன் பட்டயத்தை எடுத்து தன்னைச் சுற்றிலும் இருந்த எண்ணூறு பேர்களைக் கொன்றுபோட்டான். அவன் எப்படிப்பட்ட மனிதன் பாருங்கள்! வேறொருவன்... ஒரு... வேறொருவன்... ஒரு எகிப்திய போர்வீரன் கையில் நீளமான ஈட்டியுடன் அவனை நோக்கி ஓடிவந்தான். இவன் கையில் ஒரு கோல் மாத்திரம் இருந்தது. இந்தக் கோலினால் அவன் கையிலிருந்த ஈட்டியைக் கீழே தட்டி வீழ்த்தி, அந்த ஈட்டியை எடுத்து அவனைக் குத்திக் கொன்றான். பாருங்கள்? கொல்லப்பட்ட ராட்சதன் ஒருவனுக்கு பதினான்கு அங்குலம் நீளம் விரல்கள் இருந்தன. பதினான்கு அங்குலம்... உங்கள் விரல் மூடப்பட்ட உங்கள் கையின் நீளம் தான் இருக்கும். அதை திறந்து பாருங்கள்; அப்படியானால் இருபத்தெட்டு அங்குலம் நீளமுள்ள கை. அந்த கையில் ஒரு ஈட்டி... அப்படிப்பட்டவன் மேல் அவன் பாய்ந்து அவனைக் கொன்று போட்டான். பாருங்கள்? ஏன்? அவன் தீரமுள்ள புறஜாதியான், அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவனை நோக்கிப் பார்த்து, அவன் அதிகாரத்துக்கு வருவானென்று அறிந்திருந்தான். 25நீங்கள் கவனித்தீர்களா? இவர்கள் தாவீதின் சார்பில் தீரமுள்ளவர்களாக சண்டையிட்டதால், தாவீது அதிகாரத்துக்கு வந்தபோது, இவர்களை பட்டினங்களின் மேல் அதிகாரிகளாக நியமித்தான். இயேசுவும் அதைதான் வாக்குத்தத்தம் செய்தார் அல்லவா? அதையே, அவர்களை அதிபதிகளாக வைத்தல். பிறகு அங்கு, தாவீது புதிய தண்ணீர் குடிக்க விருப்பம் தெரிவித்த போது... ஒருக்கால் அவனிடம் பழைய சூடான, தேங்கின தண்ணீர் இருந்திருக்கும், அவன் அதை குடித்திருப்பான். ஆனால், ''தேவனுடைய அப்பத்தின் வீடாகிய“ பெத்லெகேமிலிருந்த புதிய தண்ணீரைக் குறித்து அவன் சிந்தனை செய்து, ''அந்த கிணற்றிலிருக்கும் தண்ணீர் எனக்குக் குடிக்கக் கிடைத்ததால்...” என்றான். இந்த மனிதர் தங்கள் பட்டயத்தை உருவி, பதினைந்து மைல் தூரம் வரைக்கும் பெலிஸ்தியருடன் சண்டையிட்டு சென்றனர். அவன் அவர்களை அவ்வாறு செய்யச் சொன்னான் என்பதனால் அல்ல, அவன் அந்த தண்ணீரை விரும்பினான் என்று அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் வழிநெடுக பெலிஸ்தியரைக் கொன்று வீழ்த்தி கிணற்றை அடைந்தனர். திரும்பி வரும்போது, அவர்களில் இரண்டு பேர் சண்டையிட்டனர். ஒருவன் வாளியில் தண்ணீரை கையில் பிடித்துக் கொண்டு வந்தான். இப்படியாக அவர்கள் தண்ணீரை தாவீதினிடம் கொண்டு வந்து கொடுத்தனர். தீரமென்றால் அது தான்! தேவனுக்குப் பயந்த தாவீது, “கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய் வந்த இந்த நண்பர்களின் இரத்தத்தைக் குடிக்கும் செயல் எனக்கு தூரமாயிருப்பதாக” (2 சாமு. 23 : 17) என்று சொல்லி அதை தரையில் கர்த்தருக்கு பானபலியாக வார்த்து, “இதை கர்த்தருக்கு கொடுங்கள், அவரே இதற்கு பாத்திரர், நான் அல்ல” என்றான். அவர்கள் தங்கள் ஜீவனை... அவன் கிறிஸ்துவுக்கு இங்கு முன்னடையாளமாகத் திகழ்ந்தான். அவர் தமக்குள் நித்திய ஜீவனைக் கொண்டவராய், அடிக்கப்பட்ட கன்மலையாய், இந்த வார்த்தை ஜீவிக்க வேண்டும் என்னும் காரணத்தால், தமது ஜீவனை நமக்கு பாவநிவாரண பலியாக தரையில் ஊற்றினதற்கு இது முன்னடையாளமாய் உள்ளது. 26ஓ, புறஜாதிகளே, நான் கூறினது போன்று என்னுடன் அந்த பட்டயத்தை உருவ யார் முன்வருவீர்கள்? அவருக்கு இன்று காலை புதிய தண்ணீர் அவசியமாயுள்ளது. தேங்கிக் கிடக்கும் பழைய சபை கோட்பாடுகளும், நாம் விளையாடிக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட காரியங்களும் அல்ல. அவருடைய வார்த்தையில் உண்மையான விசுவாசத்தைக் கொண்டு, ஒவ்வொரு வார்த்தையை விசுவாசிக்கும் விசுவாசமே அவருக்குத் தேவை. நாம் கிணற்றண்டைக்கு சென்று, புத்துணர்ச்சி தரும் தண்ணீரைக் கொண்டு வருவோம். கோட்பாடுகளையும் ஸ்தாபனங்களையும் அடிப்படையாகக் கொண்ட ஆராதனை அல்ல, ஆனால் கிறிஸ்து, அவர் விரும்பும் விதமாகவே, அவருடைய வாழ்க்கையை நமது மத்தியில் வாழும் அப்படிப்பட்ட உண்மையான ஆவியோடு தொழுது கொள்ளும் ஆராதனை. கோட்பாடுகளுடனும் மற்றவைகளுடனும் கூடிய ஆராதனை அல்ல, அவருடைய விருப்பத்துக்கு விட்டுக் கொடுக்கும் ஆராதனை. 27அடுத்தபடியாக, யோசேப்பின் காலத்தில் தேவன் எவ்வாறு ஜனங்களுடன் ஈடுபட்டார் என்று காண்போம். நீங்கள் கவனிப்பீர்களானால், சொப்பனம் என்பது தேவன் கடைபிடிக்கும் இரண்டாவது வழி. தேவன் இரண்டாவது வழியில் கிரியை செய்வதே சொப்பனம் என்பது. சிலர் காணும் சொப்பனங்களுக்கு எந்த அர்த்தமும் இருக்காது. நீங்கள் வயிறு புடைக்கத் தின்று உறங்கச் சென்றால் சொப்பனம் காண வகையுண்டு. சொப்பனம் என்பது தேவன் கிரியை செய்யும் இரண்டாம் வழி மாத்திரமே. பாருங்கள்? தேவன் தம்முடைய குமாரனைக் காப்பாற்ற ஏன் இரண்டாம் வழியைக் கடைபிடிக்க வேண்டும்? அவர் யோசேப்புக்கு சொப்பனத்தில் காணப்பட்டார். தம் பிள்ளையின் நலனுக்காக அவர் இரண்டாம் வழியைக் கையாண்டார் என்பதை எப்பொழுதாவது நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா? ஏனெனில் அக்காலத்தில் தேசத்தில் தீர்க்கதரிசி இல்லை. எனவே அவர் சொப்பனங்களின் மூலம் கிரியை செய்ய வேண்டியதாயிருந்தது. இது அர்த்தம் உரைக்க வேண்டிய சொப்பனமாய் இருக்கவில்லை. கர்த்தருடைய தூதன் யோசேப்புக்கு சொப்பனத்தில் காணப்பட்டு, ''யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது“ என்றான். (மத். 1 : 20). 28அது வழக்கத்துக்கு மாறான ஒரு செயலாக இருந்தது. யோசேப்பு நீதிமானாயிருந்து... அவர் வழக்கத்துக்கு மாறானவர்; தேவன் வழக்கத்துக்கு மாறானவர். வழக்கத்துக்கு மாறான ஒன்றை புரிந்து கொள்வது கடினம். ஆகையால் தான் இன்று சத்தியத்தைப் புரிந்து கொள்வது கடினமாயுள்ளது. அது வழக்கத்துக்கு மிகவும் மாறானதாயுள்ளது. புருஷனை அறியாமலே ஒரு ஸ்திரீக்கு பிள்ளை உண்டாவது வழக்கத்துக்கு மிகவும் மாறானது. ஆனால் நீங்கள் உத்தமமும் நேர்மையுமாய் இருந்தால், தேவன் உங்களுக்கு சொப்பனத்தில் காணப்படுவார். அது எதைக் காண்பிக்கிறது என்றால், நீங்கள் எதைப் பெற்றிருந்தாலும், அது உங்கள் அறிவு; அல்லது உங்களுக்கு விசில் அடிக்க, பாட, சாட்சி கொடுக்க, அப்படி ஏதாவதொன்றை செய்ய நீங்கள் அறிந்திருந்து, உங்களை முழுவதுமாக தேவனிடம் சமர்ப்பித்து, அவர் கிரியை செய்ய விட்டுக் கொடுப்பீர்களானால், தேவன் உங்களுக்கிருக்கும் திறனை உபயோகிப்பார். 29நேற்றிரவு சகோ. நெவில் 'தப்பித்துக் கொள்ளுதல்' என்னும் பொருளின் பேரில் பேசினார். மனிதன் எப்படி தப்பித்துக் கொள்கிறான் என்று. அது குறிப்பிடத் தக்கது என்று நான் எண்ணினேன். இன்று காலையில் பரிசுத்த ஆவியானவர் அதற்கு அடுத்த பொருளாக வெளிச்சம் என்பதன் பேரில் பேசும்படி ஏவுகிறார். அவர் தொடக்கத்துக்கு சென்று, கிறிஸ்துவின் வாழ்க்கை எவ்வாறு மாட்டுத் தொழுவத்தில் தொடங்கினது என்று பேசினார். நாம் இந்த பொருளின் பேரில் பேசும் போது மறுபடியும் அதையே குறிப்பிடுகிறோம். அவருக்கு நான் என்ன பேசப் போகிறேன் என்று தெரியாது, எனக்கும் அவர் என்ன பேசப் போகிறார் என்று தெரியாது. நாங்கள் இருவரும் ஒன்றையே பேசுகிறோம். பாருங்கள்? அடுத்தபடியாக, அவர் ஊழியத்தில் பிரவேசிக்கும் நேரம். இன்றிரவு, கர்த்தருக்கு சித்தமானால், அதனுடன் சம்பந்தப்பட்டதை பேசுவோம். 30இப்பொழுது, பெரிய வெளிச்சம். மரண இருளின் திசையில் இருந்த புறஜாதிகளின் மேல் பெரிய வெளிச்சம் உதித்தது. செபுலோன், நப்தலி நாடுகளிலும், புறஜாதியாருடைய கலிலேயாவிலும் இருந்த ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். நாம் வெளிச்சம் என்பதை முதன் முறையாக வேதாகமத்தில் ஆதியாகமம் 1:3ல் காண்கிறோம். தேவனால் உரைக்கப்பட்ட வார்த்தை அப்பொழுது வெளிச்சத்தை உண்டாக்கினது. ''தேவன் வெளிச்சம் உண்டாக்கக் கடவது“ என்றார். ஆதியாகமம் 1 : 3 - வெளிச்சம் உண்டாயிற்று. ஞாபகம் கொள்ளுங்கள், அப்பொழுது வெளிச்சம் தேவனால் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உண்டாயிற்று. அது, அவர் உரைத்ததை உறுதிப்படுத்தினது. அவர் உரைத்த பொருளே 'வெளிச்சம்' என்பதாம். வெளிச்சம் உண்டான போது, அது எதைக் காண்பித்ததென்றால்... ''வெளிச்சம் உண்டாகக் கடவது“ என்றார். அவர் உரைப்பதற்கு முன் வெளிச்சம் இருக்கவில்லை. அவர் ''வெளிச்சம் உண்டாகக் கடவது” என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. அது ஒரு நிரூபணம். அவருடைய உரைக்கப்பட்ட வார்த்தையின் உறுதிப்படுதலாக வெளிச்சம் இருந்தது. இன்றைக்கும் அது அவ்வாறேயுள்ளது: உரைக்கப்பட்ட வார்த்தையின் உறுதிப்படுதலாக. 31அவருடைய வார்த்தை உறுதிப்படுவதை, அல்லது மற்ற வார்த்தைகள் அறிவிக்கப்பட்டு நிரூபிக்கப்படுவதை நீங்கள் காணும்போது, அது அவருடைய உரைக்கப்பட்ட வார்த்தையின் வெளிச்சமாயுள்ளது. வெளிச்சம் இல்லாமல் எதுவுமே உயிர் வாழ முடியாது. சூரிய வெளிச்சம் இல்லாமல் இன்று பூமியில் எந்த ஜீவனும் இருக்க முடியாது. தாவர ஜீவன் போன்றவை. அவ்வாறே தேவனுடைய குமாரன் இல்லாமல் நித்திய ஜீவன் இருக்கவே முடியாது. பாருங்கள்? அவர் ஒளியாயிருக்கிறார். இப்பொழுது, நாம் காண்கிறோம், இதை நாம் ஆராயும் இந்நேரத்தில் நான் நினைக்கிறேன்... இந்த வெளிச்சம்... பூமியானது ஒழுங்கின்மையாய் இருந்தது. இன்று பள்ளிக்கூடங்களில் அநேகர், உலகம் கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது என்று விவாதித்து, வேதம் தவறென்று அதை குறை கூற முற்படுகின்றனர். அவர்கள் வேதத்தை சரியாக படிக்கவில்லை. அவ்வளவுதான். இந்த உலகம் எவ்வளவு காலமாக இருந்து வருகிறது என்று வேதம் கூறவேயில்லை. அது, “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்று மாத்திரம் கூறுகிறது. (ஒரு கால அளவு!). எப்பொழுது, எப்படி - அதெல்லாம் நமக்குத் தெரியாது. அது ஆதியில், ''அது ஒரு கால அளவு“; அத்துடன் அந்த வேத வாக்கியம் முடிவு பெறுகிறது. 32“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்”. அது பத்து கோடி அல்லது நூறு கோடி ஆண்டுகளோ, அல்லது வேறெந்த கால அளவாகவும் இருக்கலாம். அவர் எப்படி. அதை செய்தார் என்பது அவருக்குத்தான் தெரியும். (பாருங்கள்?) எனக்குத் தெரியாது. ஆனால் உலகம் - பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஜலம் பூமியின் மேல் இருந்தது. தேவன் உரைத்தார் - அவர் ஜலத்தின் மேல் அசைவாடி, ''வெளிச்சம் உண்டாகக்கடவது“ என்றார். சூரியனும் மற்றவைகளும் அப்பொழுது ஏற்கனவே இருந்தன என்று நினைக்கிறேன். நான் நினைக்கிறேன் சந்திரனும் கூட, ஆதியாகமம் 3ம் அதிகாரம் அதை விவரிக்கின்றது... நான் நினைக்கிறேன், என்ன நடந்ததென்றால்... உலகமானது; நாம் அதை உபயோகிக்க வேண்டும்; எனவே... அவை வெளியே வந்தன. பூமியெங்கும் மூடுபனி சூழ்ந்திருந்ததால், அது இருளாயிருந்தது. தேவன் “வெளிச்சம் உண்டாகக் கடவது” என்று உரைத்த போது, இருள் மறைந்து, மேகமற்ற வானம் காணப்பட்டது. 33தேவன் செயல்படும் விதம் அப்படித்தான் என்பது என் கருத்து. அவர்... வேதத்தில், அடுத்த வசனத்தில் - 4ம் வசனத்தில் - ''வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்“ என்று கூறப்பட்டுள்ளது. அவர் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார். தேவனுடைய வார்த்தை எப்பொழுதுமே வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாக பிரிக்கிறது. பாருங்கள்? வார்த்தை தான் அப்படி பிரிக்கிறது. (பாருங்கள்?) இருளிலிருந்து வெளிச்சத்தை. தேவன் எப்பொழுதும் அதையே செய்து வருகிறார். அவர் ஏதாவதொன்றை உபயோகிக்க ஆயத்தமாகும் போது - உதாரணமாக, இந்த நட்சத்திரத்தையோ அல்லது இவ்வுலகிலுள்ள ஏதாவதொன்றையோ அவர் உபயோகிக்க ஆயத்தமாகும்போது - அவர் இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரிக்க வேண்டியவராயிருக்கிறார். அவர் ஒரு கூட்டம் ஜனத்தை உபயோகிக்க ஆயத்தமாகும்போது, அவர் இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரிக்க வேண்டும். அவர் ஒரு தனிப்பட்ட நபரை உபயோகிக்க ஆயத்தமாகும் போது, அவர் இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரிக்கிறார். பாருங்கள்? வெளிச்சம் தேவனால் உண்டானது... ஞாபகம் கொள்ளுங்கள், வெளிச்சம் அவருடைய உரைக்கப்பட்ட வார்த்தையினால் உண்டானது. வெளிச்சம் இல்லாதிருந்த போது, தேவனுடைய வார்த்தை, “வெளிச்சம் உண்டாகக் கடவது” என்று உரைத்தது. அவர் இருளை வெளிச்சத்திலிருந்து பிரிக்க வெளிச்சத்தை அனுப்பினார். அவருடைய வார்த்தையின் கட்டளை ஆகாயத்திலிருந்து மூடுபனியை போக்கி சூரியனை பிரகாசிக்கச் செய்தது. அது போன்று அவருடைய வார்த்தை இன்றைக்கு அவிசுவாசம் என்னும் மூடுபனியை போக்குகிறது. 34நான் பேசிக் கொண்டிருந்தேன்... இன்று காலை நான் பிரசங்க பீடத்துக்கு வருவதற்கு முன்பு எனக்கு பதினொன்று பேட்டிகள் இருந்தன என்று நினைக்கிறேன். மிகவும் மோசமாக... அன்றொரு நாள், என் நண்பர் ஜிம் பூலின் மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அவர்கள் எண்ணி, அச்சிறுவனை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அது ஆஸ்துமா, அது அந்த சிறுவனை... அவனால் முடியவில்லை... அவனுடைய சிறு இருதயம் துள்ளினது, அவனுக்கு மூச்சுத் திணறி, கூச்சலிடத் தொடங்கினான். அந்த சிறுவன் மரித்துவிடுவான் போல் தோன்றினது. அவர் அவனை இங்கு கொண்டு வந்தபோது... நான் மருத்துவமனைக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர்கள் அவனை இங்கு கொண்டு வந்தனர். நான் அந்த சிறுவனின் கையைப் பிடித்து, இந்த சிறுவன் விளையாட்டு அம்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறான். ஆகையால் தான் இப்படி நடந்தது. விளையாட்டு அம்மையின் காரணமாக அவனுக்கு ஜுரம் உண்டாயிருக்கிறது. அவனை கவனித்து வாருங்கள். இன்னும் இரண்டு நாட்களில் அவனை மறுபடியும் காண விரும்புகிறேன். அவன், ''விளையாட்டு அம்மையினால் அப்பொழுது நிறைந்திருப்பான்“ என்றேன். இதோ அவனை விளையாட்டு அம்மை முழுவதுமாக பாதித்துள்ளது. பார்த்தீர்களா? பாருங்கள்? 35இப்பொழுது, என்ன... தேவன் இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரிக்கிறார். அவர் மரணத்திலிருந்து ஜீவனைப் பிரிக்கிறார். அவர் அதை தமது வார்த்தையினால் செய்கிறார். அவருடைய வார்த்தை தான் அதை எப்பொழுதும் செய்கிறது. வெளிச்சம்... விதை ஏற்கனவே பூமியில் இருந்தது. தேவன் ஏற்கனவே விதையை விதைத்திருந்தார் என்று நான் நம்புகிறேன். சூரிய வெளிச்சம் அந்த விதையை அடைந்தபோது அது வளரத் தொடங்கினது. ஆகையால் தான் இவை சில நாட்களில் தோன்றின. ஏனெனில் விதை ஏற்கனவே பூமியில் இருந்தது. அதற்கு தேவையானதெல்லாம் வெளிச்சமே. இன்றைக்கும் தேவன் அதே வழிமுறைகளை கடைபிடிக்கிறார். அவருடைய விதை - அவருடைய வார்த்தை - இங்கு ஏற்கனவே உள்ளது. அதற்கு தேவையான ஒன்றே ஒன்று வெளிச்சம் மாத்திரமே - அவரே அந்த வெளிச்சம், அவரே அந்த வார்த்தை. வார்த்தையும் வெளிச்சமும் ஒன்றே. அதிலுள்ள ஜீவன் வார்த்தையின் வெளிச்சமே, (பாருங்கள்?) - அந்த ஜீவன். ஜீவக் கிருமி தானியத்துக்குள் இருக்கிறது. அந்த தானியம் - ஜீவன் அந்த தானியத்திலிருந்து புறப்பட்டு வெளிவருகிறது. அந்த விதமாகத்தான் வார்த்தையிலுள்ள கிறிஸ்து, வார்த்தை என்ன செய்ய வேண்டுமோ, அது செய்யும்படி செய்கிறார் - கோதுமைமணி அல்லது வேறெந்த தானியத்திலுள்ள ஜீவன், கோதுமைமணி என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்யும்படி செய்வது போல. ஏனெனில் அது அதற்குள் இருக்கும் ஜீவன். எல்லா ஜீவனும்... 36எனவே தேவனுடைய வார்த்தை வெளிப்படுவதன் மூலமே ஜீவன் உண்டாகிறது. தேவனுடைய வார்த்தை வெளிப்படுவதன் மூலமே ஜீவன் உண்டாகிறது. அது வேதாகமத்தில் இப்படி உள்ள வரைக்கும், அநேக கேள்விகள் அதைக் குறித்து கேட்கப்படக் கூடும். ஆனால் அது வெளிப்படும்போது, அது என்ன... உரைத்துள்ள வார்த்தையின் மேலுள்ள வெளிச்சம். பாருங்கள்? அதுதான் பலனை... வார்த்தை அப்படி உரைத்துள்ளது. அது நிறைவேறும்போது, அது தான் வெளிச்சத்திலுள்ள ஜீவன், அந்த வெளிச்சம் ஜீவனைக் கொண்டு வருகிறது. வெளிச்சம் ஜீவனைக் கொண்டு வருகிறது. இங்கு கோதுமையை விதைத்துப் பாருங்கள், அதை நீங்கள் அடித்தளத்தில் போட்டு, அதன் மேல் எல்லாவற்றைக் கொண்டு மூடினால், அது எந்த பலனும் தராது, அதனால் தர முடியாது ஏனெனில் அங்கு வெளிச்சமே இல்லை. ஆனால் வெளிச்சம் அதன் மேல்பட்ட மாத்திரத்தில், அது ஜீவனுள்ள விதையாயிருக்குமானால், அது ஜீவனைப் பிறப்பிக்கும். வார்த்தையைக் குறித்த விஷயத்திலும் அப்படித்தான். பாருங்கள், வார்த்தை என்பது தேவன், ஜீவன் அதன் மேல் படும்போது இல்லை, வெளிச்சம் அதன் மேல் படும்போது, அது வார்த்தையை மறுபடியும் உயிர்பெறச் செய்கிறது. ஒவ்வொரு காலத்திலும் அவ்வாறே நடந்து வருகிறது. ஓ, இந்த மகத்தான காரியங்களை நாம் எவ்வளவாக பாராட்டுகிறோம். எப்படி உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தை உரைக்கப்பட்ட வார்த்தையின் வெளிச்சமாக உள்ளது என்பதை. பாருங்கள்? தேவன் “வெளிச்சம் உண்டாகக் கடவது” என்றார். 37அவர் அதை உரைத்து வெளிச்சம் உண்டாகாமல் போயிருந்தால்? அது உண்மையா இல்லையாவென்று நம்மால் அறிந்திருக்க முடியாது. அவர் ''வெளிச்சம் உண்டாகக் கடவது“ என்று உரைத்து, வெளிச்சம் உண்டாகாமல் போயிருந்தால், அவர் தேவன் தானா, இல்லையா என்று நாம் அறிந்திருக்க முடியாது. பாருங்கள்? ஆனால் தேவன் அதை உரைத்து அது நிறைவேறுவதை நாம் கண்கூடாகக் கண்டு, வெளிச்சம் பிரகாசிக்கும் போது, அதுவே வார்த்தை சத்தியம் என்பதை நிரூபிக்கிறது. பாருங்கள்? அங்கு வெளிச்சமும் ஜீவனும் உள்ளது. இயற்கை ஜீவன் அனைத்தும் அவருடைய உரைக்கப்பட்ட வார்த்தையினால் உண்டானது. சூரியன் அவருடைய உரைக்கப்பட்ட வார்த்தையின் விளைவே. அவர் பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் உண்டாக்கினதாக வேதம் கூறுகிறது. (ஆதி. 1 : 16). பாருங்கள்? இயற்கை ஜீவன் அனைத்தும் தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையினால் உண்டானவை. தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையினால் உண்டான வெளிச்சம் இல்லாமல் ஒரு பூ வளர முடியாது. தேவன், ''வெளிச்சம் உண்டாகக் கடவது“ என்று உரைத்தபோது, அந்த உரைக்கப்பட்ட வார்த்தையினால் உண்டானது தான் சூரியன். (SUN) பாருங்கள்? அது தேவனால் உரைக்கப்பட்டு உண்டானது. ஜனங்கள் எவ்வளவுதான் இது அது, மற்றது என்று கூறினாலும், அது அப்படியே இருந்து வருகிறது. அதற்கு சூரியன் அவசியம். எனவே இயற்கை ஜீவன் அனைத்தும் தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையின் மூலமாகவே தோன்ற வேண்டும். 38ஆவிக்குரிய ஜீவன், நித்திய ஜீவன், தேவனால் உரைக்கப்பட்ட வார்த்தையின் ஜீவனைக் கொண்டு மாத்திரமே உண்டாக முடியும். இந்த முறை ஜீவன் குமாரனிடத்திலிருந்து (Son) வருகிறது. அவருக்குள் ஒளி இருந்தது. அவரில் எவ்வளவேனும் இருளில்லை; அவர் தேவனால் உரைக்கப்பட்ட ஒளியாயிருக்கிறார். (அது சரியா?) தேவனால் உரைக்கப்பட்ட வார்த்தை. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அது என்றென்றைக்கும் தேவனாயிருக்கும். பாருங்கள்? வார்த்தையை உயிர் பெறச் செய்ய, தேவனுடைய வெளிச்சம் அதன் மேல் பட வேண்டும். அவர் இதை தான் உரைத்தார். இப்பொழுது வெளிச்சம் பிரகாசிக்கக் கடவது என்று (ஆமென்!) - வெளிச்சம் பிரகாசிக்கக் கடவது. அந்த வெளிச்சம் ஒவ்வொரு வார்த்தையையும் அதனதன் காலத்தில் அதன் சரியான இடத்துக்கு கொண்டு வரும். ஆமென்! பாருங்கள், சில சமயங்களில் அந்த தானியம் பூமிக்கடியில் குளிர் காலம் பூராவும் புதைந்து கிடக்கும். குளிர் காலத்தின் போது நிலத்தில் விதைக்கப்பட்ட விதை. ஆனால் சூரிய வெளிச்சம் தோன்றும்போது, ஓ, அது உயிர் பெற வேண்டும். பாருங்கள்? சூரியன் இல்லாமல் அது உயிர் வாழ முடியாது. தேவன் ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு நாளுக்கும் வாக்குத்தத்தம் அளித்துள்ளார். வெளிச்சம் சரியாக அதன் மேல் பிரகாசிக்கும் போது, வார்த்தை என்ன கூறியுள்ளதோ, அதை அது பிறப்பிக்கும். ஏனெனில் அவரே வெளிச்சமும் ஜீவனுமாயிருக்கிறார். 39தேவனுடைய வார்த்தை வேதாகமத்திலிருந்து மாத்திரமே கிடைக்கிறது. தேவனுடைய வேதாகமம் அச்சு வடிவில் தேவனுடைய குமாரன். ஏனெனில் வேதாகமம் இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துவதாக அது கூறுகிறது. அது தேவன் தம்மை கிறிஸ்துவின் மூலம் வெளிப்படுத்துதல்; கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார். இந்த வார்த்தை உறுதிப்படுத்தப்பட்டு, தேவன் இப்பொழுதும் நித்திய ஜீவனை அளிக்கிறவராயிருக்கிறார் என்பது நிரூபிக்கப்பட வேண்டுமானால், அந்த வார்த்தையின் மேல் தேவனுடைய வெளிச்சம் பட வேண்டியது அவசியமாயுள்ளது. இயற்கை வெளிச்சம் ஜீவனைப் பிறப்பிக்கிறது. ஜீவன் வெளிச்சம் மூலமே வருகிறது. வார்த்தை வெளிப்படுவது அல்லது மாம்சமாவதன் மூலம்... வேதத்திலுள்ள வாக்குத்தத்தம் அனைத்தும் நிறைவேறி வெளிப்பட்ட போது, வார்த்தையாகிய இயேசு நமது மத்தியில் மாம்சமானார். தேவன் எப்பொழுதுமே மனிதர்களின் மூலம் கிரியை செய்கிறார். மனிதர் தேவனின் பிரஜைகள். இங்கு உங்களுக்கு அதிக உஷ்ணமாயிருந்தால், ஜன்னல்களை இறக்கிக் கொள்ளுங்கள்,அல்லது உஷ்ணத்தை குறைத்துக் கொள்ளுங்கள், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். கட்டிடம் காப்போர் உஷ்ணத்தை சிறிது குறைத்து தருவார். உங்களில் அநேகருக்கு உஷ்ணமாயிருக்கிறதென்று காண்கிறேன். இந்த இடத்தில் நின்று கொண்டிருப்பதும் கூட உஷ்ணமாய் உள்ளது. எனவே ஞாபகம் கொள்ளுங்கள்... குளிராயுள்ளதைக் காட்டிலும் உஷ்ணமாயிருப்பதால் மகிழ்வுறுகிறேன். ஏனெனில் எனக்கு உஷ்ணம் பிடிக்கும்... உஷ்ணம் எப்பொழுதுமே வெளிச்சம் - ஜீவனைக் கொண்டு வருகிறது. அதற்கு நெருப்பு... 40கவனியுங்கள்! மாம்சமாதல், வார்த்தை மாம்சமாயிருக்கும் போது. அது வெளிப்படுகிறது. உதாரணமாக நீங்கள் வார்த்தையை எடுத்து அதை சரியான இடத்தில், சரியான நிலத்தில் வைத்தால், அந்த விதை அதன் ஜாதியை பிறப்பிக்கும். வார்த்தை சரியான இருதயத்தில் வைக்கப்பட்டால், அது தன்னை வெளிப்படுத்தும். அது வெளிச்சத்தை கொண்டு வரும். சரி. இயற்கையான அல்லது ஆவிக்குரிய எதுவுமே தேவனுடைய வெளிச்சம் இல்லாமல் உயிர் வாழ முடியாது. அப்படியானால் வெளிச்சம் மூலமாகவே ஜீவன் வரமுடியும். இயற்கையான அல்லது ஆவிக்குரிய எதுவுமே தேவனுடைய வெளிச்சம் இல்லாமல் உயிர் வாழ முடியாது. அதை யோசித்துப் பாருங்கள். சரி. ஆனால் அவர் நமக்கு வெளிச்சத்தை அனுப்பி (பாருங்கள்?) இவையெல்லாவற்றையும் செய்து, அதன் பிறகு அதை நாம் புறக்கணிப்போமானால்... வெளிச்சம் நம்மிடத்தில் அனுப்பப்படும் போது அதை நாம் புறக்கணிப்பதென்பது மிகவும் பரிதபிக்கப்படத்தக்க செயல். 41இன்றைக்கு யாராகிலும் ஒரு மனிதன், ''சூரியன் உள்ளதை நான் மறுக்கிறேன். சூரியன் உண்டு என்று நான் நம்பமாட்டேன்“ என்று கூறுவான் என்று உங்களால் எண்ணிப் பார்க்க முடிகிறதா? அவன் அடித்தளத்துக்கு ஓடிச் சென்று. கதவுகளை அடைத்துக் கொண்டு, இருளில் உட்கார்ந்து கொண்டு, ”சூரியன் என்று ஒன்று கிடையாது. வெளிச்சம் என்பது கிடையாது“ என்பானாகில், அவனுக்கு மூளை கோளாறு ஏற்பட்டுள்ளதென்று நீங்கள் உடனே கண்டு கொள்வீர்கள். பாருங்கள்? அவன் அடித்தளத்துக்கு ஓடிச் சென்று தேவனால் அளிக்கப்பட்ட வெளிச்சத்தின் நற்பலனை அனுபவிக்க மறுத்தால் அவனில் ஏதோ தவறுள்ளது. அவனுக்கு வெப்பக் கதிர்கள் பிடிக்கவில்லை. அது அளிக்கும் ஆரோக்கியத்தைப் பெற அவனுக்கு விருப்பமில்லை. அதன் வெளிச்சத்தில் நடக்க அவனுக்குப் பிரியமில்லை. அவன் அதைக் காட்டிலும் இருளில் உட்கார்ந்திருப்பான். அப்படியானால் அவனுக்கு மூளையில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது என்று தெளிவாகிறது. 42இதை நான் மிக்க அன்புடனும் மரியாதையுடனும் கூறுகிறேன்: வேத வெளிச்சம் அவனுக்கு முன்பாக பிரகாசிக்கும்போது அதை காண மறுத்து, தன் ஸ்தாபனங்களின் கோட்பாடுகளுக்கு ஓடிச் செல்லும் மனிதனும் அவ்வாறே இருக்கிறான். அவனில் ஏதோ தவறுள்ளது. அவன் தன் கோட்பாடுகளுக்கு ஓடிச் சென்று கதவை அடைத்துக் கொண்டு, “அப்படி எதுவுமில்லை. அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. தெய்வீக சுகமளித்தல் என்று ஒன்று கிடையாது. அப்படிப்பட்ட எதுவுமே கிடையாது. அது அப்போஸ்தலர்களுக்கு மாத்திரமே” என்கிறான். அவன் ஆவிக்குரிய விதமாக பைத்தியம் பிடித்தவனாயிருக்கிறான். பாருங்கள்? அவனில் ஏதோ தவறுள்ளது. அவன் திரையை கீழே இழுத்துவிட்டு, அவன் மேல் வரக்கூடிய பரிசுத்த ஆவியைப் புறக்கணித்துவிட்டான். அவரால் கூடுமானால்... “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் (வெளிச்சம் இந்த வார்த்தையின் மேல் பிரகாசிக்கும் போது), நீங்கள் எதை வேண்டுமானாலும் கேளுங்கள். பாருங்கள், பாருங்கள்? 43நாம் பிழைப்பதற்கென தேவன் நமக்கு அளித்துள்ள இந்த வார்த்தையை ஒருவன் புறக்கணிப்பானானால், அவனில் ஏதோ தவறுள்ளது. “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான். மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்'' வார்த்தையின் ஒரு பாகத்தினால் அல்ல. ஒரு மனிதன் அதைப் புறக்கணிப்பானானால், ஏதோ தவறுள்ளது; அவன் தேவனை நேசிப்பதாக உரிமை கோரி, அதன் பிறகு அவரைப் புறக்கணிக்கும் அந்த அனுபவத்தில் ஏதோ தவறுள்ளது. அந்த மனிதனில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது. அதை நாம் சிறிதும் சந்தேகமுமின்றி அறிந்து கொள்ளலாம். அவன் அதை புறக்கணித்துவிட்டு, ''அதைக் குறித்து நான் ஒன்றையும் அறிய விரும்பவில்லை. அதை நான் விசுவாசிக்கவே மாட்டேன். நீங்கள்... நீங்கள் என்ன கூறினாலும்...” என்கிறான். 44அண்மையில் ஒருவர் என்னிடம் கூறினதை நான் உங்களிடம் கூறியிருக்கிறேன். அவர், “புற்று நோயால் பீடிக்கப்பட்டவர் ஐம்பது பேர்களை நீர் குணமாக்கி, அதை சாட்சியாக உரைக்க ஐம்பது மருத்துவர்களை நீர் கொண்டு வந்து நிறுத்தினாலும் எனக்குக் கவலையில்லை. அதை நான் நம்பமாட்டேன். என் கண் முன்னே மரித்தோரை நீர் உயிரோடெழுப்பினாலும் நான் நம்பமாட்டேன்” என்றார். பாருங்கள், அந்த நபரில் ஏதோ கோளாறு உள்ளது. அது - அது - அது... அந்த மனிதன் ஒரு போதகர் (பாருங்கள், பாருங்கள்?) போதகர் என்று கருதப்படுபவர். அந்த ஸ்தாபனத்துக்கு தேவனுடைய வல்லமையின் மேல் நம்பிக்கையில்லாமல், வார்த்தை என்ன கூறுகிறதோ அதை விசுவாசிக்காததன் காரணத்தால், இந்த மனிதன் ஸ்தாபனம் என்னும் அந்த அசுத்தமான அடித்தளத்துக்கு சென்று, நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்து அளிக்கும் பரிசுத்த ஆவியின் வெப்பமான உயிரளிக்கும் கதிர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அப்படியானால் அந்த நபரில் ஏதோ கோளாறு உள்ளது. பாருங்கள்? இவர் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதாகமம் போதிக்கும் தேவனுடைய வெளிச்சத்தில் வாழ்வதைக் காட்டிலும் இருளடைந்த அந்த அடித்தளத்தில் வாழ பிரியம் கொள்கிறார். “நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியால், நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வீர்கள்” (யோவான் 14 : 12). அந்த மனிதனில் ஏதோ கோளாறு உள்ளது. அதைக் குறித்து எவ்வித சந்தேகமுமில்லை. 45உலகமெங்கும் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களே, நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் தேவனில் அன்பு கூருவதாகக் கூறி அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ள மறுப்பீர்களானால், உங்கள் அனுபவத்தில் ஏதோ தவறுண்டு. அங்கு ஏதோ... நீங்கள் அதை மறுக்கிறீர்கள்... சபை இந்நிலையில் இருந்துகொண்டு, தேவன் வாக்குத்தத்தம் பண்ணினவை அதில் நிகழாததைக் குறித்து வியப்பொன்றுமில்லை. ஏனெனில் நீங்கள் வார்த்தையை ஏற்றுக் கொண்டு அதன் வெளிச்சத்தில் நடக்க மறுக்கிறீர்கள். வேதாகமம், ''அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடப்போம்; அப்பொழுது தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்“ என்றுரைக்கிறது (1 யோவான் 1:7). பாவம் என்பது அவிசுவாசம். இக்காலத்திற்கென தேவன் அளித்துள்ள வெளிச்சத்தில் நாம் நடப்போமானால், தேவன் இக்காலத்திற்கென அளிக்கப்பட்ட வார்த்தையை எடுத்து, அவர் ஆதியாகமம் 1: 3ல் செய்தது போல், அதை உறுதிப்படுத்துகிறார். அவர் வெளிச்சம் உண்டாகக் கடவது என்ற போது, வெளிச்சம் உண்டாயிற்று. அவருடைய வார்த்தை புறப்பட்டு சென்றது, வெளிச்சம் அதை பின்தொடர்ந்து உண்டானது. அது மூடு பனியை நீக்கினது. இருள் ஒரு மூலைக்கு சென்றுவிட்டது. வெளிச்சம் மறுபுறத்தில் பிரகாசித்தது. இன்றைக்கும் தேவன் அப்படித்தான் செய்கிறார். அவர் இக்காலத்துக்கான வார்த்தையை அனுப்புகிறார். பரிசுத்த ஆவி வந்து அந்த வார்த்தை உயிர் பெறச் செய்கிறது. இருள் ஸ்தாபனங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் சென்றுவிடுகிறது, வெளிச்சம் பிரகாசிக்கிறது. ஏனெனில் அவருடைய வார்த்தை உண்மையென்று தேவனுடைய வார்த்தை உறுதிப்படுத்துகின்றது. இதில் கட்டுக் கதை எதுவுமில்லை, இது முற்றிலும் வேதபூர்வமானது. சரி. 46இப்பொழுது நாம் காண்கிறோம். பழைய காலத்து சாஸ்திரிகள் தேவனால் அளிக்கப்பட்டதை பின்பற்றினர். அவர்கள் தேவனுடைய வார்த்தையை அதன் வெளிச்சத்தில் பின்பற்றினர். அந்த வார்த்தை தான் ஜீவனைக் கொண்டு வந்தது. ''அவர்கள் எப்படி பின்பற்றினர்?“ என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் சாஸ்திரிகள் என்று நாம் அறிகிறோம். அதன் பிறகு நாம் காண்கிறோம், தீர்க்கதரிசியாகிய பிலேயாம் எண்ணாகமம் 24:17ல் அவனும் ஒரு விதமான ஞானியே. அவன் ஒரு தீர்க்கதரிசி, உண்மையாக. யாக்கோபில் ஒரு நட்சத்திரம் உதிக்கும் என்று தேவனுடைய வார்த்தை உரைத்ததை இந்த சாஸ்திரிகள் கண்டபோது, அவர்கள் தேவனால் அளிக்கப்பட்ட அந்த சிறு அடையாளத்தை பின் தொடர்ந்து நித்திய வெளிச்சத்துக்கு மூலாதாரமாக விளங்கின இடத்தை அடைந்தனர். அப்படியே இன்றைய ஞானிகளும் கோட்பாடுகளினால் குருடாக்கப்படாமல், தேவனால் அளிக்கப்பட்ட உரைக்கப்பட்ட வார்த்தையை பின் தொடர்ந்தால், இந்நேரத்தில் தேவனுடைய வல்லமை முழுமையாக மலர்வதைக் காண்பார்கள். பாருங்கள்? அவர்கள் அதைக் கண்டு, அது வேதத்தில் உள்ளதென்றும் தேவன் அதை இந்நாளுக்கென வாக்களித்துள்ளார் என்பதையும் அறிந்து கொள்வார்கள். 47எத்தனை வான்நிலை ஆராய்ச்சி நிலையங்களும் மற்றவைகளும் ஞானிகளிடம், “நீங்கள் புத்தி சுவாதீனத்தை இழந்துவிட்டீர்கள்” என்று கூறின போதிலும்... அவர்கள் இரண்டு ஆண்டுகள் பிரயாணம் செய்தனர். அவர்கள் அநேக நாடுகளைக் கடந்து சென்றனர். அந்நாடுகளிலுள்ளவர்கள், “நீங்கள் எங்கே போகிறீர்கள்” என்று சாஸ்திரிகளைக் கேட்டனர். “ஓ, கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்திருக்கிறோம். அவர்கள் ஸ்தாபனங்களின் தலைமை அலுவலகமாகிய எருசலேமை அடைந்தபோது, அவர்களுக்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. அவர்கள் தெருக்களில் இங்கும் அங்கும் சென்று, ”யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?“ என்று கேட்டனர். அங்கிருந்தவர்களுக்கு அதைக் குறித்து ஒன்றும் தெரியவில்லை. எனவே அவர்கள் அதை கண்டுபிடிக்க வார்த்தையை புரட்டிப் பார்த்தனர். சாஸ்திரிகள் அந்த நட்சத்திரத்தைப் பின் தொடர்ந்தனர். அது அவர்களை நித்திய ஒளிக்கு நடத்திச் செல்கிறது என்பதை அறிந்திருந்தனர். ”எங்களை அந்த பரிபூரண ஒளிக்கு நடத்திச் செல்லும், வார்த்தை தான் உங்களை அந்த ஒளிக்கு நடத்திச் செல்கிறது'', அந்த ஒளிதான் வார்த்தையை உறுதிப்படுத்துகிறது. ஆமென். கவனியுங்கள், அவர்கள் ஞானிகள். 48இன்றைய ஞானிகள், ஞானமில்லாதவர்களாய்... ''இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது'' (I கொரி. 3 : 19). விஞ்ஞானிகளாகிய நீங்கள் அனைவரும்; மிகுந்த அறிவின் மேல் சார்ந்திருந்து அணுவை எப்படி பிளப்பது என்று சொல்லிக் கொடுக்கிற நீங்கள் அனைவரும்; அது உங்களுக்கு ஜீவனைக் கொடுக்க முடியாது. தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையைத் தவிர வேறெதுவுமே உங்களுக்கு ஜீவனைக் கொடுக்க முடியாது. ஜீவன் வரக் கூடிய ஒரே வழி அவருடைய உரைக்கப்பட்ட வார்த்தையின் மூலமே. ஒரு அணுவை எப்படி பிளப்பது என்று அறிந்திருப்பதினால் பரவாயில்லை. அவர்கள் அதை அறியாமலிருந்தால் நலமாயிருக்கும். ஆனால் அவர்கள்... அவர்கள் அதை செய்ய வேண்டியதாயுள்ளது. ஏனெனில் இந்த உலகம் இன்று தொங்கிக் கொண்டிருக்கிறது... அவர்கள் பூமியிலே பெரிய துளைகளை உண்டாக்கி, பாறைக் குழம்பு மேலே வரும்படி செய்து, இவ்வுலகிற்கு புத்துணர்ச்சி அளித்து அதை புது பூமியாக்குவதற்கென அது அப்படி நடக்க வேண்டியதாயுள்ளது. அங்கு நீதிமான்கள் துன்மார்க்கரின் சாம்பலை மிதிப்பார்கள். அங்கு பாவம் என்பது மறக்கப்பட்டிருக்கும். ஒவ்வொன்றுக்கும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள ஒரு வழியுண்டு. இவ்வுலகில் மனிதன், ஜீவ விருட்சத்தில் பங்கு கொண்டு வாழ்வதற்கு பதிலாக அறிவு விருட்சத்தில் பங்கு கொண்டு வாழ்ந்து, தன் சொந்த ஞானத்தைக் கொண்டு, அவன் வாழ்வதற்கென்று தேவன் அளித்துள்ள பூமியை நிர்மூலமாக்கிவிடுவான். ஆனால் ஜீவ விருட்சத்தில் இன்னும் பங்கு கொள்பவர்கள் புதிய வானத்தையும் புதிய பூமியையும் அடைவார்கள். அங்கு வியாதியோ மரணமோ இருக்காது. வெளிச்சம், வெளிச்சம்! கர்த்தாவே, எங்களுக்கு வெளிச்சத்தை அனுப்பும். 49மேய்ப்பர்களை நித்திய வெளிச்சத்துக்கு வழிநடத்த தேவ தூதர்கள் மலையின் மேல் வெளிச்சம் பிரகாசிக்கச் செய்தனர். பாருங்கள், அது வெளிச்சத்தின் மூலமாகவே வருகிறது. ஜீவன் வெளிச்சத்தின் மூலமாகவே வரமுடியும். மேய்ப்பர்கள் அறிந்து கொள்ள விரும்பினர்... உங்களுக்குத் தெரியுமா, ஒரு ராஜா பிறக்கும்போது, அவர்கள் அக மகிழந்து பாடல்கள் பாடுவது வழக்கம். அவர் இரகசியமாக மாட்டுத் தொழுவத்தில் மாடுகளும் குதிரைகளும் தீவனம் உண்ணும் இடத்தில் பிறந்தார். இருந்தபோதிலும் அவர் ராஜாவே. தேவதூதர்கள் இறங்கி வந்து, மேய்ப்பர்களைச் சுற்றிலும் வெளிச்சம் பிரகாசிக்கச் செய்து, பாடல்களைப் பாடினர். தேவ தூதர்களே வெளிச்சமாக தேவனுடைய வார்த்தையுடன் கூட பிரகாசித்தனர். அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு வந்து, “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊராகிய பெத்லகேமிலே பிறந்திருக்கிறார்” என்றனர். தேவதூதர்கள் தேவனுடைய வார்த்தையைக் கொண்டிருந்தனர். வழிநடத்துவதற்கென வார்த்தை வெளிச்சத்துடன் வந்தது. மேய்ப்பர்கள் தேவதூதர்களின் வார்த்தையைப் பின்பற்றி நித்திய வெளிச்சத்தை அடைந்தனர். அங்கு தேவதூதர்கள் கூறிய வண்ணமாகவே பிள்ளையைத் துணிகளில் சுற்றி முன்னணையில் கிடத்தியிருக்கக் கண்டார்கள். பாருங்கள், ஜீவன் வெளிச்சத்தின் மூலமாக மாத்திரமே வருகிறது. 50கவனியுங்கள், அவர் வார்த்தை வெளிச்சமாக ஆனவர். வார்த்தை... அந்த சந்ததிக்கு அவர் வார்த்தை வெளிச்சமாகத் திகழ்ந்தார். ஏனெனில் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் அவரைக் குறித்து முன்னுரைத்தனர். இதோ அவர் தோன்றி, ''அவர் தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையின் வெளிச்சம் என்பதை உறுதிப்படுத்தினார். பாருங்கள்? தீர்க்கதரிசிகள் அவரைக் குறித்து முன்னுரைத்தவை அனைத்தும் அவரில் நிறைவேறினது. பாருங்கள்? தீர்க்கதரிசிகள் வார்த்தையைக் கொண்டவர்களாய் - ஆதியில் தேவன் வெளிச்சம் உண்டாகக் கடவது“ என்றுரைத்து வெளிச்சம் உண்டானது போல, தீர்க்கதரிசி, ”ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்“ என்று முன்னுரைத்தான். அவர்கள் அதை முன்னுரைத்தனர். வார்த்தை புறப்பட்டுச் சென்றது. அவர் வெளிச்சமாயிருந்தார். அவர் யார்? அவர் அதன் நிறைவேறுதல். அல்லேலூயா! அவர் அந்த வார்த்தையின் நிறைவேறுதலாக இருந்தார். அவர் அந்த வார்த்தையின் வெளிப்படுதலாக இருந்தார். இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது. இந்நேரத்தில் தேவனுடைய வார்த்தை நிறைவேறிவிட்டது. அதுதான் வெளிச்சம். அது தேவன் தம்மை வெளிப்படுத்துதல், அவரே உலகத்திற்கு ஒளி. 51தீர்க்கதரிசிகள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு, “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். அவர் நாமம் ஆலோசனைக் கர்த்தா, சமாதானப் பிரபு , வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா என்னப்படும்” என்று முன்னுரைத்தனர். இதோ அவர். அவர் யார்? அந்த வார்த்தையை நிறைவேற்றின ஒளி. (ஆமென்!). அந்த வார்த்தையை நிறைவேற்றின ஒளி. மத்தேயு - பரி. மத்தேயு 28ம் அதிகாரத்தில் நாம் காண்கிறோம், இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தபோது, அவருடைய ஆத்துமாவை பாதாளத்தில் விடேன்; என் பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டேன்'' என்று தாவீதினால் உரைக்கப்பட்ட வார்த்தையின் ஒளியாகத் திகழ்ந்தார். மரணம் இருளில் இருந்தது. அவர் மரணத்தின் முத்திரைகளை உடைத்து, அதற்குள் பிரவேசித்து, அதிலிருந்து வெளியே வந்தார். அவர் ஒளியாக, மரித்தோர் உயிரோடெழுந்து ஜீவிக்க முடியும் என்னும் வார்த்தையை உறுதிப்படுத்துபவராகத் திகழ்ந்தார். அவர் அவ்வாறே இருந்தார்! 52பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவி வந்தபோது அந்த ஒளி தம்மைக் காண்பித்தார். ஏசாயா 28ம் அதிகாரத்தில், கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமும் என்கிறார்கள். பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப் பண்ணத்தக்க இளைப்பாறுதல். அவர்களோ அதை கேட்கமாட்டோம் என்று சொல்லி தலையையாட்டிவிட்டு போய்விட்டார்கள்“ என்று கூறினான். ஆனால் பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவி ஜனங்களின் மேல் விழுந்தபோது, அவர்கள் பரிசுத்த ஆவியின் நிறைவினால், குடித்து வெறித்த ஆண்களும் பெண்களும் போல் நடந்துகொண்டார்கள். ஜனங்கள் அதைக் கண்டு தலையையாட்டிவிட்டு, இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள் என்று சொல்லிப் போய்விட்டார்கள். அது முற்றிலும் ஒளியாக, தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட வார்த்தையின் வெளிப்படுதலாக அமைந்திருந்தது. 53அவ்வாறே ஒவ்வொரு காலத்திலும் உள்ளது. வார்த்தை வெளிப்பட்டு ஜீவனைப் பெறுவது அந்தந்த காலத்து வெளிச்சமாக அமைந்துவருகிறது. ஆதியாகமம் 1ல் தேவன், “வெளிச்சம் உண்டாக்கக் கடவது” என்றுரைத்தபோது, அந்த வார்த்தை வெளிச்சமாக வெளிப்பட்டது போல. குமாரன் தோன்றுவார் என்று தேவன் உரைத்தார், குமாரன் தோன்றினார். தேவன் யோவேல் 2 : 28ல், “நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும் உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர் மேலும், ஊழியக்காரிகள் மேலும் அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன் என்றுரைத்தார். அவர் வாக்குத்தத்தம் செய்த இவை, பரிசுத்த ஆவி விழுந்தபோது, அந்த வார்த்தையின் வெளிச்சமாகத் திகழ்ந்தது. வார்த்தை வெளிப்பட்டபோது, அது வெளிச்சமாக ஆனது. அவரே ஒளியாயிருக்கிறார். அவரே நாம் பின்பற்ற வேண்டிய ஒளி. அவர் ஒருவரே ஒளி. மேய்ப்பர்கள் ஒளியைக் கண்டு அதை பின்பற்றி அவரையடைந்தார்கள். 54தேவன் ஒவ்வொரு காலத்திற்கும் தமது வார்த்தையின் ஒரு பிரத்தியேக அளவை பகிர்ந்தளிக்கிறார். அந்த வார்த்தையின் வெளிச்சத்தைக் காண்பிக்க தேவன் ஒவ்வொரு காலத்துக்கும் ஒருவரை அனுப்புகிறார். அது... ஒவ்வொரு காலத்திலும் அது அவ்வாறே நடந்து வந்துள்ளது. நான் கூறினதுபோன்று, தீர்க்கதரிசிகளின் தெய்வீக பரிசுத்த வல்லமை அனைத்தின் நிறைவேறுதலாக அவர் இருந்தார். தீர்க்கதரிசிகள் சிறு தேவர்கள் (minor gods). தேவனுடைய வார்த்தை ஒரு மனிதனிடம் வரும்போது, அவன் தேவனாகின்றான் என்று இயேசுவே கூறியுள்ளார். அது உங்களுக்குத் தெரியும். அவர், தேவ வசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?“ என்று கேட்டார். (யோவான் 10: 35-36). பாருங்கள்? தீர்க்கதரிசிகளின் மூலமாய் வார்த்தையை உரைத்த அதே தேவன், அந்த உரைக்கப்பட்ட வார்த்தையின் வெளிப்படுதலாகத் திகழ்ந்தார். வேறொரு தீர்க்கதரிசியின் வார்த்தையின் வெளிப்படுதலாகத் தோன்றின தீர்க்கதரிசியை தேவன் என்று அழைக்கும் போது, அவரும் அப்படிப்பட்டவராக இருக்கும்போது அவரை எப்படி நீங்கள் குற்றஞ்சாட்டலாம்? அவர் தேவனுடைய குமாரனாயிருந்தார். அவர் தேவனுடைய குமாரன் என்னப்படுவார். அவர் நீண்ட காலமாக உலகம் காத்திருந்த வாக்களிக்கப்பட்ட மேசியா. மேசியா தோன்றுவார் என்னும் வாக்குத்தத்தத்தின் வெளிப்படுதலாக அவர் இருந்தார். 55அவர் அங்கு நின்று கொண்டு, என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், என்னைக் குற்றப்படுத்துங்கள். (பாருங்கள்?). நீங்கள் என்னை விசுவாசிக்காவிட்டால், நான் செய்கிற கிரியைகளையாவது விசுவாசியுங்கள். அவை நான் யாரென்று சாட்சியாக அறிவிக்கின்றன என்று கூறுவதைப் பாருங்கள். அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த அந்தகார நேரத்தில் அவர்கள் குருடராக்கப்பட்டு, அவர்களால் காண முடியவில்லை. அவர் எவ்வாறு அப்படியிருக்க முடியும் என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் பெத்லகேமில் பிறந்திருக்கும் போது, அவர் எப்படி தேவனுடைய குமாரனாயிருக்க முடியும்?“ என்று அவர்கள் வியந்தனர். அவர் அவ்வகையில் தான் தோன்றுவார் என்று வார்த்தை உரைத்துள்ளதை அவர்கள் மாத்திரம் அறிந்திருந்தால்! “ஏன், அவருடைய தகப்பன் யோசேப்பு ஒரு தச்சன். அவருடைய தாய், அவர் முறைதவறிப் பிறந்ததாக நம்முடைய சகோதரரின் மத்தியில் கருதப்படுகிறது”, பாருங்கள்? இருப்பினும் தேவனுடைய வார்த்தை அவ்வாறு உரைத்திருந்தது. அவர், வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே“ என்றார். (யோவான்5 : 39) - இந்த வேதவாக்கியங்கள். அப்படியானால் அவர் யார்? தேவனுடைய ஒளி. ”நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்“ என்று அவர் கூறினதில் வியப்பொன்றுமில்லை (யோவான்8 :12). “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்'' என்று கூறினதோடு அவர் நின்றுவிடாமல், ”நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்'' என்றும் அவர் கூறினார். (மத். 5 :4). உங்களுக்குள் இருக்கும் அவருடைய வார்த்தை நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் என்பதற்கு சாட்சியாயுள்ளது. கவனியுங்கள், ஒவ்வொரு காலத்திலும் வெளிச்சம் வெளிப்பட்டது என்று நாம் காண்கிறோம். 56அப்படியானால், நம்முடைய நேரம் கடந்து போவதற்கு முன்பு, உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். பின்னை ஏன் அவர்கள் அதைப் புறக்கணித்தனர்? அவர்கள் படித்துக் கொண்டிருந்த அதே வேதாகமம் அவர்களுக்கு முன்பாக வெளிப்பட்ட போது, அவர்களால் எப்படி அதை புறக்கணிக்க முடிந்தது? இதை ஆழ்ந்து சிந்தியுங்கள். ஞாபகம் கொள்ளுங்கள். இப்பொழுது நான் அநேகரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன், இங்குள்ள நானூறு அல்லது ஐந்நூறு பேர்களிடம் மாத்திரமல்ல. நான் பல ஆயிரம் பேர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். ஒரு நிமிடம் நிறுத்துங்கள். உங்கள் ஒலிநாடா கருவியை நிறுத்திவிட்டு இந்த கேள்வியை கேளுங்கள்: ஏன் பக்தியுள்ளவர்கள், நல்லவர்கள்... ஏன் யோசேப்பு சந்தேகப்பட்டான்? பாருங்கள்? ஏன் அவன்...? ஏனெனில் அவன் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்க்கவில்லை. ஆசாரியர்கள் ஏன் கேள்வி கேட்டனர்?அதற்கு ஒரு காரணம்... அவர்கள் அறியாமல் இல்லை. அவர்கள் அதை அறிந்திருந்தனர். நிக்கொதேமு அதை வெளிப்படையாய் கூறினான். அவன், ''ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்'' என்றான். ஆனால் அது என்ன? அவர்களுடைய பாரம்பரியங்கள் அவர்களை விசுவாசிக்கச் செய்யாமல் விலக்கின. 57அப்படியானால் அவர்கள் ஏன் மேசியாவைப் புறக்கணித்தனர்? ஏனென்றால்... அவர்கள் ஏன் அந்த ஒளியைப் புறக்கணித்தனர்? அந்த வார்த்தை நிறைவேற வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் அந்த வார்த்தை வெளிப்பட்டு அது நிறைவேறினது என்பதைக் காண்பித்த போது... அதை இன்றைய காலத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பாருங்கள்? நடக்க வேண்டியவை வார்த்தையில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் போது... பின்னை ஏன் அந்த போதகர்கள் அதை புறக்கணித்தனர்? ஏனெனில் அவர்கள் வேறொரு வெளிச்சத்தின் ஒளியில் (glare) வாழ்ந்து கொண்டிருந்தனர். அது தான்... அவர்கள் அந்த கண்கூசும் ஒளியில் வாழ்ந்து கொண்டிருந்தனர். இன்றைக்கும் அவர்கள் அதைதான் செய்கின்றனர். அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்... அவர்கள். அதைப் புறக்கணிக்கும் காரணம், அவர்கள் வேறொரு வெளிச்சத்தின் கண்கூசும் ஒளியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதால். பாருங்கள்? இயேசுவின் காலத்தில் அவர்கள் மோசேயின் வெளிச்சத்தின் கண்கூசும் ஒளியில் வாழ்ந்து கொண்டிருந்தனர் - அப்படித்தான் அவர்கள் உரிமை கோரினர். இயேசு கிறிஸ்து இன்றும் மாறாதவராயிருக்கிறார் என்னும் இந்த செய்தி இன்று புறக்கணிக்கப்படுவதன் காரணமும் அதுவே. அதாவது ஜனங்கள் வேறு காலங்களின் வெளிச்சத்தின் கண்கூசும் ஒளியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதே காரணம் கொண்டு தான் அவர்கள் அதை புறக்கணித்தனர். இப்பொழுது நாம் கவனிக்கிறோம். 58'Glare' என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு விதமான 'பொய்யான ஒளி' என்று அர்த்தமென்று வெப்ஸ்டர் அகராதி கூறுகிறது. அது ஒரு பொய்யான ஒளி சாலையில் போய்க் கொண்டிருக்கும்போது காணும் கானல் நீரைப் போல். நீங்கள் காரை ஓட்டிச் சென்று கொண்டிருக்கும் போது, சாலையில் சூரிய வெளிச்சம் பிரதிபலித்து, சாலையில் எங்கும் தண்ணீர் உள்ளது போன்ற ஒரு பொய்யான தோற்றம் காணப்படுவது வழக்கம். ஆனால் அங்கு நீங்கள் செல்லும் போது தண்ணீர் ஒன்றும் இருக்காது. அது கானல் நீர் - உண்மையான ஒளியின் மாயையான தோற்றம். பிசாசு அதை தான் செய்து கொண்டு வருகிறான். அவன் ஸ்தாபனங்கள் ஒன்று சேர்ந்த உலக சபைகளின் ஆலோசனை சங்கம் என்னும் கானல் நீரைக் காண்பிக்கிறான். அது பொய்யான ஒன்றாக இருக்கும். ஏனெனில் உண்மையான வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. உண்மையான வெளிச்சம் பிரகாசிக்காவிட்டால் பொய்யான ஒளி தோன்றாது. உண்மையான ஒளி பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அதில் அவர்கள் வேறொரு காலத்தின் கண்கூசும் ஒளியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த ஒளி ஏற்கனவே தோன்றி மறைந்துவிட்டது. இப்பொழுது, இந்த கண்கூசும் ஒளி. இந்த கானல் நீர் பொய்யானது. அது சூரிய ஒளியினால் உண்டானது. 59அப்படித்தான், அவர்கள் அதையே செய்தனர். உண்மையான ஒளியின் பொய்யான கண்கூசும் ஒளி, அவர் உண்மையான ஒளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் ஒளியாயிருந்தார். அவர் ஒளியாயிருந்தார் என்று அவர்கள் எப்படி அறிந்து கொண்டனர்? ஏனெனில் வாக்களிக்கப்பட்டிருந்த வார்த்தை அவர் மூலமாய் வெளிப்பட்டதனால், அவர் உரைக்கப்பட்ட வார்த்தையின் ஒளியாயிருந்தார். ஆமென்! ஓ, அது பெந்தெகொஸ்தே பாப்டிஸ்டாகிய என்னை கூச்சலிடும்படி தூண்டுகிறது. கவனியுங்கள், இதை சிந்தித்துப் பாருங்கள், கண் கூசும் ஒளி. பாருங்கள். கண்கூசும் ஒளியில் வாழ்தல். ஆனால் உண்மையான வார்த்தை ஜீவிக்கும் போது, அது தான் தேவன் உரைத்த வெளிச்சம். ''தேவன் ஆதியிலே வெளிச்சம் உண்டாகக் கடவது“ என்று கூறி, வேறெதாகிலும் உண்டாயிருந்தால்? (பாருங்கள்?) - பொய்யான ஒளி. பாருங்கள்? அது தேவன் உரைத்ததாயிருக்க முடியாது. இருக்கவே முடியாது. தேவன், ”வெளிச்சம் உண்டாகக் கடவது“ என்றுரைத்து, அதிக மூடுபனி உண்டாயிருந்தால்? பாருங்கள்? அது வெளிச்சமாக இருக்காது. ஆனால் வெளிச்சம் உண்டான காரணம், அது அவருடைய வார்த்தையின் வெளிப்படுதல் என்பதனால். இக்காலத்தில் இப்படிப்பட்ட காரியங்கள் நிகழும் என்று தேவன் கூறி அது நிறைவேறுவதை நீங்கள் காணும்போது, அது என்ன? தேவனுடைய வார்த்தையின் வெளிச்சம். அது வார்த்தை வெளிச்சமாகி தன்னை வெளிப்படுத்துதல். 60அவர்கள், “நாங்கள் யாரென்று நினைக்கிறாய்?”... “உன்னை நீ... உனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதென்று நாங்கள் அறிவோம். நீ ஒரு சமாரியன்; உனக்கு புத்திசுவாதீனம் இல்லை... நீ உன்னை... யார் சொல்ல முடியும்... நீ பாவத்தில் பிறந்தாய் என்று எங்களுக்குத் தெரியும். நீ எங்கிருந்து வருகிறாய் என்று எங்களுக்குத் தெரியாது. எங்கள் குழுக்களில் உன் அடையாளச் சீட்டு எதுவுமில்லை. நீ பைத்தியம் பிடித்தவன், உனக்கு பிசாசு பிடித்திருக்கிறது” என்றனர். பாருங்கள்? அவர்கள், “உனக்கு புத்திசுவாதீனம் இல்லை” என்றனர். ஆனால் அவர் உண்மையில், பிரகாசிக்கின்ற உண்மையான தேவனுடைய ஒளியாயிருந்தார். பொய்யான ஒளி அவர்கள் கண்களை குருடாக்கிப் போட்டது. “மோசே எங்கள் வழிகாட்டி.” “நீங்கள் மோசேயை விசுவாசித்தால், என்னை அறிந்திருப்பீர்கள். நீங்கள் இயேசுவையும் வேதாகமத்தையும் விசுவாசித்தால், நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தை அறிந்து கொள்வீர்கள். அவர்கள், “நல்லது, நாங்கள் கிறிஸ்தவர்கள்; நாங்கள்...'' என்கின்றனர். நீங்கள் கிறிஸ்தவர்களாயிருந்தால், இந்நாளில் நடக்கும் கிறிஸ்துவின் செயல்களை அறிந்து கொள்வீர்கள். பாருங்கள், பாருங்கள்? நீங்கள் அதை அறிந்திருப்பீர்கள். இயேசு, அந்த தீர்க்கதரிசிகள் எல்லோரும் என்னைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தனர். நீங்கள் தீர்க்கதரிசிகளை விசுவாசித்தால், என்னை அறிந்திருப்பீர்கள். என் கிரியைகள் என்னை அடையாளம் காண்பிக்கின்றன. நான் என்ன செய்வேன் என்று அவர்கள் முன்னுரைத்த அதையே நான் செய்கிறேன். என்னில் அவிசுவாசம் உண்டு என்று யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்?“ என்றார். 61ஆயினும் அவர்களால் கண்டு கொள்ள முடியவில்லை. ஏன்? கண்கூசும் ஒளியினால் அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. (பாருங்கள்?) அவர்கள் உரைக்கப்பட்ட வார்த்தை என்று வேறெதையோ தவறாக ஏற்றுக் கொண்டிருந்த அந்த ஒளியினால். இதை யோசித்துப் பாருங்கள்! இதை யோசித்துப் பாருங்கள்! அவர்கள் வார்த்தையை விசுவாசிப்பதாக உரிமை கோரினர். ஆனால் அவர்களுடைய பாரம்பரியங்கள் அவர்களுடைய முகங்களை உண்மையான வார்த்தையிலிருந்து பொய்யான ஒளிக்கு திருப்பிவிட்டன. எனவே அவர்களால் உண்மையானதை கண்டுகொள்ள இயலவில்லை. இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. ஒவ்வொரு காலத்திலும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. பாருங்கள், உண்மையான வார்த்தை பிரகாசிக்கிறது, ஆனால் அவர்கள் அதிகமாக பாரம்பரியங்களில் ஆழ்ந்துள்ளதால், அவர்களால் அந்த வார்த்தையைக் காண இயலவில்லை. அவர்கள் பொய்யான ஒளியைக் கண்டு குருடாயுள்ளனர். பொய்யான ஒளி உங்களைக் குருடாக்கிவிடும். அது பிரகாசமுள்ளதாய் உங்களை குருடாக்கிவிடும். அது... அப்பொழுது... இயேசு, “நீங்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறீர்கள்” என்றார். (மத்.15 : 14). அவர் யாரென்பதை அவர்கள் கண்டு கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அந்த பொய்யான ஒளியில் வாழ்ந்து வந்ததால் அவர்களால் முடியவில்லை. 62இப்பொழுது, நான் கூறினது போன்று. கண்கூசும் ஒளி ஒரு பொய்யான ஒளி, பொய்யான தோற்றம், உண்மையான ஒளியின் பொய்யான தோற்றம். அது உண்மையான ஒளியைப் போன்று காணக்கூடும், ஆனால் அது அதுவல்ல. அவர்களால் வித்தியாசம் கண்டு பிடிக்கக் கூடிய ஒரே வழி, இயேசு செய்த காரியங்கள் அவர் யாரென்பதை நிரூபித்தன - அவர் ஒளியென்று. அவர்கள் ஒளியிலிருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தனர். அப்படியானால் யார் உண்மையில் ஒளியிலிருக்கின்றனர் என்பதைக் குறித்து நாம் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டியவர்களாயிருக்கிறோம். அப்படிப்பட்ட பகிரங்கமான தவறை அக்காலத்து ஜனங்கள் செய்தார்கள் என்னும்போது, சகோதரரே, நாம் சற்று நிறுத்திக் கொண்டு ஒளி என்றால் என்னவென்பதைக் குறித்து எண்ணிப் பார்ப்பது அவசியமல்லவா? நாமும் அப்படிப்பட்ட பகிரங்கமான தவறைச் செய்யாதிருப்போம். ஆனால் நீங்கள் செய்கிறீர்கள். நீங்கள் ஏற்கனவே அதை செய்து (பாருங்கள்?) அதை அறியாமலிருக்கிறீர்கள். அன்று போலவே இன்றும். நாம் ஒரு நிமிடம் நிறுத்திக் கொண்டு இந்நாளுக்கென வார்த்தை என்ன சொல்கிறதென்பதைக் காண்போம். 63அவர்கள் மாத்திரம் சற்று நின்று, “இதோ அவர் வார்த்தை கூறின அனைத்தையும் ஒரு எழுத்தும் பிசகாமல் நிறை வேற்றுகிறாரே” என்று சிந்தித்துப் பார்த்திருந்தால்... நான் உங்களுக்கு சவால்விடுகிறது போல அவர் அவர்களுக்கு சவால்விட்டார். நீங்கள் வார்த்தையைத் தேடிப் பாருங்கள் என்று உங்களுக்கு சவால்விடுகிறேன். இது தான் அந்த நேரமாவென்று வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; ''அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே“ இன்றைய கிரியைகளைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே. கிரியைகளே. அது நிறைவேறிவிட்டது என்பதற்கு சாட்சியாயுள்ளது. அது நடக்கும் என்று வேதவாக்கியம் கூறுகிறது. எனவே அது இந்நேரத்துக்கான வெளிச்சம், தேவனுடைய வார்த்தை அவ்வாறு உரைக்கிறது. 64உங்கள் பாராம்பரியங்களும் மற்றவைகளும், அவர்கள் தலையை ஆட்டிக்கொண்டு போய்விட்டார்கள் என்று வேதம் கூறுவது போல. போஜன பீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந்திருக்கிறது என்று வேதம் கூறுகிறது. அப்படித்தான் அவர்கள்... அவர்கள் அதை விசுவாசிக்க மறுத்து, தங்கள் தலையை ஆட்டினர். சிறியோரே, சகோதரரே, தேவன் உங்களுக்கு முன்னால் உறுதிப்படுத்துவதை நீங்கள் புறக்கணிக்கும் போது, அவர்கள் செய்ததையே நீங்களும் செய்து, உங்கள் ஸ்தாபன வாந்திக்கு திரும்பிச் செல்கிறீர்கள் என்று நீங்கள் உணருகிறீர்களா? “நாய் தான் கக்கினதைத் தின்னவும்... முதன்முறை அதற்கு குமட்டல் உண்டாக்கினால், இரண்டாம் முறையும் அது குமட்டல் உண்டாக்க வேண்டும். கத்தோலிக்க சபை ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, அந்த முதலாம் ஸ்தாபனம் சபைக்கு குமட்டல் உண்டாக்கியிருந்தால், லூத்தரன், மெதோடிஸ்டு, இன்னும் மற்ற சபைகள், பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தே ஸ்தாபனங்களும் கூட குமட்டல் உண்டாக்க வேண்டும். நாய் தான் கக்கினதைத் தின்னவும் பன்றி சேற்றிலே புரளவும் செல்கிறது. பாருங்கள்? கர்த்தருக்கு சித்தமானால், இன்னும் சில நிமிடங்களில் அதற்கு வருவோம். 65பொய்யான ஒளி, பொய்யான ஒளியில் நடத்தல் (பாருங்கள்?) உண்மையான ஒளியின் பொய்யான தோற்றம். அவர் ஒளி என்பதை நிரூபித்தார். ஏனெனில் அவர் சிறுபான்மையோரை கொண்டவராக இருந்தார் (ஓ, என்னே!), லட்சக்கணக்கானவர்கள் அவருக்கு விரோதமாயிருந்தனர். அவர் உலகிலிருந்தார் என்று ஜனங்களில் ஆறில் ஒரு பங்கு கூட, தொண்ணூறில் ஒரு பங்கு கூட அறிந்திருக்கவில்லை. யூதர்களில் நூற்றில் ஒருவர், அல்லது ஐம்பது பேர்களில் ஒருவர், அல்லது நாற்பது பேர்களில் ஒருவர் - அதைக் காட்டிலும் குறைந்த பேர்கள் என்று நினைக்கிறேன் - அவருடைய சொந்த தேசத்திலிருந்த மிக சொற்ப பேர்களே அவர் உலகில் இருந்ததை அறிந்திருந்தனர். அவரை அறியாதவர்கள் அவர் கள்ளப் போதகர் என்று எண்ணினர். ஏனெனில் அவர்களுடைய ஸ்தாபனம் அவர்களுக்கு அவ்வாறு போதித்திருந்தது. பாருங்கள்? இருப்பினும் ஆதியாகமம் முதற்கொண்டு உரைக்கப்பட்ட உண்மையான ஒளியே அவர். அவர் அவர்களிடம், வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து, அவர் ஏற்ற காலத்தில் வாழ்கிறாரா என்றும், அக்காலத்திற்கென வாக்களிக்கப்பட்டிருந்த கிரியைகளை அவர் செய்து நிறைவேற்றினாரா என்றும் கண்டு கொள்ளும் படி கூறினார். ஆமென்! சகோதரனே, இது எவ்வளவு முக்கியம் வாய்ந்த காரியம். நாம் மிகவும் முக்கியமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர் சரியென்று நிரூபித்தார். 66அவர்கள் வழிபடுவதாக உரிமை கோரின அந்த ஒளிதான் அவர். அவர்கள் அந்த ஒளியை வழிபடுவதாக உரிமை கோரினர். இன்றைக்கும் அவர்கள் அப்படித்தான் உரிமை கோருகின்றனர். பெந்தெகொஸ்தேகாரர் அவ்வாறு உரிமை கோருகின்றனர். ஆனால் அவர்கள் காணக்கூடாத படிக்கு மிகவும் குருடாயுள்ளனர். ஏன்? அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, பொய்யான ஒளி தங்கள் முகங்கள் மேல் விழும்படி செய்துவிட்டனர். பாருங்கள்? பாரம்பரியங்கள் என்பது சிலர் ஒன்றாக உட்கார்ந்து, “நாம் இதை செய்வோம், இதை செய்வோம், இதை செய்வோம், அதை செய்வோம்” என்று தீர்மானிப்பதே. கர்த்தருக்கு சித்தமானால், அது ஏன் அப்படி நடக்க வேண்டியதாயிருந்தது என்பதைக் காணப் போகிறோம். 67கவனியுங்கள், அவருடைய கிரியைகளே ஜீவிக்கிற வார்த்தை. அவர் செய்தவை ஜீவிக்கிற வார்த்தையாக அமைந்து, உலகத்தோற்ற முதல் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஒளி அவரே என்பதை காண்பித்தது. அவரே அந்த ஒளி. அக்காலத்திற்கென வாக்களிக்கப்பட்டிருந்த வார்த்தையின் மேல் அந்த ஒளிபட்டு அதை ஜீவிக்கச் செய்து, அது என்ன செய்யும் என்று வாக்களித்திருந்ததோ அதை நிறைவேறப் பண்ணினது. ஆனால் அவர்கள் அதை அதிகமாக திரித்திருந்ததால், அவர்களால் அதைக் காண இயலவில்லை. பாருங்கள்?ஆனால் அவர் அந்த காலத்தின் ஒளியாகத் திகழ்ந்தார். அவர்கள் வழிபடுவதாக உரிமை கோரின ஒளி அவரே. சிருஷ்டி கர்த்தரையே அவர்கள் வழிபடுவதாக எண்ணியிருந்தனர். ஆனால் அவர்கள் பொய்யான ஒளியை வழிபட்டு வாழ்ந்து வந்தனர். இயேசு, “மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறீர்கள். நீங்கள் வார்த்தையைப் போதிக்கவில்லை” என்றார். அவரே வார்த்தை, அவரே வார்த்தை வெளிப்பட்டவர். அவர்கள் அதை அறிந்திருக்க வேண்டும். 68இது கேட்கப்படும் எல்லாவிடங்களிலும், அது வார்த்தை வெளிப்படுதல் என்பதை அறிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அவர்கள், “ஓ, எங்களிடம் வார்த்தை உள்ளது” என்கின்றனர். எவருமே வேதாகமத்தை கையிலெடுத்து அப்படி கூறலாம். ஆனால் வார்த்தை உறுதிப்படுத்தப்பட்டு, வெளிப்படும் போது... அவர்கள், “நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்கின்றனர். ஆம், ஐயா! அவர்கள் வார்த்தை அனைத்தையும் விசுவாசித்தனர். சாத்தானும் கூட அப்படி செய்கிறான். அந்த பரிசேயர்கள் விசுவாசிக்கவில்லையென்று யார் அவர்களை குற்றப்படுத்த முடியும்? ஆனால் அவர்கள் அந்த நேரத்துக்கான வார்த்தையை விசுவாசிக்கவில்லை. அவர்கள் வேறு ஏதோ ஒன்றின் கண்கூசும் ஒளியில் ஆராதித்துக் கொண்டிருந்தனர். இன்றைக்கும் அவர்கள் அதை தான் செய்கின்றனர். நீங்கள் லூத்தரின் பாரம்பரியங்களை அல்லது வெஸ்லியின் பாரம்பரியங்களை, அல்லது மற்றவர்களின்; பெந்தெகொஸ்தே பாரம்பரியங்களைக் கைக்கொள்கின்றீர்கள். ஆனால் இந்த நேரத்தைக் குறித்தென்ன? பரிசேயர்கள் தங்கள் பாரம்பரியங்களைக் கைக்கொண்டு வந்தனர். ஆனால் அவர்களுடைய பாரம்பரியங்களுக்குப் பின்னால் உண்மையான தேவனுடைய வார்த்தை பிரகாசித்துக் கொண்டிருந்தது. அது பிரகாசித்த போது, அவர்களுடைய கண்களைக் குருடாக்கினது. அவர்களால் அதைக் காண முடியவில்லை, ஏனெனில் அவர்கள் வேறெதையோ கவனித்துக் கொண்டிருந்தனர். இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது. தேவன் தாமே விசுவாசிக்க வேண்டிய ஜனங்களின் இருதயத்தில் அதை பதியச் செய்வாராக. நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகிவிட்டது. 69என் மகன் பில்லி பால் தூக்கத்தில் பேசுவான். ஆனால் அவன் அடிக்கடி சொப்பனம் காண்பதில்லை. ஆனால் அன்றொரு இரவு அவன் கண்ட சொப்பனம் அவனை அசைத்தது. அவன் ஒரு ஆலயத்தில் இருந்ததாக சொப்பனம் கண்டான். அப்பொழுது நான் அங்கில்லை. நான் உள்ளே வந்த போது என் கண்களிலிருந்து அக்கினி ஜுவாலை புறப்பட்டு வந்ததாம். நான், நேரம் வந்துவிட்டது. முடிந்துவிட்டது“ என்று கூறினேனாம். அப்பொழுது எல்லோரும். என்னால் முடியாது, ''என் பிள்ளைகள்” என்று கூச்சலிட்டார்களாம். நான்... என் மனைவி, ''உணவு வேளையில் சாராளை ஜெபம் செய்ய வைக்க என்னால் முடியவில்லை“ என்றாளாம். நான் சொன்னேனாம்... பில்லி, “நான் போய் லாயிஸையும் குழந்தையையும் கொண்டு வர வேண்டும்'' என்றானாம். நான், “லாயிஸ் இப்பொழுது வரமுடியாது. இதை அறிந்து கொள்வதற்கு குழந்தை மிகவும் சிறியது. பில்லி, நேரம் வந்துவிட்டது. நாம் போயாக வேண்டும். இப்பொழுது நள்ளிரவு, பொழுது விடிவதற்கு முன்பு இயேசு இங்கிருப்பார். அவர் இங்கில்லாவிட்டால், நான் கிறிஸ்துவுக்கு கள்ள சாட்சி'', என்றேனாம். யாரோ ஒருவர், “அந்த நிமிடத்தையும் மணி நேரத்தையும் எந்த மனிதனும் அறியான்'' என்றாராம். “நான் நிமிடத்தையும் மணி நேரத்தையும் கூறவில்லையே. நள்ளிரவிலிருந்து பொழுது விடிவதற்குள் எப்பொழுதாவது வருவார் என்று நான் கூறினேன்'' என்று சொல்லிவிட்டு, பில்லி, வா போவோம் என்று ஏதோ அது போல் கூறினேனாம்... நான், அந்த நேரத்தில் நாம் இருக்கிறோம். வா போவோம்” என்றேனாம். நாங்கள் காரில் ஏறி மலையின் மேல் சென்றோம். அப்பொழுது வெளிச்சம் வர ஆரம்பித்தது, ஆனால் பூமியில் வானம் இருண்டிருந்தது. நான் சாலையின் ஒருபுறம் சென்று என் கையை இப்படி உயர்த்தினதாக அவன் கூறினான். அப்பொழுதும் என் கண்களிலிருந்து அக்கினி ஜுவாலை வந்து கொண்டிருந்ததாம். நான், ஆண்டவரே, உமது கட்டளையின்படி இதை செய்தேன் இதை இவ்விதம் செய்ய வேண்டும் என்று நீர் என்னிடம் கூறினதால் நான் செய்தேன். நீர் என்னிடம் கூறினபடியே நான் இவைகளை செய்தேன்“ என்று கூறினதாக அவன் சொன்னான். நான் கிரானைட் மலைக்கு சைகை காட்டினேனாம். அப்பொழுது ஒளி நூற்றுக்கணக்கான டன்கள் எடையுடைய கைகளால் பெயர்க்கப்படாத பாறையைப் பிளந்து. அது உருண்டு வந்ததாம். நான், ”தலையை திருப்பிக் கொள்ளுங்கள், பார்க்க வேண்டாம். இன்னும் சில நிமிடங்களில் அது முடிந்துவிடும்“ என்றேனாம். கல் உருண்டு அந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தபோது ஒரு பரிசுத்தமான அமைதி நிலவினதாக அவன் கூறினான். 70நாம் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகியிருக்கக் கூடும். அங்கே... பாருங்கள், அது முற்றிலும் வேதபூர்வமானது (நீங்கள் பார்த்தீர்களா?), கைகளால் பெயர்க்கப்படாத கல் மலையிலிருந்து உருண்டு வருதல். ஆகையால் இந்நாட்களில் ஒன்றில் அப்படித்தான் நடக்கும். நீங்கள் ஏதோ ஒன்றிற்காக கூச்சலிடுவீர்கள். நான் அவனிடம், ''அந்த நேரம் ஏற்கனவே வந்துள்ளது. தேவன் உன்னை ஒவ்வொரு நேரமும் சதா எச்சரித்துக் கொண்டே வந்திருக்கிறார்“ என்றேனாம். ஆம், அது என் சொந்த மகனாக இருந்தாலும், யாராக இருந்தாலும். அந்த நேரம் இங்குள்ளது. அவர் என்னிடம் கூறச் சொன்னதை மாத்திரமே என்னால் கூற முடியும், அது இங்கு இருக்கும். அது இங்கு வந்துள்ளது” என்றேனாம். அப்பொழுது திடீரென்று அவர் கைகளால் பெயர்க்கப்படாத கல்லாக உருண்டு வந்தார். அநேக ஆண்டுகளுக்கு முன்பு தானியேல் அதை கண்டான் என்று உங்களுக்குத் தெரியும். பில்லிக்கு அதைக் குறித்து ஒன்றுமே தெரியாது. அது தேவனால் அவனுக்கு அனுப்பப்பட்ட சொப்பனம். இப்பொழுது, பாருங்கள், அவர்கள் ஆராதிப்பதாக உரிமை கோரும் அதே தேவனை அவர்கள் பரியாசம் பண்ணுகின்றனர். இன்றைக்கும் அதே காரணங்கொண்டு அதே காரியம் நடந்து கொண்டு வருகிறது. அவர்கள் வெளிச்சத்தில் வாழ்வதற்கு பதிலாக பொய்யான வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பெரிய வெளிச்சத்துக்கு பிரகாசம் உண்டு. சரி. 71இன்றைக்கு நாம் எவ்விதமான இருளில் இருக்கிறோம் என்பதைப் பாருங்கள். கொலை, கற்பழிப்பு, போராட்டம் இவைகளைப் பாருங்கள். இவை நடந்து கொண்டிருக்கின்றன... பில்லி கிரகாம் சென்ற கூட்டத்தில் இப்படி கூறினார் என்று நினைக்கிறேன். அவர், “இன்னும் பத்து ஆண்டுகளில் கலிபோர்னியாவின் ஒவ்வொரு குடிமகனும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கியைக் கையில் வைத்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். இந்நிலையைக் கட்டுபடுத்த அப்பொழுது போதிய சட்டதிட்டங்கள் இருக்காது” என்றார். ஜனங்களுக்கு பைத்தியம் பிடித்துள்ளது. துப்பாக்கியால் சுடுதல், கொலைகள், கற்பழிப்பு எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றன. பாருங்கள், அது காட்டுமிராண்டித்தனமாய் (பாருங்கள்?) தெருக்களில் நடக்கின்றன. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் சோதோமின் காலமாகும். பாருங்கள்? ஆனால் அவர்கள் மாத்திரம் உற்று நோக்கினால், ஒரு வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது - அவர்கள் மாத்திரம் வார்த்தையை ஆராய்ந்து பார்த்து இந்நேரத்தில் என்ன இருக்க வேண்டுமென்று அறிந்து கொள்வார்களானால், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கண்டு கொள்வார்கள். இப்பொழுது அவர்கள் அந்த ஒளியை ஆராதிப்பதாக உரிமை கோருகின்றனர். அப்படித்தான் அவர்கள் அந்த ஒளியை ஆராதிப்பதாக முன்காலத்திலும் உரிமை கோரினர். ஆனால் அவர்கள் உண்மையான ஒளியை ஆராதிப்பதற்கு பதிலாக, வேறொரு பொய்யான ஒளியை ஆராதித்து வந்தனர். அவரே அந்த உண்மையான ஒளி. 72கோட்பாடுகளும் பாரம்பரியங்களும் அவர்களுடைய குருடான நிலையும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின் உண்மையான ஒளியிலிருந்து அவர்களைத் திசை திருப்பிவிட்டன. உலகத்தின் ஒளியான இயேசுவின் மூலம் தேவன் வார்த்தையை உறுதிப்படுத்தினார். அந்த ஒளி தோன்றி, அவருடைய காலத்துக்கு சரியாக - சரியாக அத்தனை நாட்களுக்கு - அந்த வார்த்தையை ஜீவிக்கும்படி செய்தது. அவர் எழுபது வாரங்களுக்கு மத்தியில் சங்கரிக்கப்படுவார் (அது உண்மை), அது அவருடைய தீர்க்கதரிசனத்தின் 3 1/2 ஆண்டு காலம். பிரபுவாகிய மேசியா வந்து தீர்க்கதரிசனம் உரைப்பார். இது 3 1/2 நாட்கள், அதன் பிறகு அவர் பாவநிவாரண பலியாக சங்கரிக்கப்படுவார். அது உரைக்கப்பட்ட விதமாய் அப்படியே நடந்தது. அவர் 3 1/2 ஆண்டுகளாக பிரசங்கித்தார். தாவீது, ''என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர். (22ம் சங்கீதம்)? என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது. என்னைப் பார்க்கிறவர்களெல்லாம் என்னைப் பரியாசம் பண்ணி தலையைத் துலுக்குகிறார்கள்“ என்னும் சங்கீதத்தை பாடினான். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு எண்ணூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தாவீது இந்த சங்கீதத்தை ஆவியில் பாடினான், அது தீர்க்கதரிசனமாக கருதப்பட்டது... அந்த பலி சிலுவையில் தொங்கி, அவருடைய கைகள் உருவக் குத்தப்பட்டிருந்த அதே நேரத்தில் அவர்கள் என் கைகளையும் கால்களையும் உருவக் குத்துகிறார்கள்” என்னும் அதே சங்கீதத்தை தேவாலயத்தில் பாடிக் கொண்டிருந்தார்கள். பாருங்கள்? அங்கு பார்த்தீர்களா? ஏன்? அவர்கள் பொய்யான ஒளியில் வாழ்ந்து கொண்டிருந்தனர் - அவர்கள் உண்மையான ஒளியைக் காணத் தவறினர். 73புத்தியுள்ள ஒருவன் அப்படி செய்கிறதை நீங்கள் நினைத்துப் பார்க்க முடிகிறதா? புத்தியுள்ள ஒருவன் அடித்தளத்திற்கு ஓடிச் சென்று கதவுகளை அடைத்துக் கொண்டு, இருளில் உட்கார்ந்து, “நான் வெளிச்சத்தைக் காண மறுக்கிறேன்” என்று கூறுவான் என்று என்னால் எப்படி நினைத்துப் பார்க்க முடியாதோ, அப்படித்தான் இதுவும். அது பைத்தியமாகக் கருதப்படும். ஒரு மனிதன் இது வேதத்தில் வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளதையும், அது அவனுக்கு முன்பாக உயிர் பெற்று வெளிப்படுவதையும் கண்ட பின்பும், அவனுடைய ஆவிக்குரிய தன்மையை எங்கோ நழுவவிட்டு, இதை புறக்கணிக்கும் கோட்பாடுகளிலும் மற்றவைகளிலும் தொடர்ந்து நிலைத்திருப்பதென்பது ஆவிக்குரிய பிரகாரம் கடமை தவறுதலாகும். அது முற்றிலும் உண்மை. இதோ அவர். அவர் உலகத்துக்கு ஒளியாயிருந்தார். உலகமோ அவரை... அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார்; தமக்குச் சொந்தமானவர்களோ அவரை அறியவில்லை. அவர் இந்த உலகத்திற்கு வந்தார்; உலகம் அவரால் உண்டானது. உலகமோ அவரை அறியவில்லை. பாருங்கள்? ஆனால் அவரை அறிந்து கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய குமாரர்களாகும்படிக்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். 74ஞாபகம் கொள்ளுங்கள், நாம் நேற்றைய வெளிச்சத்தில் வாழ முடியாது. நேற்றைய வெளிச்சம் போய்விட்டது. அது இப்பொழுது இல்லை. அது... நேற்றைய வெளிச்சம் கடந்து போய் ஞாபகத்தில் மாத்திரமே உள்ளது. நேற்றைய சூரிய வெளிச்சம் கடந்து போய் சரித்திரமாகிவிட்டது. நாம் நேற்றைய சூரிய வெளிச்சத்தில் இன்று வாழ முடியாது. முடியவே முடியாது... அதே விதமாகத் தான்... அது அதே சூரியனாயிருந்த போதிலும், அது அறுப்புக்கென்று தானியத்தை முதிர்வடையச் செய்வதற்கென ஒவ்வொரு நாளும் தன் பலத்தை சற்று அதிகமாக அளிக்கிறது. பாருங்கள், இன்று சூரியன் தோன்றும்போது, சற்று அதிகம் பலமுள்ளதாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அதன் பலம் சிறிது சிறிதாக அதிகரித்து, முடிவில் அங்குள்ள தானியம் ஜீவனைப் பெற்று செல்கிறது. முதலில் ஜீவன் தோன்றுகிறது. பிறகு அது சிறிது சிறிதாக அதிகரிக்கிறது. மார்ச்சு, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, அதை அறுவடை செய்யும் நேரம். பார்த்தீர்களா? இன்றைக்கு - டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் - பிரகாசிக்கும் அதே சூரியன் அந்த பனியை உருக்கி, பயிருக்கு தண்ணீர் அளிக்கிறது. அது அதே சூரியன். ஆனால் அந்த முதிர்வடையாத கோதுமை, ஜூன் மாதம் வெயிலில் வாழ முடியாது. பாருங்கள்? அதனால் முடியாது. பாருங்கள், ஒவ்வொரு நாளும் அதன் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த சூரிய வெப்பத்தை தாங்கிக் கொள்ள கோதுமை சற்று முதிர்வடைந்திருக்க வேண்டும். அதுதான் இன்றைய தொல்லை. முற்பிதாக்களின் காலத்தில் - லூத்தர், வெஸ்லி இவர்களின் காலத்தில் விதைக்கப்பட்ட விதை வளராமல் சிறிதாகவே உள்ளது. அதனால் சூரியனைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. சூரியன் அதைக் கொன்று போடுகிறது. அது வளர மறுக்கிறது. பாருங்கள்? அது தண்டிலிருந்து வெளியே இங்கு வந்து தனக்கென்று சிறு காரியங்களை உண்டு பண்ணிக் கொண்டு, உமியாகிவிட்டது. அதில் ஜீவன் இல்லை. சூரிய வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்கும்தோறும் தானியம் முதிர்வடைந்து பெலனடைய வேண்டும். 75இப்பொழுது நாம் ஒரு நிமிடம் கவனிப்போம். நாம் சபை காலங்களை கவனிப்போம். ஏழு சபை காலங்கள் உள்ளன. இந்த சபை காலங்கள் ஒவ்வொன்றிலும் அவர்கள் என்ன செய்வார்கள் என்றும், நாம் வாழும் இந்த கடைசி நேரத்தில் தானியம் எவ்வாறு முதிர்வடையும் என்று அவர் கூறினார் என்பதைக் கவனியுங்கள். எனவே சபைகளும் அதை செய்ய வேண்டும் (பாருங்கள்?) சபைகள். இப்பொழுது பாருங்கள், லூத்தர் ஒரு விதையை விதைத்தார். லூத்தரிடம் இருந்த விதையை அவர் விதைத்தார். சரி, வெஸ்லியும் அப்படி செய்தார். பெந்தெகொஸ்தேகாரரும் அப்படி செய்தனர். அவ்வாறே பாப்டிஸ்டுகளும் நசரீன்களும். ஆனால் பாருங்கள், லூத்தர் திரும்பிச் சென்று முதலாம் ஸ்தாபனமாகிய கத்தோலிக்க ஸ்தாபனத்தின் வெளிச்சத்தில் வாழமாட்டார். இல்லை, ஐயா! அவர் வேறொரு வெளிச்சம். அது தேவன் ஒன்றை முதிர்வடையச் செய்வதாகும். அந்த லூத்தரன் எழுப்புதலின் விளைவாக ஒரு சிறுபான்மையோர் தோன்றினர். அதை தொடர்ந்து வெஸ்லி எழுப்புதல் உண்டானது. இவர்கள் திரும்பிச சென்று லூத்தரன்கள் செய்ததை செய்ய முடியவில்லை. பாருங்கள்? அதை தொடர்ந்து பெந்தெகொஸ்தேகாரர் தோன்றினர். அவர்களும் அதையே செய்து ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு உமியாக ஆனார்கள். கவனியுங்கள், 76ஆனால் தானியம் போய்க் கொண்டேயிருக்கிறது. இப்பொழுது நாம் வேறொரு காலத்தில் இருக்கிறோம். அவர்கள் ஏன் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்?தானியம் முதிர்வடைந்துள்ளது என்பதை அவர்கள் ஏன் காண மறுக்கின்றனர்? இந்நாளுக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை இங்குள்ளது. அவர்கள் ஏன் அதைக் காண்பதில்லை? ஏனெனில் அவர்கள் லூத்தரன் வெளிச்சத்திலும், வெஸ்லியன் வெளிச்சத்திலும், பாப்டிஸ்டு வெளிச்சத்திலும், - பெந்தெகொஸ்தே வெளிச்சத்திலும் இப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் வேறொரு வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆகையால் தான் தேவன், அவர்களுக்கு வாக்களித்தபடி முழு வார்த்தையையும் உறுதிப்படுத்தும்போது, அந்த வெளிச்சத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏழு முத்திரைகள், மறைந்திருந்த இரகசியம் அனைத்தும் அதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. அவர் திரும்ப வந்து ஏன் இப்படி நடந்தது என்று மறைபொருளாயிருந்த அனைத்தையும் எடுத்துக் கூறினார்... இருப்பினும், அது வெளிப்பட்ட போது, அவர்கள் முன்னைக் காட்டிலும் அதிக தூரம் விலகிச் சென்றனர். அவர்களுக்கு சாக்குபோக்குக்கு இடமில்லை. தேவன் ஆவியினால், வெளிப்பாட்டினால் இவைகளைச் செய்தார். அவர் விஞ்ஞானத்தின் மூலமாகவும் மற்றவைகளின் மூலமாகவும் இது உண்மையென்று பிழையற்ற விதத்தில் நிரூபித்தார். இருப்பினும் அவர்கள் பெந்தெகொஸ்தே வெளிச்சத்தில் வாழத் தலைப்பட்டு, “நான் அசெம்பிளீஸ்”, “நான் ஒருத்துவம்”, “நான் தேவனுடைய சபை”, “நான் இது” என்று சொல்லிக் கொள்கின்றனர். பாருங்கள்? அவர்கள் நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் லூத்தரன் வெளிச்சத்தில், வெஸ்லி, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், ஏதோ ஒருவிதமான நசரீன் வெளிச்சத்தில், வேறொரு சபைக்கால வெளிச்சத்தில், ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு அவர்களை தொடர்ந்து உண்டான வெளிச்சத்தை ஏற்க மறுத்தவர்களின் வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 77அப்படியானால் நீங்கள் பொய்யான ஒளியில் வாசம் பண்ணுகிறீர்கள். இதை நான் பயபக்தியுடன் கூறுகிறேன் (பாருங்கள்?) உங்களை புண்படுத்த அல்ல, உங்களை விழிக்கச் செய்ய. நீங்கள் பொய்யான ஒளியில் வாசம் பண்ணுகிறீர்கள். இயேசு, “நீங்கள் குருடராயிருந்து குருடருக்கு வழி காட்டுகிறீர்கள்” என்றார். அவர்கள்... அவர்களை விட்டுவிடும்படி கூறினார். “அவர்களை விட்டுவிடுங்கள், குருடனுக்கு குருடன் வழி காட்டினால், இருவரும் குழியிலே விழுவார்கள்” என்றார் அவர். அந்த நேரத்துக்கு தான் நானும் வந்திருக்கிறேன். அவர்கள் தடுமாறினால், என்னால் ஒன்றும் செய்ய முடியாது. என்னால் முடிந்த அனைத்தும் நான் செய்துவிட்டேன். அவர் சொன்னபடியே செய்தேன்... கர்த்தாவே, உமது கட்டளையின்படி இதை செய்தேன். அதற்கு நீரே சாட்சி. 1933ஆம் ஆண்டில் அந்த நதியில், நீங்கள் காணும் அந்த ஒளி பிரகாசித்த அன்று முதற் கொண்டு; அது இத்தனை ஆண்டுகளாக இந்த கூடாரத்தில் உங்களுக்கு சாட்சியாக இருந்து வருகிறது. அது உரைத்த அனைத்தும் நிறைவேறினது. இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. குருடருக்கு குருடர் வழி காட்டிக் கொண்டிருக்கட்டும். நான் அந்த நேரத்துக்காக காத்துக் கொண்டிருப்பேன். அவர் இந்நாட்களில் ஒன்றில் வருவார். 78கவனியுங்கள், லூத்தரின் வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டிருத்தல், வெஸ்லியின் வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டிருத்தல், முன்காலத்து வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டிருத்தல். ஆகையால் தான் அவர்களால் இப்பொழுதுள்ள உண்மையான வெளிச்சத்தை காண முடிவதில்லை. அவர்கள் சில நிமிடங்கள் நின்று வேதத்தை எடுத்துப் படிப்பார்களானால், இதுவே இந்நேரத்துக்கென வாக்களிக்கப்பட்டுள்ள வெளிச்சம் என்பதை கண்டு கொள்வார்கள். நாம் சிறிது நேரம் இவைகளை வேதத்திலிருந்து பார்க்கப் போகிறோம். இவை நடக்குமென்று இவர் மல்கியா 4ல் வாக்களித்துள்ளார். இவை நடக்குமென்று அவர் வேதம் பூராவும் வாக்களித்துள்ளார். பாருங்கள்? இஸ்ரவேல் ஜனங்களை கவனியுங்கள், அவர்கள் நமக்கு முன்னடையாளமாயுள்ளனர். அவர்கள் பிரயாணத்தில் (கவனியுங்கள்!) மன்னாவைப் புசித்தனர். அது அவர்களுடைய வெளிச்சம் - ஜீவனாக, அவர்களுக்கு பெலத்தையும், ஜீவனையும் அளித்தது. அது சரியா? இஸ்ரவேல் ஜனங்களால் நேற்று விழுந்த மன்னாவைப் புசிக்க முடியவில்லை. அது அடுத்த நாள் புழு புழுத்து கெட்டுப் போனது. அது அவர்களுக்கு உபயோகமில்லாமல் போனது. அவர்கள் அதை புசித்தால் செத்துப் போவார்கள். அவர்களை நேற்று உயிருடன் வைத்த அந்த மன்னா இன்று அவர்களைக் கொன்றுவிடும். அது புழு புழுத்து கெட்டு போனதாக வேதம் கூறுகிறது. அந்த மன்னா... அவர்கள் புது மன்னாவை ஒவ்வொரு நாளும் பெற வேண்டும். ஆமென்! அது என்ன?லூத்தரின் மன்னா, வெஸ்லி இன்னும் முன்காலத்தவர்களின் மன்னாவினால் வாழ்கின்ற நீங்கள் புழுத்த மன்னாவைப் புசிக்கிறீர்கள். அது ஆவிக்குரிய விதமாய் உங்களைக் கொல்லுகின்றது. பாருங்கள்? அது உங்களைக் கொல்லுகின்றது, உங்கள் பாரம்பரியத்தில் மரித்தவர்களாயிருக்கின்றீர்கள். 79நேற்றைய லூத்தரின் மன்னா மெதோடிஸ்டுகளுக்கு கிரியை செய்யாது. மெதோடிஸ்டு மன்னா பெந்தெகொஸ்தேகாரருக்கு கிரியை செய்யாது. பெந்தெகொஸ்தே மன்னா இன்றைக்கு கிரியை செய்யாது. நான் கூறுவதன் அர்த்தம் புரிகிறதா? ஒவ்வொரு நாளும் அது புதிதாக வர வேண்டும், அப்படித்தான் அது சபை காலங்களில் வந்தது. லூத்தரின் மன்னா நீதிமானாக்கப்படுதல் செய்தி, வெஸ்லியின் செய்தி பரிசுத்தமாக்கப்படுதல், பெந்தெகொஸ்தே, வரங்கள் புதுப்பிக்கப்படுதல். ஆனால் இதுவோ தலைக்கல்லை அறிமுகப்படுத்துதல், கடைசி நாள், மணவாட்டி மரம். இது மற்ற அனைத்துக்கும் வித்தியாசமாயுள்ளது. இருப்பினும் முதிர்வடைவதற்கு இது அதே வெளிச்சம், இன்றுள்ள அதே சூரிய வெளிச்சம் ஜுலை மாதத்தில் அறுவடைக்கென்று தானியத்தை முதிர்வடையச் செய்வது போல. நான் கூறுவதன் அர்த்தம் புரிகிறதா? இப்பொழுது டிசம்பர் மாதத்தில் உள்ள சூரிய வெளிச்சம் ஜூலை மாதத்தில் இருந்தால் பயனில்லை. அது அதிக வெப்பமுள்ளதாயிருக்க வேண்டும். ஏனெனில் கோதுமை வளர்ந்து அதை ஏற்றுக் கொள்ள தயாராயுள்ளது. ஆமென்! நிச்சயமாக அது அப்படித்தான் இருக்கிறது. ஆனால் இப்பொழுது அதனால் அதிக வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாது. ஆனால் அப்பொழுது முடியும். அது போல் காலம் அப்பொழுது ஏற்றதாயில்லை, ஆனால் இப்பொழுது உள்ளது. நீங்கள் தேவனுடைய இயற்கைக்கு விரோதமாய் போக முடியாது. அவர் அதற்கென்று ஒரு பிரமாணத்தை வைத்திருக்கிறார். அந்த பிரமாணத்துக்கு விரோதமான எதுவும் பயிரைக் கொன்றுவிடும். நீங்கள் தேவனுடைய உரைக்கப்பட்ட பிரமாணத்தையொட்டி செல்ல வேண்டும். அவருடைய வார்த்தையே அவருடைய பிரமாணம். எந்த ஒரு பிரமாணமும் உரைக்கப்பட்ட வார்த்தையாகும். சிந்தனை வெளிப்படுதலே வார்த்தை. பாருங்கள்? அது நமக்குத் தெரியும்; அது உண்மை. தரிசனம் என்பது என்ன? நடக்கப் போகும் ஒரு நிகழ்ச்சியை முன்கூட்டி அறிவிக்கும் தேவனுடைய வார்த்தை. தீர்க்கதரிசிகளுக்கு உண்டான தரிசனம், இயேசுவுக்கு, பவுலுக்கு, இன்னும் மற்றவர்களுக்கு உண்டான தரிசனம் அனைத்தும். இந்நாளில் என்ன நடக்கும் என்பதை முன்னறிவிப்பவையே. அவ்வாறு முன்னறிவிக்கப்பட்டது இப்பொழுது நிறைவேறி வெளிப்படுகிறதை நாம் காண்கிறோம். ஆனால் ஜனங்களோ அதை அடையாளம் கண்டு கொள்வதேயில்லை. நான் கூறுவதன் அர்த்தம் புரிகிறதா? இப்பொழுது, நேற்றைய மன்னா... 80இங்கு பாருங்கள்? ஒவ்வொரு முறையும் சூரியன் கிழக்கிருந்து மேற்குக்கு பிரயாணம் செய்கிறது என்பதை கவனித்தீர்களா? கவனியுங்கள், சபை காலங்களும் அதை தான் செய்தன. என்ன... சூரியன் கிழக்கில் தொடங்கினது. நாகரீகமும், ஜனங்கள் வாழ்வதற்கென தேவனால் உரைக்கப்பட்டு உண்டாக்கப்பட்ட ஒளியாகிய சூரியனுடன் கூட பிரயாணம் செய்தது. அது சூரியனைப் பின் தொடர்ந்தே வந்தது. அது எங்கு சென்றதென்று பாருங்கள். நீங்கள் பிறந்த முதற்கொண்டு உங்கள் வாழ்க்கையும் சூரியனைப் போன்றது. சூரியன் அஸ்தமிப்பது போல், உங்கள் வாழ்க்கையும் உங்கள் பிறப்பிலிருந்து வளர்ந்து அஸ்தமிக்கிறது. மனிதன் எப்பொழுதுமே மேற்கு நோக்கியே பிரயாணம் செய்து வந்திருக்கிறான். நமக்குள்ள மிகப் பழமையான நாகரீகம் சீனா போன்ற கிழக்கு நாடுகளில் தோன்றினது. எருசலேம்... கவனியுங்கள், அது மேற்கு நோக்கி பிரயாணம் செய்கிறது. அது இப்படி படிப்படியாக மேற்கு நோக்கி பிரயாணம் செய்வது போல, 81சபைகாலங்களும் தேவனுடைய குமாரனைப் பின்தொடர்ந்து அதே விதமாக பிரயாணம் செய்தது. கவனியுங்கள்! பவுல்... ஆதி சபை கிழக்கில் தொடங்கினது. அது அங்கிருந்து கடலைத் தாண்டி ஜெர்மனிக்கு சென்றது. அது மூன்று இழுப்புகளை உண்டாக்கியுள்ளது. கவனியுங்கள். அது ஆசியாவிலிருந்து - பாலஸ்தீனாவிலிருந்து. கடலைத் தாண்டி ஜெர்மனிக்கு சென்றது. அது லூத்தர். அது லூத்தரிலிருந்து இங்கிலீஷ் கால்வாயைத் தாண்டி இங்கிலாந்திலுள்ள வெஸ்லியை அடைந்தது. அது வெஸ்லியிலிருந்து மேற்கு கடற்கரைக்குத் தாண்டி அமெரிக்க ஐக்கிய நாடுகளை அடைந்தது. அது இன்னும் தொடர்ந்து சென்றால், கிழக்குக்கு மறுபடியும் வரவேண்டும். இது சாயங்கால நேரம்! சபை காலங்கள் எப்படித் தாண்டிச் சென்றன என்பதை கவனியுங்கள்... லூத்தர்... முதலில் ஆதி காலத்தில் பவுல், பிறகு வரிசையில் ஐரினேயஸ் முதலானோர், பிரான்சு நாட்டுக்கு வருதல், அங்கிருந்து ஜெர்மனிக்கு, பிறகு இங்கிலாந்துக்கு, தொடர்ச்சியாக மேற்கு நோக்கி செல்லுதல். இதற்கு மேலே நாம் செல்ல முடியாது. இது கடைசி காலம்! பாருங்கள், பூகோள சம்பந்தமாகவும், வரிசைக் கிரமமாகவும், எந்தப் பக்கம் நீங்கள் பார்த்தாலும். முதலில் வேதப்பூர்வமான ஆதாரங்களை நாம் பார்க்க வேண்டும். அதன் பிறகு சரித்திரப் பிரகாரமான அத்தாட்சி. நீங்கள் எப்படிப் பார்த்தாலும், நாம் முடிவில், கடைசி சபை காலத்தில் இருக்கிறோம். 82கவனியுங்கள், அது முன்னேறிச் செல்லச் செல்ல படிப்படியாக பலமடைந்தது. அவ்வாறே சிறுபான்மையினோரைக் கொண்ட சபை நீதிமானாக்கப்படுதல் என்பதிலிருந்து, பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் ஆகியவைகளுக்கு வளர்ந்து, இப்பொழுது வரப்போகும் தலைக்கல்லுக்கு தன்னை உருவுப்படுத்திக் கொண்டுள்ளது. இதற்கு பிறகு ஸ்தாபனம் எதுவும் இருக்காது. பாருங்கள்? இருக்க முடியாது. பாருங்கள், நாம் மேற்கில் இருக்கிறோம். இந்த முன்னடையாளங்கள், இன்னும் மற்றவைகள் மூலம் உங்களுக்கு காண்பிப்பதற்கென. அந்த மூன்று தாண்டுதல்கள், மூன்று இழுப்புகளைப் பாருங்கள். நாம் எவ்வாறு முடிவு காலத்தில் இருக்கிறோம் என்பதை இன்றிரவு காண்போம் (பாருங்கள், பாருங்கள்?) அது வெறும்... சூரியன் (sun) குமாரனைப் (Son) போல் பிரயாணம் செய்துள்ளது; குமாரன் சூரியனைப் போல் பிரயாணம் செய்துள்ளார். சபையும் ஏழு சபை காலங்களின் வழியாக அவ்வாறே பிரயாணம் செய்து வந்துள்ளது. நாகரீகம் மேற்குக்கு வந்துவிட்டது, சபையும் மேற்குக்கு வந்துவிட்டது. நாம் இன்னும் தொடர்ந்து செல்வோமானால், மறுபடியும் கிழக்குக்கு வந்துவிடுவோம். நீங்கள் மேற்கு கடற்கரையைவிட்டால், மறுபடியும் சீனா, ஜப்பான் நாடுகளை அடைவீர்கள். நீங்கள் ஏழாயிரம் மைல்கள் பிரயாணம் செய்தால், மறுபடியும் கிழக்கை அடைந்துவிடுவீர்கள். எனவே கிழக்கும் மேற்கும் சந்தித்துவிட்டன. அவ்வளவு தான், நாம் முடிவில் இருக்கிறோம். இனி வேறெதுவும் இல்லை. 83இன்று நடந்து கொண்டிருக்கும் அதே காரியம் தான் முன்பும் நடந்தது. முன்பு கிழக்கில் சந்தித்தது இப்பொழுது மேற்கில் சந்திக்கிறது. ஜனங்கள் வேறொரு வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். உண்மையான வெளிச்சம் வருமென்றும் அது புறக்கணிக்கப்படும் என்றும் அது காண்பித்தது. ஓ! செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே பெரிய வெளிச்சம் உண்டானது - புறஜாதியாருடைய நாடாகிய கலிலேயாவிலே. இது ஏழாம் சபையின் காலம். கிழக்கிலே பிரகாசித்த அதே சூரியன் தான் மேற்கிலும் பிரகாசிக்கிறது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். காலங்கள்தோறும் இருந்த அதே ஆவிதான் இப்பொழுதும் இருக்கிறது- அதே சூரியனைப் போல. ஆனால் வித்தியாசம் என்ன? அறுவடையின் காலத்தில் தானியம் முதிர்வடைவதுபோல. இப்பொழுதுள்ள அதே சூரியன் தான் இலையுதிர் காலத்தின் போது தானியத்தை முதிர்வடையச் செய்கின்றது. பாருங்கள்? ஆனால் வித்தியாசம் என்ன? அது இந்த சூரியனும் அதற்கு கூடுதலாக என்ன இருக்க வேண்டுமோ, அது. இன்றைக்கு, இந்த கடைசி காலத்தில், அவர்கள் பெற்றிருந்ததற்கு கூடுதலாக இது. இருப்பினும் அவர்கள் வளர்ச்சியடையாத நிலையில் முன்காலத்தில் வாழத்தலைப்பட்டு, இருளடைந்த ஸ்தாபன அடித்தளத்துக்கும் கோட்பாடுகளுக்கும் சென்று திரையை கீழே இழுத்து விட்டு, “இதை நான் காண மறுக்கிறேன்; இது மூடத்தனம்” என்கின்றனர். ஆனால் அவர்கள் விசுவாசிப்பதாக உரிமை கோரும் அதே வேதாகமம் தான் பரிசுத்த ஆவியினால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு, இந்த கடைசி நாட்களில் வெளிச்சத்தைக் கொண்டு வந்துள்ளது. 84நீங்கள் கவனித்தீர்களா... மல்கியாவில் அவர் கூறியுள்ள “பிதாக்களின் விசுவாசத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளின் விசுவாசத்தை பிதாக்களிடத்திற்கும்” என்பதை எவ்வாறு வெவ்வேறு காலங்களில் பகிர்ந்தளித்தார் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். பாருங்கள், அக்காலத்தில் பகிர்ந்தளித்த அதே ஆவிதான், இக்காலத்திலும் பகிர்ந்தளித்தது. அதே காரியம்... பாருங்கள், ஆனால் ஒன்றுக்கொன்று மாறாக (vice versa) ஏன்? கிழக்கும் மேற்கும் சந்தித்துவிட்டது. பாருங்கள், நம்முடைய முன்னிலையில் அப்படியே. இருப்பினும் அவர்கள் அதைக் காண்பதில்லை. ஏன்? அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடர்களுக்கு வழி காட்டும் குருடர்கள், அவர்கள் எல்லோரும் குழியிலே விழுவார்கள்“ என்று இயேசு கூறினதில் வியப்பொன்றுமில்லை. மற்ற காலங்களில் இருந்த வெளிச்சம் இந்த வெளிச்சத்தைப் பிரதிபலித்தது. பாருங்கள்? இன்றைக்கு உள்ள சூரியன், ஜுலை அல்லது ஆகஸ்டு மாதத்தில், அறுவடையின் போது சூரியன் எப்படி இருக்கும் என்பதை பிரதிபலிப்பதாய் அமைந்துள்ளது. அவ்வாறு மார்டின் லூத்தர், வெஸ்லி, சாங்கி, ஃபின்னி, நாக்ஸ், கால்வின், மூடி, இன்னும் மற்ற மகத்தானவர்கள் முன் காலத்தில் பெற்றிருந்த வெளிச்சம்; பாப்டிஸ்டு சபையின் ஜான் ஸ்மித். காம்ப் பெல்லைட் சபையின் அலெக்ஸாண்டர் காம்ப்பெல், கிறிஸ்துவின் சீஷர்கள் என்று அழைக்கப்படும் கிறிஸ்தவ சபை, இன்னும் என்னென்ன பெயர் வைத்துக் கொண்டு யார் யார் முன்காலங்களில் இருந்தார்களோ, அவர்கள் அனைவரும், முடிவில் என்ன இருக்கும் என்பதை பிரதிபலித்தார்கள். 85அதன் பிறகு, அந்த ஸ்தாபகர்களுக்குப் பிறகு வந்த பிள்ளைகள் என்ன செய்தனர்? அவர்கள் தண்டில் நிலைத்திருக்கவில்லை. அதிலிருந்து அவர்கள் உமியை உண்டாக்கிக் கொண்டனர். அதிலிருந்து ஜீவன் புறப்பட்டு வந்துவிட்டால், அதற்கு பிறகு அதில் ஜீவன் இல்லை. (ஒலிநாடாவின் முதல் பாகம் முடிவடைந்து இரண்டாம் பாகம் தொடர்ச்சி இல்லாமல் தொடங்குகிறது - ஆசி). இயேசு ஒரு மேசையின் மேல் ஆகாரத்தை வைத்திருக்கிறார். அதிலிருந்து தேவனுடைய பரிசுத்தவான்கள், அவர் இன்று இங்கிருக்கிறார் என்று சுவிசேஷ வெளிச்சத்தால் உறுதிப்படுத்தப்பட்டு முதிர்வடைந்த அந்நாளுக்கான ஆகாரத்தைப் புசிக்கின்றனர். பரிசுத்தவான்கள் அப்பத்தைப் புசிக்கின்றனர்... சற்று யோசித்து பாருங்கள். நேற்றைய பழைய உமியை (பாருங்கள்?) நீங்கள் விதைப்பதில்லை; அது அழுகிப் போனது. அது நிலைக்காது. இல்லை, ஐயா! அதனால் ஒரு உபயோகமுமில்லை. அது வளராது. ஜீவன் அதை விட்டுசென்றுவிட்டது. வார்த்தையே ஜீவன். அது உண்மை. உமி விழுந்துவிடுகிறது, அந்த சிறு பழைய தாடி விழுந்துவிடுகிறது - அது போன்றவை. அது ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு விழுந்துவிடுகிறது. அது ஜீவனுடன் செல்ல மறுக்கிறது. ஆனால் வெளிச்சம் அதை உறுதிப்படுத்துகிறது. ஓ, என்னே! ஆம். ஐயா! 86நேற்றைய... ஓ, என்னே! அதை நாம் எவ்வளவாக காண வேண்டியவர்களாயிருக்கிறோம்! நேற்று அழுகிப் போனவைகளை இன்று புசிக்காமலிருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். பாருங்கள்? அதில் புழுக்கள் உள்ளன. வேகமாக நெளியும் வால் புழுக்கள் (wiggletails) உங்களுக்குத் தெரியுமல்லவா? எனக்கு புழுக்களைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனால் அவைகளை நாம் வால்புழுக்கள் என்று அழைக்கிறோம் என்று மாத்திரம் தெரியும். ஏதாவது ஒன்று அழுகிப்போனால், அதில் வால்புழு உடனே நுழைந்துவிடுகிறது. பாருங்கள்? அப்பொழுது அது வேண்டாமென்று நான் தள்ளிவிடுகிறேன். உங்களுக்கு அழுகிப்போன ஆகாரம் திருப்தியளித்தால், புசியுங்கள். ஆனால் நான் அதை புசிக்கமாட்டேன். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள்... பின்னை ஏன் நேற்று அது நல்லதாக இருந்தது என்று நீங்கள் கேட்கலாம். தொடக்கத்தில் கோதுமையின் மேலிருந்த மேல் ஓடு (hull), கோதுமை மணியில் நிலைத்திருந்தால், அது கோதுமை மணியை விளையச் செய்யும் என்று மாத்திரம் நீங்கள் அறிந்திருந்தால்! அது தான் நேற்றைய கோதுமை பூ உண்டாகக் காரணமாயிருந்தது. ஆனால் அது கோதுமை மணியிலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டால், கோதுமை மணி முதிர்வடையாது. பாருங்கள்? ஆனால் அது ஜீவனை அளிக்கும் செயல்முறையில் ஈடுபட்டு, அது சாகும்போது, வேறொன்றுடன் கலந்து கோதுமை மணியைத் தோன்றச் செய்கிறது. அது அப்படி செய்யாவிட்டால், கோதுமை மணி எங்கிருந்து வந்தது? ஆமென்! புரிகிறது? 87ஒரு முறை இங்கிலாந்து நாட்டு ராணி காகிதத் தொழிற்சாலைக்கு சென்றிருந்தாள். அந்த தொழிற்சாலையை அவள் சுற்றி பார்க்க வேண்டும் என்னும் விருப்பம் தெரிவித்தாள். எனவே அவர்கள் தொழிற்சாலையை அவளுக்கு காண்பித்தனர் (இது அநேக ஆண்டுகளுக்கு முன்பு; அவர்கள் காகிதக் குழம்பினால் காகிதத்தை தயாரிக்கத் தொடங்கினதற்கு முன்பு), எனவே அவர்கள்.... சற்று கழிந்து அவள் அழுக்கு கந்தை துணிகள் குவிக்கப்பட்டிருந்த அறையைக் கண்டாள். அவள், இதையெல்லாம் எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்? இதெல்லாம் என்ன? ஓ, என்றாள். அப்பொழுது தொழிற்சாலையின் தலைவர், ''இந்த அழுக்கு கந்தை துணிகளிலிருந்து தான் காகிதம் தயாரிக்கப்படுகிறது“ என்றார். அவள், ''இதிலிருந்து காகிதமா?“ என்று வியப்புடன் கேட்டாள். அவர், “ஆம்” என்றார். அவளால் நம்பவே முடியவில்லை. அவள் சென்ற பிறகு அந்த மனிதன் அதே அழுக்கு கந்தை துணிகளை எடுத்து, ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறையை உபயோகித்து, சுத்தமான காகிதத்தை அதிலிருந்து உற்பத்தி செய்து, அதில் அவள் உருவத்தை பதித்து, அவள் அழுக்கு கந்தை துணி என்று அழைத்ததில் அவளை பிரதிபலித்து, அதை அவளுக்கு அனுப்பி வைத்தார். 88அதுதான் அது. நேற்று செத்துப் போன லூத்தரின் செய்தி, வெஸ்லியின் செய்தி, பெந்தெகொஸ்தேகாரரின் செய்தி ஆகியவை, தேவனுடைய, பரிசுத்த ஆவியினுடைய, உறுதிப்படுத்தும் வார்த்தையினுடைய உற்பத்தி முறையின் வழியாக செல்லுமானால், அது ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவை. பிரதிபலிக்கும் ஒன்றாய் வெளியே வரும். ஆமென்! ஆனால் நீங்கள் அதை அப்படியே விட்டுவிட்டால், அது அழுக்கு கந்தை துணிகளாகவே இருக்கும். பாருங்கள்? அது வேறு ஒன்றாக உருவாக்கப்பட வேண்டும். லூத்தர் வெஸ்லியாகவும், வெஸ்லி பெந்தெகொஸ்தேயாகவும், பெந்தெகொஸ்தே கிறிஸ்துவாகவும் உருவாக்கப்பட வேண்டும். அது ஒரு உற்பத்தி முறையின் வழியாக கடந்து செல்ல வேண்டும். சுவிசேஷமும் அவ்வாறே ஒரு உற்பத்தி முறையின் வழியாக கடந்து வந்துள்ளது. நாம் லுத்தரின் நீதிமானாக்கப்படுதலில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம், வெஸ்லியின் பரிசுத்தமாக்கப்படுதலில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம், பெந்தெகொஸ்தேகாரரின் பரிசுத்த ஆவியின் வரங்கள் புதுப்பிக்கப்படுதலில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். நிச்சயமாக, இவையனைத்தையும் ஒன்று சேர்த்து உருவாக்கும் போது, நமக்கு என்ன கிடைக்கிறது? நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு (உண்மை!). நமக்கு இயேசு கிடைக்கிறார். 89உலோகம் வார்ப்பிக்கும் இடத்தில் ஒரு மனிதன் ஆலய மணி ஒன்றை வார்க்கும் போது, அதற்கு ஒரு குறிப்பிட்ட தொனி கிடைக்கத் தக்கதாக அதை வார்க்க வேண்டும். அவன் வார்ப்பை அமைத்து அதில் இரும்பை ஊற்றும்போது, அதனுடன் அவன் குறிப்பிட்ட அளவு பித்தளை, குறிப்பிட்ட அளவு செம்பு ஆகியவைகளைச் சேர்க்கிறான். ஏன்? சரியான தொனி அந்த மணியில் உண்டாவதற்கு இவை ஒவ்வொன்றும். எவ்வளவு அளவு சேர்க்க வேண்டும் என்பதை அவன் அறிந்திருக்கிறான். அதை தான் இயேசு தமது மணவாட்டிக்கு செய்தார். அவர் இவ்வளவு லூத்தர், இவ்வளவு மொதோடிஸ்டு, இவ்வளவு பிரஸ்பிடேரியன், இவ்வளவு பெந்தெகொஸ்தேயை அதில் சேர்க்க வேண்டியதாயிருந்தது. முடிவில் அவருக்கு என்ன கிடைக்கிறது?அவருடைய சொந்த பிரதிபலிப்பே. ஏன்? அது கூர்நுனிக் கோபுரம் செய்தி போல். பாருங்கள், அது ஒன்றின் மேல் ஒன்று வைக்கப்பட்டு, முடிவில் தலைக் கல்லுக்கென்று சிறுபான்மையோரை அடைகிறது. இப்பொழுது பூமியிலுள்ள இயேசு கிறிஸ்துவின் ஊழியம், அவர் உலகிலிருந்த போது அவருக்கிருந்த ஊழியத்துக்கு ஒத்ததாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் அதற்கு வரமுடியாது. கால்களுக்கும் தலைக்கும் உள்ள உறவு போல. கால்கள் தலை அல்ல. ஆனால் தலை கால்களையும் கொண்டுள்ளது. அது எங்கு செல்ல வேண்டுமென்று அதற்கு கட்டளையிடுகிறது. புரிகிறதா? அழகாக, இது இந்நேரத்தின் வெளிச்சம். வெஸ்லி ஒருபெரிய வெளிச்சமாகத் திகழ்ந்தார். அவர் யோவான் ஸ்நானனைக் குறித்து, அவன் காலத்தில் அவன் ஒரு பெரிய வெளிச்சமாகத் திகழ்ந்தான் என்று கூறினது போல். அவன் நிச்சயமாக அப்படி இருந்தான். 90இல்லை... ஆம், ஐயா! சுத்த கந்தை துணிகள்... இல்லை, நேற்றைய அழுக்கு கந்தை துணிகள். நீங்கள் அதே விதமாக இருப்பீர்களானால், அது எப்பொழுதும் அழுக்கு கந்தை துணிகளாகவே இருக்கும். அது உடையாக தன் நோக்கத்தை நிறைவேற்றினது, இப்பொழுது அது காகிதமாக உண்டாக்கப்பட்டிருக்கிறது. லூத்தரின் கீழ் நீதிமானாக்கப்படுதல் தன் காலத்தை நிறைவேற்றினது. அதன் பிறகு அது வெஸ்லியின் மூலம் பரிசுத்தமாக்கப்படுதல் என்பதாக ஆக வேண்டியிருந்தது. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வரும்வரைக்கும். பரிசுத்தமாக்கப்படுதல் தன் காலத்தை நிறைவேற்றினது. பரிசுத்த ஆவி அதாவது ஒரே ஒரு தேவன் இருக்கிறார் என்பது - சபையில், கிறிஸ்துவின் சபையில் இணைந்து, அவர் வேதத்தில் வாக்களித்துள்ளபடி, அது கிறிஸ்துவை பூமியில் பிரதிபலிக்கும் நேரம் வரும் வரைக்கும், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தன் காலத்தை நிறைவேற்றினது. நீங்கள் இதை நம்பாமல் போகலாம். உங்களை நம்பச் செய்ய என்னால் முடியாது. நான் வார்த்தைக்கு மாத்திரம் பொறுப்புள்ளவனாயிருக்கிறேன். பாருங்கள்? அது உண்மை. 91எனவே நீங்கள் அதை காண்கிறீர்களா? அதை காண்கிறீர்களா? நீங்கள் அதை காணமுடிந்தால், ஒரு முறை வேல்ஸ் நாட்டில் நடந்த எழுப்புதலின் போது அங்கு சென்ற மனிதரைப் போலிருப்பீர்கள். ஒரு குழு அப்பொழுது அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து அங்கு சென்றது. அவர்கள் எந்த கட்டிடத்தில் வேல்ஸ் நாட்டு எழுப்புதலை நடத்துகின்றனர் என்று கண்டுபிடிக்க விழைந்தனர். உங்களில் அநேகருக்கு வேல்ஸ் நாட்டு ஜனங்களின் மத்தியில் உண்டான அந்த மகத்தான வெல்ஷ் எழுப்புதல் நினைவிருக்கும். எனவே டாக்டர் பட்டம் பெற்ற பிரபல போதகர்கள் அங்கு நடக்கும் பெரிய காரியங்களைக் காண அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து அங்கு சென்றனர். அவர்கள் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, கையில் உள்ள தடியைச் சுழற்றிக் கொண்டு நின்று கொண்டிருந்த ஒரு போலீஸ்காரனைக் கண்டார்களாம். அவன் ஒரு கிறிஸ்தவ பாடலை இப்படி விசில் அடித்துக் கொண்டிருந்தான். அவர்கள், “ஓ, இவன் கிறிஸ்தவ பாடலை விசில் அடித்துக் கொண்டிருக்கிறான். அவனிடம் போய் கேட்போம்” என்று சொல்லி, அவனிடம் சென்று, “ஐயா, வெல்ஷ் எழுப்புதல் எங்கு நடைபெறுகிறது'', என்று கேட்டனராம். அவன் தொப்பியை மேலே சற்று உயர்த்திவிட்டு, “ஐயா, வெல்ஷ் எழுப்புதல் இங்கு நடக்கிறது” என்று சொல்லி தன் இருதயத்தைக் காண்பித்தானாம். ஓ, அது தான்; அவனே வெல்ஷ் எழுப்புதல். ஓ, தேவனே, நாங்கள் இயேசு பிரதிபலிக்கிறவர்களாக, அவருடைய வார்த்தை வெளிப்படுகிறவர்களாக இருக்கிறோம் என்பதை மாத்திரம் புரிந்து கொள்வோமானால் நீங்கள் அவருடைய வார்த்தையை பிரதிபலிக்கிறீர்கள். பாருங்கள்? வெல்ஷ் எழுப்புதல் எங்கு நடக்கிறது? எந்த கட்டிடத்தில்? அவன், “ஐயா, அது இருதயத்தில் நடக்கிறது” என்றான். அவன்தான் அந்த வெல்ஷ் எழுப்புதல். அது உண்மை. இன்றைக்கு சபையானது பூமியிலே இயேசு கிறிஸ்து செயல்படுவதாய் அமைந்திருக்க வேண்டும். நான் பிழைத்திருக்கிறபடியினால், நீங்களும் பிழைத்திருக்கிறீர்கள். என் ஜீவன் உங்களுக்குள் வாசம் செய்கிறது. நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். பாருங்கள்? சபை அந்த நிலையை அடைய வேண்டும்... அது அடையும் என்று அவர் வாக்களித்துள்ளார். அது அடையும், அது அடையத்தான் வேண்டும். எனவே பாருங்கள், அது தான் நடந்து கொண்டிருக்கிறது. நாம் அப்படித்தான் இருக்க வேண்டும். அவர் ஒளியாயிருக்கிறார். 92அது போன்று நோவாவும் அவன் காலத்தில் ஒளியாக விளங்கினான். அவன் ஒளியாயிருந்தான். நோவா அந்த ஒளியாயிருந்தான். அவன் எதற்கு ஒளியாயிருந்தான்? “நான் பூமியில் உண்டாக்கின மனிதனை நீர்மூலமாக்குவேன். ஒரு பேழையை உண்டாக்கு. அதற்குள் வர விருப்பமுள்ளவர்கள் அனைவரும் அழிவினின்று காக்கப்படுவார்கள்” என்னும் தேவனுடைய வார்த்தைக்கு. நோவா அங்கு நடந்து சென்று, “ஒரே ஒரு வழி மாத்திரமே உள்ளது. அது தான் பேழை” என்றான். அவர்கள், ''பைத்தியக்காரக் கிழவன்“ என்றார்கள். அவன் வார்த்தை வெளிப்படுகிறவனாக இருந்தான். நோவா அக்காலத்து ஒளியாக இருந்தான், நிச்சயமாக அப்படி இருந்தான். அவனுடைய நாளில், அவனுடைய காலத்தில், அவன் ஒளியைப் பிரகாசிக்கச் செய்தான். மோசே அவன் காலத்து ஒளியாக விளங்கினான். தேவன் ஆபிரகாமிடம், அவர்களை நான் நிச்சயம் சந்திப்பேன். நான் இறங்கி வந்து பலத்த கரத்தினால் ஜனங்களை வெளியே கொண்டு வருவேன். என் வல்லமையை எகிப்தில் விளங்கப் பண்ணுவேன்“ என்றார். மோசே எரிகிற முட்செடியின் அருகில் சென்று, இருக்கிறேன் என்பவர் முட்செடியில் இருக்கிறார் என்று கண்டு கொண்ட பிறகு, எகிப்துக்கு சென்றான். அவன் ஒளியாயிருந்தான். அவன் புழுதியைக் கையிலெடுத்து அதை ஊதி, பூமியில் வண்டுகள் உண்டாகக் கடவது என்று உரைத்ததில் வியப்பொன்றுமில்லை. அவன் தேவனுடைய வார்த்தையை உடையவனாயிருந்தான். என்ன நடந்தது? புழுதி பறக்க ஆரம்பித்தது. வண்டுகள் தோன்றின. அல்லேலுயா! ஏன்? அவன், ”நான் எகிப்தை வாதிப்பேன்“ என்னும் தேவனுடைய வார்த்தையின் ஒளியின் வெளிப்படுதலாக இருந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் உரைத்தது நிறைவேறினது. அவன் அக்காலத்து ஒளியாயிருந்தான். அவன் தேவனுடைய ஒளியாயிருந்தான். 93பார்வோனுக்கு தான் விரும்பின எல்லாம் இருந்திருக்கக் கூடும். அவ்வாறே மற்றவர்களும், ஆசாரியர்கள் அனைவரும் தாங்கள் விரும்பினதைப் பெற்றிருந்தனர். ஆனால் மோசே அந்த ஒளியாயிருந்தான். ஏன்? அவன் தேவனுடைய வார்த்தை வெளிப்படுவதைக் காண்பித்தான். தேவன், ''அவர்களை நான் பலத்த கையினால் வெளியே கொண்டு வருவேன். நான் மகிமையைப் பெற்றுக் கொள்வேன்'' என்று வாக்களித்திருந்தார். அதை தான் அவர் நிறைவேற்றி கொண்டிருந்தார். ஆகையால் தான் மோசே தன்னால் சிருஷ்டிக்க முடியும் என்பதை நிரூபித்தான். அவன் சிருஷ்டிக்க விரும்பினான் என்பதனால் அல்ல, தேவன் அவனிடம் சிருஷ்டிக்கக் கூறினார் என்பதனால்... அவர், “நாளை சபைக்குச் சென்று 'கை நிறைய புழுதியை எடுத்து இப்படி ஆகாயத்தில் வீசி, வண்டுகளை வரவழைப்பாயாக. இங்கு ஒரு வண்டும் கூட கிடையாது, ஆனால் அப்படி செய்யும் போது வண்டுகள் உண்டாகும்' என்று என்னிடம் சொன்னார் என்று சொல்” என்றார். ஆமென்! ஓ, நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கவில்லை என்று நம்புகிறேன். ஓ, வெளிப்படுதல். மோசே, “நான் அனுப்பப்பட்டேன். தேவன் நம்முடைய முற்பிதாக்களிடம், நம்மை இங்கு நிச்சயம் சந்தித்து வெளியே கொண்டு போவதாக வாக்களித்திருந்தார். அந்த நேரம் இப்பொழுது வந்துவிட்டது என்பதை நீரூபிக்கவே நான் வந்திருக்கிறேன். உங்களிடம் உள்ளதை எறிந்துவிடுங்கள். நாம் போவோம்” என்றான். சிலர், “நல்லது, நான் விசுவாசிக்கிறேன்...” என்று அரைமனதுடன் கூறினர். தாத்தான், இப்பொழுது அவசரம் ஒன்றுமில்லை. இதைக் குறித்து நாம் உணர்ச்சிவசப்படக் கூடாது. அந்த முயற்சி நான்கைந்து முறை தோல்வியடைந்ததாகத் தெரிகிறது“ என்றான். யார் என்ன கூறின போதிலும், அது நிறைவேறினது. அவர்கள் எண்ணினர்... அவர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்த பிறகு, “நாம் மோசேயை கல்லெறிந்து கொன்று நம்மிடமிருந்து அவனை அகற்றிவிடுவோம். நம்முடைய கூட்டத்தில் அவன் இருக்கக் கூடாது” என்றனர். ஆனால் மோசேயோ எப்படியும் முன்னேறிச் சென்றான். ஏனெனில் அவன் ஒளியாயிருந்தான். அவன் அக்காலத்து ஒளியாயிருந்தான். அது என்ன? தேவன் மோசேயின் மூலம் அவர் வாக்களித்திருந்த வார்த்தையை வெளிப்படுத்துதல். மோசே அந்த ஒளியாயிருந்தான். 94எலியா ஒளியாயிருந்தான். “நீ அந்த மலைக்குப் போய். அங்கு உட்கார்ந்திரு. உன்னைப் போஷிக்க நான் காகங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறேன்''. ஆமென்! ஆம், ஐயா! அவன், ''கர்த்தர் உரைக்கிறதாவது, நான் கட்டளையிடும் வரைக்கும் வானத்திலிருந்து ஒரு துளி பனியும் கூட பெய்யாது'' என்பதைக் கொண்டவனாய் கீழே இறங்கி வந்தான். ஆமென்! “சூரியன் பிரகாசிக்கக் கூடும். நீங்கள் மேகங்களுக்கு கட்டளையிடலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நான் கட்டளையிடும் வரைக்கும் ஒரு துளி பனியும் கூட பெய்யாது.” அவன் யார்? ஒளி. அல்லேலூயா! அவன் ஒளியாயிருந்தான். அவன் தேவனுடைய வார்த்தை வெளிப்படுதலாக இருந்தான். பைத்தியக்காரன் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறான் என்று அவர்கள் நினைத்தனர். அவனுடைய வேலைக்காரர்கள் (காகங்கள்) அவனைப் போஷித்தன. மற்றவர்களோ பட்டினியால் மரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பாரம்பரியங்களில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்க விரும்பினர். ஆனால் மோசே, எலியா அப்படியில்லை. அவன் ஒளியில் வாசம் பண்ணிக் கொண்டிருந்தான். அவன் கேரீத் ஆற்றண்டையில் உட்கார்ந்து கொண்டு மகிழ்ச்சியான தருணம் அனுபவித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வேளாவேளைக்கு ஆகாரம் கிடைத்துக் கொண்டிருந்தது. அவனைக் காகங்கள் கவனித்துக் கொண்டன. அவனுக்கு பைத்தியம் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் அவனோ ஒளியாயிருந்தான். 95அவர்கள், “ஏய், இங்கிருந்த உருளும் பரிசுத்தனுக்கு என்ன நேர்ந்தது? என்ன தெரியுமா, அன்று யாரோ ஒருவர் வேட்டைக்கு சென்றிருந்த போது, அவன் மலையுச்சியில் நின்று கொண்டிருப்பதை பார்த்தாராம். நான் பந்தயம் கட்டுகிறேன், அந்த கிழவன் இத்தனை நேரத்துக்கு உலர்ந்து போயிருப்பான்” என்று சொல்லியிருப்பார்கள். ஓ, இல்லை! அவன் ஒளியாயிருந்தான். அவன் ஒளியாயிருந்தான். அவன் அக்காலத்து தேவனுடைய ஒளியாகத் திகழ்ந்தான். யோவான் பூமியில் தோன்றின போது. தேவனிடமிருந்து கல்வி கற்க வனாந்தரத்துக்கு சென்றான், வேத சாஸ்திரப் பள்ளிக்கு அல்ல. அவன் மேசியாவை அறிமுகம் செய்ய வேண்டியவனாயிருந்தான்... எனவே அவன் வந்தபோது, அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்ததாக இயேசு கூறினார். அல்லேலூயா! ஏன்? அவன் வார்த்தை வெளிப்படுதலாக இருந்தான். ஏசாயா அவ்வாறு உரைத்தான். அது உண்மை! “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தர வெளியிலே அவருடைய வாசலை, அவருடைய பாதையை செவ்வை பண்ணுங்கள்” என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தத்தை அவர் அனுப்புவார் என்றுரைத்தான். கூப்பிடுகிற... வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம், இதோ அவன் வருகிறான். அவன் யார்? வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம்: அவன் யார்? வார்த்தை, வெளிச்சம் வெளிப்படுதல். ஆதியாகமத்தில் உரைத்த அதே தேவன் இதையும் உரைத்தார், இங்கு ஜீவன் தோன்றினது. “சூரியன் வெளிச்சம் தரக் கடவது'' என்று அவர் உரைத்தபோது சூரியன் உண்டானது போல, வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிருக்கும் என்று அவர் உரைத்தார். இதோ அவன் தோன்றினான். அவன் அக்காலத்து ஒளியாயிருந்தான். 96கடைசி நாட்களில் (ஆமென்!), “என் ஜனங்களே. அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமல் அவளை விட்டு வெளியே வாருங்கள், அவளுடைய அசுத்தமானதைத் தொடாதிருங்கள். வரப்போகும் கோபாக்கினையினின்று தப்பி ஒடுங்கள்” என்று பாபிலோன் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் அக்காலத்து ஒளியினால் உண்டாகும் என்றும் அவர் உரைத்தார். ''கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது“ என்று யோவான் அதே காரியத்தை கூறினான். அவனுக்கு படிப்பு ஒன்றுமில்லை. ஒரு போதகரைப் போல் அவன் பேசவில்லை. அவன் விரியன் பாம்புகள், தடிகள், மரங்கள், கோடாரிகள் என்று அவன் வனாந்தரத்தில் கண்டு பழக்கப்பட்டவைகளைக் குறித்து பேசினான். அவன் இந்நாளில் உள்ள, அந்நாளிலும் இருந்த மகத்தான வேத சாஸ்திரப் பள்ளிகளில் பயிற்சி பெறவில்லை. அவன் தன் சொந்த மொழியைக் கொண்டவனாய் வந்தான். அவன் எழுந்து நின்று ''ஆ...ஆ...மென்” என்று கூறவில்லை. அவன் நாகரீக முறையில் தலை வணங்கவில்லை. அவன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு வந்து, “நான் இதை சேர்ந்தவன், அதை சேர்ந்தவன்'' என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள நினையாதிருங்கள். தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்” என்றான். 97நீங்கள் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் என்பதனால் தேவன் மேல் உங்களுக்கு உரிமையுண்டு என்று நினையாதிருங்கள். தெருவிலுள்ள கள்ளச் சாராயம் விற்பவர்களையும் வேசிகளையும் பரிசுத்தவான்களாக்க தேவன் வல்லவராயிருக்கிறார். யாராவது ஒருவர் இந்த செய்தியைக் கேட்கத்தான் போகிறார்கள். யாராவது ஒருவர் அதை விசுவாசிக்கத்தான் போகிறார்கள். யோவான் மேலும், ''கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது. விசுவாசிக்காத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்“ என்றான். அதுவே அவன் செய்தியாயிருந்தது. அவன் அக்காலத்து ஒளியாயிருந்தான். இயேசு யோவானைக் குறித்து, ''அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சில காலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்“ என்றார். யோவான் என்ன கூறினான். அந்த தீர்க்கதரிசி? அவர் இப்பொழுது உங்கள் நடுவில் இருக்கிறார். அவருடைய பாதரட்சையை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரன் அல்ல. அவர் காட்சியில் வந்தவுடனே, நான் போய்விடுவேன்“. ஓ, என்னே! ஏனெனில் அவரே ஒளி. இரண்டு அல்லது மூன்று ஒளிகள் இருக்க முடியாது, நான்கு அல்லது ஐந்து வெவ்வேறு ஸ்தாபனங்கள் இருக்க முடியாது. ஒரே ஒரு ஒளிதான் இருக்க முடியும். மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, லூத்தரன், பிரஸ்பிடேரியன் என்றெல்லாம் கிடையாது. கிறிஸ்துவே ஒளி, அந்த ஒளி வார்த்தை. வெளிப்படும் வார்த்தையே அக்காலத்து வெளிச்சம். 98''வெளிச்சம் உண்டாகக் கடவது“ அப்பொழுது வெளிச்சம் உண்டாயிற்று. ஆம், ஐயா! ''வெளிச்சம் உண்டாகக் கடவது”, அப்பொழுது வெளிச்சம் உண்டாகிறது. இக்காலத்தில், ''வெளிச்சம் உண்டாகக் கடவது'' என்று அவர் உரைத்தார். ஆகவே வெளிச்சம் உண்டாயிருக்கிறது. அவர் வருகிறார். அதை நான் விசுவாசிக்கிறேன். இக்காலத்திற்கென அளிக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தங்களைப் பாருங்கள். ஓ, என்னே! பிரகாசித்த ஒவ்வொரு வெளிச்சமும்... நாம் காண்கிறோம் இந்த சபை காலங்கள் எவ்வாறு... அவர்கள் புறக்கணிப்பதைக் காணும்போது அது பரிதாபமான காட்சி... வெளிப்படுத்தல் 3. நான் இங்கு வெளிப்படுத்தல் 3 என்று எழுதி வைத்திருக்கிறேன். அப்பொழுது நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று எனக்குத் தெரியும். நாம் வாழும் இக்காலத்தில் என்ன நடக்கும் என்று கூறப்பட்டுள்ளதென்று கவனியுங்கள், ஒளி புறக்கணிக்கப்படும். முன்பு அவர்கள் அதைப் புறக்கணித்தனர். ஏன்? அவர்கள் பொய்யான ஒளியில் வாசம் பண்ணினார்கள். இன்றைக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள்? அதே காரியம். “நீ கிறிஸ்தவனா?” “நான் லூத்தரன்” ''நான் பாப்டிஸ்டு“ “நான் பிரஸ்பிடேரியன். அது தேவனுக்கு ஒன்றுமேயில்லை. அதைக் காட்டிலும் நீங்கள் உங்களை பன்றி அல்லது வேறெதாவது பெயரால் அழைத்துக் கொள்ளலாம். பாருங்கள்? அவ்வளவுதான் அதன் அர்த்தம். உங்களை நான் அவமதிக்கவில்லை. ஆனால் அடிப்படையில் நோக்கும்போது, அது உண்மை. உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன்: நீங்கள் கிறிஸ்தவனா? அது கிறிஸ்து உங்களிடம் வாசம் செய்தல் கிறிஸ்து உங்களில் வாசம் செய்தால், வார்த்தை உங்களில் வாசம் செய்கிறது. வார்த்தை உங்களில் வாசம்செய்து, வெளிச்சம் பிரகாசித்தால், நீங்கள் எப்படி அதிலிருந்து விலகிச் செல்ல முடியும்? பாருங்கள், பாருங்கள்? அது தான் கேள்வி. அது தான் இப்பொழுதுள்ள பிரச்சினை. வெளிச்சம், சாயங்கால வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. மணவாட்டி மரம் வளர்ந்து கொண்டிருக்கிறது. 99ஓ, அவர்கள் பழைய மரத்தை வெட்டிக் கொண்டே வந்தனர். பச்சைப் புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது, வெட்டுக்கிளி விட்டதை பச்சைக்கிளி தின்றது. மெதோடிஸ்டு விட்டதை, பாப்டிஸ்டு தின்றது; பாப்டிஸ்டு விட்டதை பெந்தெகொஸ்தே தின்றது. இந்த மரம் அடிமரம் வரைக்கும் வெட்டப்பட்டதை அவன் கண்டான் (யோவேல்). அது மறுபடியும் ஜீவிக்குமா என்று அவன் அறிய விரும்பினான். ஓ, ஆமாம்! அவர் அதை பாதுகாத்தார். அவர் அந்த மரத்தை தமக்கென்று பாதுகாத்துக் கொண்டார் (ஆம், ஐயா!), ஏனெனில் அது அவர் மணவாட்டி. அவர், ''அதை நான் திரும்ப அளிப்பேன்“ என்றார். அது என்ன? லூத்தரன்கள் பட்சித்ததை, வெஸ்லியன்கள் பட்சித்ததை, மற்றவர்கள் பட்சித்ததை அது திரும்ப அளிக்கும். அதை நான் திரும்ப அளிப்பேன். ஏனெனில் அது அனைத்தும் மரத்தின் வேர்களில் உள்ளது. பாருங்கள்? அது பூமிக்கடியில் கிடக்கிறது. அந்த சகோதரியைக் குறித்து நான் கூறினது போல், அதன் சத்து கீழே சென்றுவிட்டது. அது அங்குள்ளது. என்றாவது ஒரு நாள் தேவ எக்காளம் ஊதப்படும். அப்பொழுது ஸ்தாபனத்துடன் எவ்வித தொடர்பும் கொள்ளாமல் இருந்த தெரிந்து கொள்ளப்பட்ட லூத்தரன்கள், மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள்... 100லூத்தர் ஸ்தாபனம் எதுவும் உண்டாக்கவில்லை. மூடி ஸ்தாபனம் எதுவும் உண்டாக்கவில்லை. அவருக்குப் பின்னால் வந்த ரிக்கிகளின் கூட்டம் தான் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு உமியாயின. ஜான் ஸ்மித் ஸ்தாபனம் எதுவும் உண்டாக்கவில்லை. அவர்கள் அவரவர் காலத்து ஒளியாயிருந்தனர். லூத்தர், வெஸ்லி, மற்றவர் எவருமே ஸ்தாபனம் உண்டாக்கவில்லை. அவர்களுக்குப் பின் வந்த கூட்டம்தான் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டது. பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவி ஸ்தாபனம் உண்டாக்கவேயில்லை. பெந்தெகொஸ்தே என்பது ஒரு அனுபவம், ஸ்தாபனம் அல்ல. பரிசுத்த ஆவி ஸ்தாபனம் உண்டாக்கவில்லை. ஓ, இல்லவே இல்லை! ஆனால் பெந்தெகொஸ்தேயைச் சார்ந்திருந்ததாக உரிமை கோரின மனிதரே அதை ஸ்தாபனமாக்கினர். அவர்கள் மரித்துக் கொண்டிருக்கிற உமி. இயேசு கிறிஸ்துவின் முழு உருவமும் காகிதத்தில் அழுத்தப்பட்டு வெளிவரும்படி செய்வதற்கு பதிலாக அவர்கள் தங்களை அதிலிருந்து வெளியே இழுத்துக் கொண்டனர். எனவே அவர்களுக்கு அதனுடன் யாதொரு சம்பந்தமுமில்லை. அவர்களை விட்டுவிடுங்கள். 101நாம் காண்கிறோம் இந்த ஒளி, இந்த மரம்... கிறிஸ்து மறுபடியும் சபையினால் புறக்கணிக்கப்பட்டார். ஏன்? அவர்கள் முதலில் புறக்கணித்த அதே காரணத்தினால் அக்காலத்திலிருந்த பொய்யான ஒளியினால். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று எபிரேயர் 13: :8 உரைக்கிறது. அவர் அன்றிருந்தது போலவே இன்றும் இருக்கிறார். ஏனெனில் அவர் அன்று செய்தவைகளையே இன்றும் செய்கிறார். கிறிஸ்துவாகிய அதே வார்த்தை... கவனியுங்கள், உங்களிடம் இப்பொழுது நான் கூறப் போவது நமக்குள்ளே இருக்கட்டும். இதை ஒலிப்பதிவு செய்ய வேண்டுமா வேண்டாமா என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை (பாருங்கள்?) இதை ஒலிப்பதிவு செய்ய விட்டுவிடுகிறேன். உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இதை கவனியுங்கள்! பாருங்கள்? அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். கவனியுங்கள், அவருடைய கிரியகைள் அதை வெளிப்படுத்தினது. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். அவர், யோவான் 14 : 12ல், “நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வீர்கள்” என்றார். வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் அந்த வார்த்தையோ ஒருக்காலும் தவறாது. இப்பொழுது நாம் கடைசி காலத்தின் முடிவுக்கு வந்திருந்தால், பெரிய கிரியைகள் எப்பொழுது வரப் போகிறது? பாருங்கள், பாருங்கள்? நாம் இங்கு வந்திருக்கிறோம். நமக்கு நேரம் இல்லை... 102கேளுங்கள், ரோம நாட்காட்டி சரியாயிருக்குமானால்... நமக்கு இன்னும் முப்பத்தாறு ஆண்டுகள் உள்ளன. ஒவ்வொரு இரண்டாயிரம் ஆண்டு முடிவிலும் உலகம் தன் முடிவைச் சந்திக்கிறது. முதலாம் இரண்டாயிரம் ஆண்டு முடிவில் உலகம் ஜலத்தினால் அழிக்கப்பட்டது. இரண்டாம் இரண்டாயிரம் ஆண்டு முடிவில் கிறிஸ்து தோன்றினார். வரப்போகும் ஆண்டு 1964, இன்னும் முப்பத்தாறு ஆண்டுகள். எகிப்திய வான சாஸ்திர நாட்காட்டியின்படி, இதில் பதினேழு ஆண்டுகள் கழிந்துவிட்டன. அதாவது நாம் 1964ஐ விட பதினேழு ஆண்டுகள் முன் சென்றுவிட்டோம். அப்படியானால் இன்னும் பத்தொன்பது ஆண்டுகள் மாத்திரமேயுள்ளன. தெரிந்து கொள்ளப்பட்டவர்களினிமித்தம் அந்நாட்கள் குறைக்கப்படுமென்றும், இல்லையென்றால் ஒருவனாகிலும் தப்பிப் போவதில்லையென்றும் இயேசு கூறியுள்ளார். (மத்.24 :22). அப்படியானால் நாம் எங்கிருக்கிறோம்? 103“நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்''. அதே விதமான, ஆனால் பெரிய கிரியைகளை நீங்கள் செய்வீர்கள். இப்பொழுது கவனியுங்கள். கூர்ந்து கேளுங்கள்! உங்கள் முழங்காலில் நின்று... தேவன் தாமே உங்கள் இருதயத்தையும் சிந்தையையும் திறந்து நீங்கள் அறிந்து கொள்ளும்படி செய்யவும், நான் அதிகமாய் கூறவில்லை என்று நீங்கள் புரிந்து கொள்ளும்படி செய்யவும் வேண்டுமென்று தேவனை வேண்டிக் கொள்கிறேன். கவனியுங்கள். ஒரு நாள் அவர் கூறினார்... அவர் செய்த சில பெரிய கிரியைகளை நாம் காண்போம். ஓரிரண்டு கிரியைகளைக் காண்போம். நாம் சிந்தித்துப் பார்ப்போம். ஒரு முறை அவர், ''அவர்கள் புசிப்பதற்கு நீங்களே கொடுங்கள்“ என்றார். அவர்கள், ''எங்களிடத்தில் ஒன்றுமில்லை“ என்றார்கள். அவர், “உங்களிடத்தில் என்ன இருக்கிறது? அதை என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்றார். அவர்கள், ''எங்களிடத்தில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன'' என்றனர். அவர், “அதை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்” என்றார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் எடுத்து பிட்கத் தொடங்கினார். அந்த மூல அப்பங்களிலிருந்து, ஐயாயிரம் பேரைப் போஷிப்பதற்கென அப்பங்களை உண்டாக்கினார். அது சரியா? அதன் பிறகு அவர், “உங்களிடம் உள்ள மீனை என்னிடம் கொடுங்கள்” என்றார். அது தொடக்கத்தில் மீனாயிருந்தது. அந்த மீனிலிருந்து வேறொரு மீன், வேறொரு மீன், இப்படியாக அவர் ஐயாயிரம் பேரைப் போஷித்தார். அது சரியா? ஆனால் இந்தக் கடைசி நாளில் அவர் ஒன்றையும் வைத்திராமலே வார்த்தையை உரைத்து, ''இது அங்கிருக்கும் என்று சொல்“ என்றார். எதுவும் இல்லாமலே அது அங்கு உண்டாயிற்று. அவர் தொடக்கத்தில் அணிலைக் கொண்டிருக்கவில்லை. அங்கு ஒன்றுமேயில்லை. அவர், ”உண்டாகக் கடவது'' என்றார். அது உண்டாயிற்று. ஓ, அவருடைய வார்த்தை பிழையற்றது. அது நிறைவேற வேண்டும். உங்களை அசைக்கக் கூடிய காரியங்களை என்னால் சொல்ல முடியும். பாருங்கள்? அது அங்கிருக்க வேண்டும் என்று உரைத்தால், அது அங்கிருக்கும். அவர் அதை உரைக்கட்டும். பாருங்கள்? அது அப்படியே நிறைவேறும். பாருங்கள்? 104பாருங்கள், கிழக்கு... மேற்கு கிழக்கை சந்தித்துவிட்டது. மோசே புழுதியைக் கையிலெடுத்து காற்றில் தூவி, ''வண்டுகள் பூமியில் உண்டாகக் கடவது“ என்றான். ஆனால் இந்தக் கடைசி நாளில், அவர் எதையும் எடுப்பதில்லை (பாருங்கள்?). அவர் ”உண்டாகக் கடவது“ என்று வார்த்தையை மாத்திரமே உரைக்கிறார். அது உண்டாகிறது. என்ன உரைக்கப்படுகிறதோ, அது அப்படியே நடக்கும். அவர் இன்னும் தேவனாயிருக்கிறார் என்று நீங்கள் காணவேண்டும் என்பதற்காக, நடந்த சில காரியங்களை இன்றிரவு சாட்சியாக அறிவிக்க விரும்புகிறேன். (பாருங்கள், பாருங்கள்?). அவருடைய வார்த்தை ஒருக்காலும்... ”நான் செய்கிற இந்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வீர்கள். ஒரு மீனை நான் எடுத்து வேறொரு மீன் உண்டாக்கினேன். ஆனால் நீங்களோ ஒரு மீனைப் பெற்றிருக்க வேண்டும் என்னும் அவசியமில்லை.“ அவர் இன்னும் தேவனாயிருக்கிறார். அவர் இன்னும் அதே குமாரனாக, ஒரு மீனிலிருந்து வேறொரு மீனை உண்டாக்கின அதே தேவனுடைய குமாரனாயிருக்கிறார். ”நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'', இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளைச் செய்வீர்கள். அது பெரிதாகும். “இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளைச் செய்வீர்கள்'' ஜனங்கள் இதைக் காண மறுக்கின்றனர். பெரிய கிரியைகள்! 105பொய்யான வெளிச்சம்! உங்களுக்குத் தெரியுமா, இப்பொழுது நான் ஒன்றைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். நான் இங்கிலாந்தைக் குறித்து நிறைய குறிப்பிட்டேன், நான் பொய்யான வெளிச்சத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். அண்மையில் இங்கிலாந்தில் நடந்த மிகப் பெரிய கொள்ளை உங்களுக்கு நினைவிருக்கும். அது எப்படி நடந்ததென்றால்... அது எழுபது லட்சம் டாலர் கொள்ளை. அதனுடன் ஒப்பிட உலகில் அப்படிப்பட்ட வேறெதுவும் இல்லை. அண்மையில் நடந்த எழுபது லட்சம் டாலர் கொள்ளை. துப்பறியும் ஸ்காட்லாந்து யார்ட்டும் கூட அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் எப்படி கொள்ளையடித்தனர் தெரியுமா? பொய்யான வெளிச்சத்தை உபயோகித்து. அவர்கள்அபாய வெளிச்சத்தை தண்டவாளத்தின் மேல் அடித்து, சிகப்பு வெளிச்சத்தை கண்ட போது ரயில் நின்றது. அந்த இருண்ட இடத்தில் அவர்கள் கொள்ளையடித்தனர். பொய்யான வெளிச்சம் தேசங்கள் கண்டிராத மிகப் பெரிய கொள்ளை உண்டாகக் காரணமாயிருந்தது. அது இங்கிலாந்து தேசத்தில் நடந்த மிகப் பெரிய கொள்ளை. அது பொய்யான வெளிச்சத்தை உபயோகித்து நடந்தது. 106அவ்வாறே தேவனுடைய சபையில் நடந்துள்ள மிகப் பெரிய கொள்ளை பொய்யான வெளிச்சத்தின் காரணமாகவே, ஸ்தாபனங்களின் பொய்யான வெளிச்சம். அது சபையிலிருந்த பரிசுத்த ஆவியின் வல்லமையை கொள்ளையடித்துவிட்டது. அது சபையிலிருந்த ஜீவநாடியையே பறித்துவிட்டது. அவர்கள் வார்த்தைக்குப் பதிலாக கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டதன் விளைவாக வார்த்தை அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது. அது கொள்ளை... ஓ, அவர்கள் வார்த்தையைப் பெற்றுள்ளதாக உரிமை கோருகின்றனர். வார்த்தை இந்த காலத்தில் தன்னில்தானே ஜீவித்து தன்னை வெளிப்படுத்துகிறதாயுள்ளது. இயேசுவின் காலத்திலும் கூட அவர்கள் வார்த்தையைப் பெற்றிருந்ததாக உரிமை கோரினர். ஆனால் அவர்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டு, அதைப் புறக்கணித்ததாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் அதை கண்டனர், ஆனால் அதைப் புறக்கணித்தனர். ஓ, பொய்யான வெளிச்சம்! ஆம், அதுவே சபையில் மிகப் பெரிய கொள்ளைக்கு காரணமாயிருந்தது. குளிர்ந்த ஸ்தாபனக் கோட்பாடுகள், சகோதரனே, உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையை - தானியத்தை - முதிர்வடையச் செய்யாது. வேதம் என்ன கூறுகிறது என்றால்... தேவனுடைய வார்த்தை விதைக்கிறவன் விதைக்கும் விதை என்று இயேசு கூறினார். பாருங்கள்? குளிர்ந்து போன கோட்பாடுகள் இந்த வார்த்தையை முதிர்வடையச் செய்யாது. இல்லை, இல்லை! பனி உறைந்த குளிர்ந்த நாட்கள் கோதுமையை முதிர்வடையச் செய்யாது. நிச்சயம் செய்யாது! அதற்கு சூரிய வெப்பம் தேவை. ஏனெனில் அவ்விதமாக நடக்க வேண்டுமென்று தேவன் வார்த்தையை உரைத்தார். அது போன்று இயேசு கிறிஸ்து நேற்று போல் இன்றைக்கும் ஜீவித்து மாறாதவராயிருக்கிறார் என்று தேவனுடைய பரிசுத்தவான்களுக்குக் காண்பிக்க தேவனால் உரைக்கப்பட்ட வார்த்தை இன்று அவசியமாயுள்ளது. கோட்பாடுகளும் ஸ்தாபனங்களும் அதை ஒருபோதும் செய்யாது. அவை குளிராயும் சிரத்தையற்றும் உள்ளன. எனவே கோதுமை நிலத்தில் அழுகிப்போகும். அது இவைகளைக் கொண்டு வளர முடியாது. 107அதன் காரணமாகத்தான் இன்றைக்கு நாம் செய்பவைகளை செய்து கொண்டு வருகிறோம். மகத்தான எழுப்புதல் பிரசங்கியாகிய நம்முடைய விலையேறப்பெற்ற சகோதரன் பில்லி கிரகாமைப் போல். தேவன் அவரை உபயோகித்து வருகிறார். ஆனால் அவர் என்ன செய்கிறார் என்று பாருங்கள். அவர் பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் இவர்களிடையே செல்கிறார். அவர் என்ன செய்கிறார்? சபையை சேர்ந்து கொள்ளும் ஒரு கூட்டத்தைப் பெறுகிறார். தென் பாப்டிஸ்டுகள், தங்கள் ஸ்தாபனம் மற்றெல்லா பிராடெஸ்டெண்டு ஸ்தாபனங்களை விட அதிகமாக வளர்ந்துள்ளதாக ஜம்பமடித்துக் கொள்வதைப் பாருங்கள். சென்ற ஆண்டு கத்தோலிக்கர்கள் ஏறக்குறைய அவர்கள் எல்லோரையும் தங்களிடம் இழுத்துக் கொண்டார்கள். அதை செய்தித் தாள்களில் பார்த்தீர்களா?அவர்கள் நிச்சயம் அப்படி செய்தார்கள். கவலைப்படாதீர்கள், அது எல்லோரையும் உள்ளே இழுத்துக் கொள்ளப் போகிறது. ஏனெனில் அது பாப்டிஸ்டுகள், மற்றெல்லாரையும் ஒன்றாக இணைத்துக் கொண்டிருக்கிறது. அவர்களெல்லாரும் ஒன்றாயிருந்து, அதை அறியாமலிருக்கிறார்கள். சபைகளின் ஆலோசனை சங்கம் அவைகளை ஒன்றாக சேர்த்துக் கொண்டிருக்கிறது. ஸ்தாபனங்கள் தங்கள்... ஏன்? நீங்கள் ஏன் இங்கு தங்க விரும்புகிறீர்கள்? நீங்கள் இதை புறக்கணிப்பதனால் என்ன வித்தியாசம்? நீங்கள் உங்கள் ஸ்தாபனத்தின் பெயரை உபயோகித்துக் கொண்டு ஓரிடத்தில் இருக்கிறீர்கள். ஒன்று மிருகம் மற்றது முத்திரை, பார்த்தீர்களா? எனவே அதனால் வித்தியாசம் எதுவுமில்லை. 108அவன் அங்கு தான் சென்றிருக்கிறான். அவன் தன் அங்கீகார முத்திரையை அளித்துவிட்டான், அதை நீங்கள் பெற்றுக் கொண்டுவிட்டீர்கள். அது இப்பொழுது வெள்ளை மாளிகைக்கும் (White House), வாஷிங்டன் டி.சி.க்கும், சபைகளின் ஆலோசனை சங்கத்துக்கும் வழி நடத்திவிட்டது. நீங்கள் அங்கு செல்கிறீர்கள்! குருவானவர்களும் வேதம் கூறியுள்ளபடியே அதை ஏற்றுக் கொண்டுவிட்டனர். என்னே, கடிகாரம் இவ்வளவு வேகமாக செல்லாமலிருந்தால் நலமாயிருக்கும். நாம் எங்கிருக்கிறோம் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். இந்நாளுக்கான வாக்குத்தத்தங்களைப் பாருங்கள் - அவை மறுபடியுமாக புறக்கணிக்கப்பட்டன. எவ்வாறு இந்த ஸ்தாபன சபைகள் இந்த கடைசி காலத்தில் அவைகளைப் புறக்கணித்தன என்று பாருங்கள்! பொய்யான வெளிச்சம். அது முதிர்வடையாததன் காரணமே அந்த பொய்யான வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால். ஆகையால் தான் இந்த வார்த்தை... நீங்கள் அற்புதங்களைக் காண்பதில்லை. 109அண்மையில் ஒரு கத்தோலிக்க குருவானவர் என்னைச் சந்தித்து, “திரு. பிரான்ஹாமே, இந்த பெண்ணுக்கு எந்தவிதத்தில் ஞானஸ்நானம் கொடுத்தீர்கள்” என்று கேட்டார். அவர் குறிப்பிட்ட அந்த பெண் இந்த சபையைச் சேர்ந்தவள். அவள் பின்வாங்கிப்போய் ஒரு கத்தோலிக்க இளைஞனை மணந்து கொண்டு கத்தோலிக்க சபைக்குள் சேர்ந்துவிட்டாள். இவர் அவளை சபையில் ஏற்றுக் கொள்ளப்போனார். ''அவளுக்கு கிறிஸ்தவ ஞானஸ்நானம் கொடுத்தேன்“ என்றேன். அவர், ''பேராயர் அறிய விரும்புகிறார்“ என்றார். நான், “சரி, இந்த ஞானஸ்நானம் தான்” என்றேன். அவர், “நீங்கள் சத்தியம் பண்ணுவீர்களா?” என்று கேட்டார். “நான் சத்தியம் பண்ணுவதே கிடையாது” என்றேன். அவர் சொன்னார்... நான், “என் வார்த்தையை நீங்கள் நம்பாவிட்டால் பரவாயில்லை. நான் ஏன் சத்தியம் பண்ணுவதில்லை என்றால், வேதம், ''வானத்தின் பேரில் சத்தியம் பண்ண வேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். பூமியின் பேரிலும் சத்தியம் பண்ண வேண்டாம், அது அவருடைய பாதபடி. உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்'' என்று கூறியுள்ளது. எனவே நீங்கள் ''என் வார்த்தையை நம்ப வேண்டும்” என்றேன். அவர், “நீங்கள் கிறிஸ்தவ ஞானஸ்நானம்'' என்கிறீர்களே, ''அதன் அர்த்தம் என்ன? தண்ணீரில் முழுக்குவதா?” என்று கேட்டார். நான், ''அந்த ஒரு வகையில் மாத்திரமே கிறிஸ்தவ ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறது. அவளுக்கு நான் ஒஹையோ நதியில் ஞானஸ்நானம் கொடுத்தேன். அவளை நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தண்ணீரில் முழுக்கி வெளியே கொண்டு வந்தேன். அவளுக்கு நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தேன். அது ஒன்று மாத்திரமே கிறிஸ்தவ ஞானஸ்நானம்“ என்றேன். அவர், “சரி, ஐயா!” என்று சொல்லி அப்படியே எழுதிக் கொண்டார். அவர், “இது வினோதமாயுள்ளது. உங்களுக்குத் தெரியுமா, கத்தோலிக்க சபை முன்பு அந்த முறையில் தான் ஞானஸ்நானம் கொடுத்து வந்தது” என்றார். நான், “எப்பொழுது?” என்றேன். இப்படியாக விவாதம் தொடர்ந்து நடந்தது. அவர், “நல்லது, நாங்கள் தான் மூலக் கத்தோலிக்கர்” என்றார். 110அதை அறிந்தவனாய், ''அது சபை வரலாறு புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது என்பதை அறிந்தவனாய், அது உண்மை. ஆனால் நீங்கள் ஏன் அந்த முறையை இப்பொழுது பின்பற்றுவதில்லை“ என்று கேட்டேன். அவர், “பாவங்களை மன்னிக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு. இயேசு சீஷர்களிடம், 'எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ, அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ, அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும்' என்று கூறவில்லையா?'' என்றார். நான், ''ஆம், ஐயா! அவர் கூறினார்“ என்றேன். அவர், ''அப்படியானால் அது சபைக்கு அந்த அதிகாரத்தை அளிக்கிறதல்லவா? பேதுரு சபைக்குத் தலைவன்“ என்றார். நான், “பேதுரு செய்த விதமாய் சபை பாவங்களை மன்னிக்க வேண்டுமானால், 'இரட்சிக்கப்படுகிறதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று ஜனங்கள் கேட்ட பொழுது', அவன், 'நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்' என்றான். நீங்கள் அதை கைக் கொண்டால், நான் உங்கள் சார்பில் இருப்பேன்” என்றேன். அவர், “ஓ, நீங்கள் வேதாகமத்துக்காக முறையிடுகிறீர்கள்” என்றார். நான், ''அதுதான் தேவனுடைய வார்த்தை “ என்றேன். அவர், ''தேவன் தமது சபையில் இருக்கிறார்“ என்றார். நான், ''தேவன் தமது வார்த்தையில் இருக்கிறார். எல்லா மனிதருடைய வார்த்தையும் பொய், தேவனே சத்தியபரர்“ என்றேன். பாருங்கள்? 111எனவே நீங்கள் அந்த வழியில் தவிர வேறெந்த வழியிலும் செல்ல முடியாது (பாருங்கள்?). அவர்கள் இருளில் சென்று கொண்டிருக்கின்றனர். பிராடெஸ்டெண்டுகளும் ஆயிரக்கணக்கில் அதில் விழுந்து போயுள்ளனர். இதோ அவர்கள் தங்கள் கோட்பாடுகளையும் மற்றவைகளையும் கைக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்... ஆனால் வார்த்தையோ தன்னை வெளிப்படுத்தி நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர்களோ கோட்பாடுகளின் பொய்யான வெளிச்சத்தினால் அந்தகாரத்தில் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் நோவாவின் காலத்திலும் மற்றெல்லா காலங்களிலும் செய்தது போல, மறுபடியும் இப்பொழுது செய்து அந்த காலத்துக்குள் பிரவேசித்துவிட்டனர். ஏன்? கோட்பாடுகள் அவர்களைக் குருடாக்கிப் போட்டதால் அவர்கள் வெளிச்சத்தைப் புறக்கணிக்கின்றனர். ஓ, நாம் எப்படிப்பட்ட அந்தகார நேரத்தில் இப்பொழுது இருக்கிறோம்! ஆம், அவர்கள் கிறிஸ்துவின் உண்மையான நித்திய ஒளியைப் புறக்கணிக்கின்றனர். அது தான் அந்தகாரத்தில் ஆழ்த்தியுள்ளது. 112குளிரடைந்த ஸ்தாபனங்கள் தேவனுடைய வார்த்தைக்கு ஒருபோதும் ஜீவனைக் கொண்டு வரமுடியாது. அவை ஸ்தாபனங்களுக்கு ஜீவனைக் கொண்டு வருவதாயுள்ளன. இப்பொழுது கிறிஸ்தவர்களாகப் பாவனை செய்பவர்களை முன்னைக் காட்டிலும் அதிகம் நாம் பெற்றிருக்கிறோம்... இங்கு பாருங்கள், அவன் கிறிஸ்தவனானால்; நான் கத்தோலிக்க குருவானவரிடம், “உங்கள் சபை... கத்தோலிக்க சபை ரோமாபுரியிலுள்ள நிசாயாவில் இருந்தது போல் இராமல் ஆதியில் பெந்தெகொஸ்தே நாளில் இருந்தது போல இப்பொழுது இருக்குமானால் நான் உங்கள் சார்பில் இருப்பேன்” என்றேன். சபை ரோமாபுரியிலுள்ள நிசாயாவில் துவங்கவில்லை, அது பெந்தெகொஸ்தே நாளில் துவங்கினது. பாருங்கள்? சபை எருசலேமில் தான் துவங்கினது. நான் கத்தோலிக்க குருவானவரிடம், 113இங்கு நான் ஒப்புக் கொள்கிறேன், இந்த ஜனங்கள்... அந்த அடிமைகளும் மற்றவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றபோது. அவர்களுடைய எஜமான்கள் வல்லமையைக் கண்டனர், அவர்கள் என்ன செய்தனரென்று. அவர்கள் மரித்தோரை உயிரோடெழுப்பினர், அந்நிய பாஷைகள் பேசினர், பிசாசுகளைத் துரத்தினர். நடக்கப் போகும் காரியங்களை முன்னறிவித்தனர்... அவர்கள் மத்தியில் தீர்க்கதரிசிகள் எழும்பி ஆட்டுத் தோலை சுற்றினவர்களாய், மரக்கறி புசித்தவர்களாய், அந்த நிசாயா ஆலோசனை சங்கத்துக்கு வந்தனர்... பெரிய மனிதர்கள். அவர்கள் அந்த நிசாயா ஆலோசனை சங்கத்துக்கு வந்து தேவனுடைய வார்த்தைக்கு உறுதியாக நின்றனர். ஆனால் இரத்தம் சிந்தப்பட்ட அந்த பதினைந்து நாட்களில் ஆலோசனை சங்கத்தினர் இயேசு கிறிஸ்துவின் நாமம் என்னும் வேத உபதேசத்துக்கு பதிலாக பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பதை ஒரு கோட்பாடாக ஏற்றுக் கொண்டனர். அதிலிருந்து எல்லா பிராடெஸ்டெண்டு சபைகளும் தோன்றின. அவர்கள் அதற்குள் பிறந்தனர். அதே காரியம். இந்த மற்ற எல்லா காரியங்களும், பரிசுத்த ஆவியைக் குறித்த தவறான கருத்து போன்றவை; அவர்கள் இராப்போஜனம் அருந்தி, திராட்சரசம் குடித்து, அதை பரிசுத்த யூகாரிஸ்ட் என்கின்றனர். அப்படியென்றால் பரிசுத்த ஆவி என்று அர்த்தம். குருவானவர் அதை மக்களுக்கு கொடுக்கிறார். 114பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்த போது, கழுத்துப்பட்டையை திருப்பி உடுத்த குருவானவர் வந்து, ''உன் நாவை நீட்டி பரிசுத்த யூகாரிஸ்டை பெற்றுக்கொள்'' என்றார், என்று வேதம் கூறவில்லை. இல்லை! அது, நீங்கள் எல்லோரும் இங்கு ஓடி வந்து அந்நியோந்நிய ஐக்கியத்துக்கு அடையாளமாக எனக்கு வலது கை கொடுங்கள். பாப்டிஸ்டுகளே, மெதோடிஸ்டுகளே, ''உங்கள் பெயரை நான்... எங்கிருந்தாவது கடிதம் கொண்டு வாருங்கள்“ என்று கூறவில்லை. அவர்களெல்லாரும் ஒருமைப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். ''அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள். மரியாளும் மற்றவர்களும் ஆவியைப் பெற்ற விளைவினால் குடித்தவர்களைப் போல் தடுமாறி தெருக்களில் சென்றனர். ஜனங்கள், இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்“ என்று பரியாசம் பண்ணினதாக வேதம் கூறுகிறது. அப்படி பரியாசம் பண்ணினவர்கள் யார்? கோட்பாடுகளினால் குருடாக்கப்பட்டவர்கள். 115பேதுரு என்னும் பெயர் கொண்ட அந்த பிரபலம் இல்லாத பிரசங்கி எழுந்து நின்று, “யூதேயாவில் வாசம் பண்ணுகிறவர்களே... யூதர்களே, எருசலேமில் வாசம் பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவி கொடுங்கள். நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறி கொண்டவர்களல்ல. வேதம் என்ன கூறியுள்ளது என்பதை உங்களிடம் கூற விரும்புகிறேன். இது ஒளி! இது வார்த்தை வெளிப்படுதல்” என்றான். ஆமென்! அதே காரியம் இன்றைக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் அன்று செய்தது போல் இன்றும் தலையை துலுக்கி நடந்து சென்றுவிடுகின்றனர். அவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் குருடருக்கு வழி காட்டும் குருடராயிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் குழியிலே விழுவார்கள்“ என்று இயேசு கூறினார். 116ஓ, ஜீவ வார்த்தையை உறுதிப்படுத்துவதற்கு கிறிஸ்துவின் நித்திய ஜீவன் அவசியம். மாம்சமாதல்... ஓ, என் தேவனே! தேவனுடைய வார்த்தையை இயங்கச் செய்ய பரிசுத்த ஆவி அவசியம். இயேசு, “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்று கூறினார். இப்பொழுது, பாருங்கள், மாற்கு 16, அவருடைய கடைசி கட்டளை, “உலகமெங்கும் - உலகமெங்கும்...'' என்பதே. அது இன்னும் உலகமெங்கும் செல்லவில்லை. பாருங்கள்?... உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி (உலகமெங்கும்) ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன... (''அவர்கள் போதகருடன் கைகுலுக்குவார்கள் என்றா? இல்லை! அவர்கள் நல்ல சபை அங்கத்தினர்களாயிருப்பார்கள் என்றா?'' இல்லை!). என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள். ஓ, என்னே! எவ்வளவு தூரம்? சர்வ சிருஷ்டிக்கும். எவ்வளவு காலம்? அவர் வரும் வரைக்கும் உலகமெங்கும். இந்த அடையாளங்கள்... நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், ''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.“ 117ஓ, இதிலிருந்து நாம் எப்படி நடந்து சென்றுவிட முடியும் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முன்காலத்தில் இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது நாம் அதிக இருளில் இருக்கிறோம். நான் எழுதி வைத்த இன்னும் இரண்டு வசனங்கள் இங்குள்ளது. அதை கூறிவிட்டு கூடுமானவரையில் வேகமாக முடித்துவிடுகிறேன். அவர்களைக் காட்டிலும் நாம் அதிக இருளில் இருக்கிறோம். நான் ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் பிரசங்கித்து உங்களைக் களைப்பாக்கிவிட்டேன் என்று அறிகிறேன். ஆனால் பாருங்கள், இந்த ஒலிநாடா பல்வேறு இடங்களுக்குச் செல்கின்றது. பாருங்கள், பாருங்கள்? நாம் அவர்களைக் காட்டிலும் அதிக இருளில் இருக்கிறோம் என்று கூறினேன்... ஏன்? இந்த பொய்யான ஒளியில் சபைகள் மிகவும் வஞ்சகமுள்ளதாய் அமைந்திருந்து, அது உண்மையைப் போல் காணப்படுகிறது. மத்தேயு 24ல் இயேசு கூறவில்லையா... கடைசி நாட்களில் இரண்டு ஆவிகளும் ஒன்றுக்கொன்று மிகவும் நெருங்கியிருந்து கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் என்று இயேசு மத்தேயு 24ம் அதிகாரத்தில் கூறியுள்ளார். கடைசி நாட்களில் தெரிந்து கொள்ளப்பட்ட கூட்டம் ஒன்று வெளியே வந்து சபையாக உருவாகும். தாங்கள் கூறுவது சத்தியம் என்று சொல்லிக் கொள்ளும் இந்த ஸ்தாபனங்கள் உண்மையானதைப் போலவே காணப்பட்டு கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும், பெந்தெகொஸ்தேகாரரையும் கூட, வஞ்சிக்கும். 118நீங்கள் பெந்தெகொஸ்தேகாரன் ஒருவனை மெதோடிஸ்டு அல்லது பாப்டிஸ்டு உபதேசத்தினால் வஞ்சிக்க முடியாது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். அதை அவனிடம் எடுத்துக் கூறி அவனை உங்களால் வஞ்சிக்க முடியாது. அவனுக்கு அதைக் காட்டிலும் நன்றாகத் தெரியும். அவ்வாறே நீங்கள் ஒரு பாப்டிஸ்டை லூத்தரன் உபதேசத்தினால் வஞ்சிக்க முடியாது. பாருங்கள்? அது போன்று இந்த வார்த்தை செய்தியிலுள்ளவர்களை பொய்யான பெந்தெகொஸ்தே உபதேசமாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பதனாலும் இன்னும் அவர்கள் ஸ்தாபனங்களிலுள்ள மற்ற கோட்பாடுகளினாலும் வஞ்சிக்க முடியாது. முடியவே முடியாது! அவர்களை நீங்கள் வஞ்சிக்கவே முடியாது. ஏனெனில் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வஞ்சிக்கப்பட முடியாது. அது என்ன? அது என்ன? வஞ்சிக்கப்படுதல். இந்த பொய்யான வெளிச்சங்கள் என்ன செய்கின்றன? கொல்லப்படுவதற்கென்று அவை சபைகளை உலக சபைகள் ஆலோசனை சங்கத்துக்குள் வழி நடத்துகின்றன. அதுவும் ரோம சபையும் ஒன்றாக இணையும் போது. அதுவே முடிவான கொல்லப்படுதலாயிருக்கும். அவர்கள் மிருகத்துக்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கும்போது, அதுவே முடிவான கொல்லப்படுதல். இப்பொழுது நீங்கள் பொய்யான வெளிச்சங்கள் என்ன செய்கிறதென்பதை பாருங்கள். அது ஜனங்களை நடத்துகின்றது. அது ஒரு வெள்ளாடு. 119வெள்ளாடு எப்பொழுதுமே செம்மறியாடுகளை கொல்லப்படுவதற்கு நடத்திச் செல்கின்றது. ஆடுகளைக் கொல்லும் இடங்களில் நீங்கள் அதைக் கண்டிருக்கிறீர்கள். வெள்ளாடு செம்மறியாடுகளை அதுவரைக்கும் நடத்திச் சென்று, அவைகளை உள்ளே நுழையவிட்டு, அது குதித்து ஓடிவிடும். பாருங்கள்? அது எப்பொழுதும் அப்படித்தான் செய்கிறது. ரோம வெள்ளாடுகள் இயேசுவாகிய ஆட்டுக் குட்டியை அடிக்கப்படும்படிக்கு நடத்தி சென்றன. அது உண்மை! இன்றைக்கு ஸ்தாபன வெள்ளாடுகள் பேதைகளான செம்மறியாடுகளை அடிக்கப்படும்படிக்கு நடத்திச் செல்கின்றன. அவர்களுடைய பெயர்களை ஸ்தாபன புத்தகங்களில் அவர்கள் எழுதின மாத்திரத்தில் அவர்கள் முடிந்துவிடுகின்றனர். அது மிருகத்தின் முத்திரை. நான் கர்த்தருடைய நாமத்தினால் இதை உரைக்கிறேன். நான் நீண்ட காலமாக இக்கருத்தை உடையவனாயிருக்கிறேன். அது உண்மை. அது முற்றிலும் உண்மை. மிருகம் யார்? மிருகம் யார்? அது ரோம குருக்களாட்சி, முதல் ஸ்தாபனம். அதன் முத்திரை எது? அதே காரியம். அப்படியே! அது எப்படியோ அப்படியே. அடிக்கப்படுதல்... பொய்யான வெளிச்சத்தினால்... ஆனால் தற்போதைய இருளின் மத்தியிலும் தேவனுடைய வெளிச்சம் பிரகாசிப்பதை நாம் கண்டோம். அதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்! கூர்ந்து கவனியுங்கள்! நாம் அவருடைய வெளிச்சத்தை, இந்நாளுக்கென அவர் வாக்களித்த தமது வார்த்தை நிரூபிக்கப்பட்டு உறுதிப்பட்டதை (அது உண்மை!), இந்நேரத்துக்கான வெளிச்சத்தைக் கண்டோம். ஓ, என்னே! எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதில் தவறு எதுவும் இருக்கவில்லை. அது... 120அண்மையில் ஒரு போதகர் பிளாரிடாவுக்கு சென்றிருந்தபோது அங்கு நடந்ததைக் கூறினார். அவருக்கு ஒரு கார் இருந்தது (அது ஷெவர்லே என்ற நினைக்கிறேன்). அது நின்றுவிட்டது. அவரால் அதை பழுதுபார்க்க முடியவில்லை. அவர் பழுது பார்க்கும் இடத்துக்கு அதைக் கொண்டு சென்றார். அங்கிருந்த மெக்கானிக் காரின் கீழே படுத்தான், மேலே சென்றான், சுற்றிலும் சென்றான். அவனால் அதை ஓடச் செய்ய முடியவில்லை. அவன் இதை செய்து பார்த்தான், வேறெதையெல்லாமோ செய்து பார்த்தான், ஒன்றும் நடக்கவில்லை. அவன் 'ஜெனரேட்டரை' போட்டான், இதை போட்டான், 'ப்ளக்'கை போட்டான், பாய்ன்டுகளைப் போட்டான், என்ன செய்தபோதிலும் ஒன்றும் நடக்கவில்லை. முடிவில் நன்றாக உடுத்த ஒருவர் அங்கு வந்தார். அவர், “நான் ஆலோசனை கூறலாமா?” என்று கேட்டார். “சரி, ஐயா!” என்று சொல்ல மெக்கானிக்குக்கு போதிய அறிவு இருந்தது. அவர், இதை எடுத்துக்கொள், அதை இத்தனை முறை அதிகரித்துக்கொள், இதை எடுத்துக் கொள். இதையெல்லாம் ஒன்று சேர்த்து அது ஓடுகிறதா என்று பார்“ என்றார். அவன் அவர் சொன்னபடியே அத்தனை முறை அதிகரித்து, எல்லாம் ஒன்றாக சேர்த்தான். கார் ஓடினது. அந்த மெக்கானிக் அவரிடம் திரும்பி, “நீங்கள் யார்?'' என்று கேட்டான். அவர் தான் பொறியாளர். ஜெனரல் மோட்டார்ஸ் நிர்வாகத்தினரின் தலைமை பொறியாளர். அவர் தான் அந்த காரை உண்டாக்கினவர், அதை எப்படி உருவாக்குவதென்று படம் வரைந்து கொடுத்தவர். (Designer) 121இன்றைக்கு நாம் மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்களைக் குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது, தலைமை மெக்கானிக், அவருடைய வார்த்தையை உருவாக்கினவர், வானத்தையும் பூமியையும் படைத்தவர், அவருடைய சபையை உருவாக்கினவர் இங்கிருக்கிறார். எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு எது அவசியமென்று அவருக்கு அதிகம் தெரியுமா, அல்லது மெதோடிஸ்டு பாப்டிஸ்டு சபைகளுக்கு அதிகம் தெரியுமா? அவர் தான் உருவாக்கினவர். எது அவசியமென்று அவருக்குத் தெரியும். அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையினால் அவர் நன்றாக உடுத்திருக்கிறார். அல்லேலூயா! அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையைக் கொண்டவராய் அவர் நமது மத்தியில் நடந்து கொண்டிருக்கிறார். சபையை எடுத்துக் கொள்ளப்படுதலின் ஒழுங்குக்கு கொண்டு வர என்ன அவசியம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். அதை உருவாக்க அவர் படம் வரைந்து, அதன் பாகங்களை வேதாகமத்தில் ஒன்றாக சேர்த்திருக்கிறார். ஆமென்! மின்சாரத்தை அதன் வழியாக பாயச் செய்து அது எப்படி இயங்குகிறது என்பதைப் பாருங்கள். அவர் இன்றைக்காக வாக்களித்துள்ள வார்த்தையின் பேரில் நீங்கள் கொண்டுள்ள விசுவாசம் பாயும்படி செய்யுங்கள், அப்பொழுது அது எப்படி இயங்குகிறதென்பதை காண்பீர்கள். ஏன்? அவர்தான் அதை உருவாக்கினார். அவர் வார்த்தை என்னும் வரைபடத்தின் மூலம் தமது சபையை உருவாக்கினார். ஆகையால் தான் அவர் தமது வார்த்தையின் மூலம் ஒன்று சேர்க்கிறார், மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் அல்லது பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தின் மூலம் அல்ல. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்”, ஆம், ஐயா! 122அந்த பொய்யான வெளிச்சங்களிலிருந்து அகன்று வாருங்கள். இந்த இருளின் மத்தியில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இருள் நேரத்தின் மத்தியில், மணவாட்டியை வெளியே கொண்டு வருவது யார்? யாருக்கு அதை குறித்து தெரியும்? தலைமை டிசைனருக்கு. ஓ, ஆமாம்! இந்த எல்லா பொய்யான வெளிச்சத்தின் குழப்பத்திலிருந்து... மெதோடிஸ்டுகள் ஒரு பக்கம் பொய்யான வெளிச்சம் வீசுகின்றனர், பாப்டிஸ்டுகள் வேறொரு பக்கம், பிரஸ்பிடேரியன்கள் மற்றொரு பக்கம், பெந்தெகொஸ்தேகாரர் மற்றொரு பக்கம், இப்படியாக சுற்றிலும் பொய்யான வெளிச்சங்கள்... இந்த பொய்யான வெளிச்சத்தின் காரணமாக ஜனங்கள் ஓரிடம் ஓடிச் சென்று தங்கள் பெயர்களை பதிவு செய்கின்றனர், பின்பு வேறெதையோ கண்டு மற்றொரு ஸ்தாபனத்துக்கு சென்று, இப்படியாக ஸ்தாபனத்துக்கு ஸ்தாபனம் அலைகின்றனர்... நான் அந்த கத்தோலிக்க குருவானவரிடம், “நீங்கள் மூல சபையாயிருந்து, நிசாயாவில் மனிதனால் உண்டாக்கப்பட்ட உபதேசங்களுக்குப் பின்னால் சென்றீர்கள். இல்லையென்றால், உங்களுக்கு ஏன் அவர்களுக்கு ஆதியில் இருந்த வல்லமை இல்லை? அவர்கள் செய்த அற்புதங்களை, இயேசு செய்த அற்புதங்களை நீங்கள் ஏன் செய்வதில்லை?” என்று கேட்டேன். அவர், “ஓ, இப்பொழுது எங்களிடம் முன்னைக் காட்டிலும் அதிகம் பேர் உள்ளனர். நாம் வேறொரு காலத்தில் வாழ்கிறோம்” என்றார். நான், ஆனால் வார்த்தை மாறுவதில்லையே. அவர், ''இந்த அடையாளங்கள் எல்லா காலங்களிலும் அவர்களைத் தொடரும். வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை'' என்று கூறியிருக்கிறாரே என்றேன். அதுதான்! அவர், “நீங்கள் வேதத்தைக் குறித்து பேசுகிறீர்கள்” என்றார். நான், ''ஆம், கிறிஸ்துவாகிய வார்த்தையைக் குறித்து“ என்றேன். அது உண்மை. எனவே பார்த்தீர்களா?பாருங்கள்? 123இந்த பொய்யான வெளிச்சத்தில் மெதோடிஸ்டுகள் தங்களுடையதையும், பாப்டிஸ்டுகள் தங்களுடையதையும், பிரஸ்பிடேரியன்கள் தங்களுடையதையும் காண்பிக்கின்றனர். அது ஒவ்வொன்றும் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகிறது. ஆனால் ஏழை மணவாட்டி, அவள் எங்கிருக்கிறாள்? அவள் சிறிது காலம் பெந்தெகொஸ்தே ஒருத்துவத்தில் இருந்து அவளுடைய பெயரை அங்கு பதிவு செய்தாள். அவள், “நாம் சொல்லப்போனால், அவர்கள் என்ன செய்கிறார்கள் பாருங்கள்” என்றாள். அவர்கள் இங்கு வந்து, ''நீங்கள் எங்களைச் சேர்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் மணவாட்டியில் இல்லவே இல்லை. நீங்கள் ஒன்றுமே இல்லை“ என்கிறார்கள். நீங்கள் அசெம்பளீஸ் ஸ்தாபனத்துக்கு சென்று பார்ப்பீர்களானால், அங்கும் அதேதான். பாப்டிஸ்டுகளிடம் சென்று அவர்களிடம் என்ன உள்ளதென்று பாருங்கள்... ஏழை மணவாட்டிக்கு என்ன நேரிடப் போகிறது? பாருங்கள்? அவள் நிச்சயம் தோன்றுவாள்; நீங்கள் கவலைப்படாதீர்கள். அவள் அங்கிருப்பாள். 124இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் என்னிடம் இதை கூறினார். அவர் நியூ மெக்ஸிகோவில் வசித்து வந்தார். நான் அங்கு கார்ல்ஸ்பாட் குகைகள் அருகில் ஒரு கூட்டம் நடத்தினேன். அந்த பிரபலமான குகைகளைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்... அவர்கள் ஒரு மனிதனையும், அவன் மனைவியையும், பிள்ளைகளையும் ஒரு எலிவேட்டரில் கொண்டு சென்று குழியின் ஆழத்தில் இறக்கினர். அவர்கள் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டனர். அப்பொழுது நள்ளிரவு இருள்போன்ற இருள் அங்கு உண்டானது (ஒரு முறை கொலராடோவிலுள்ள தோட்டத்திற்கு நானும் மனைவியும் சென்றிருந்த போது, அவர்களுடன் அப்படி செய்யும்படி கூறினேன். அவர்கள் விளக்குகளை அணைத்தபோது என்னே, உங்கள் கையை இப்படி முன்னால் நீட்டினால், அதை பார்க்க முடியாத அளவுக்கு இருள் சூழ்ந்திருந்தது). அங்கு ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தாள். அவள் இருளைக் கண்டு மிகவும் பயந்து 'ஓ'வென்று அலறினாள். அவள் கையை எல்லாவிடங்களிலும் நீட்டி ஏதாவதொன்றைப் பிடிக்க முயன்று, தன் தகப்பனுக்காவும் தாய்க்காகவும் அலறத் தொடங்கினாள். அந்த இருளை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவள் அப்படிப்பட்ட இருளைக் கண்டதேயில்லை. 125இப்பொழுது அதே விதமாகத் தான் உள்ளது. அது உண்மை! மிகவும் இருளாயிருப்பதால், எங்கு செல்வதென்று உங்களுக்குத் தெரியவில்லை. நீங்கள். மெதோடிஸ்டுகளிடம் செல்கிறீர்கள், பாப்டிஸ்டுகளிடம் செல்கிறீர்கள், பிரஸ்பிடேரியன்களிடம் செல்கிறீர்கள், எல்லாம் ஒரே போல் உள்ளது. பாருங்கள்? அவர்கள் புழுக்கள் நிறைந்த அழுகிப்போன மன்னாவைப் புசித்துக் கொண்டிருக்கின்றனர். பாருங்கள், அதே காரியம். “நீங்கள் வந்து இதை சேர்ந்து கொள்ளுங்கள், அதை சேர்ந்து கொள்ளுங்கள்”என்னும் ஏதோ ஒரு பழைய கோட்பாடு. அதில் நீங்கள் கிறிஸ்துவைக் காண்பதில்லை. ஓ, நீங்கள் சுயநீதியுள்ள ஜனங்களைக் காண்கிறீர்கள். இப்பொழுது அந்த ஸ்தாபனங்களில் அநேக நல்லவர்கள் இருக்கின்றனர். நான் முறைமையைக் குறிப்பிடுகிறேன், அதிலுள்ள ஜனங்களையல்ல. ஆனால் பாருங்கள், அதைதான் அவர்கள் புசித்துக் கொண்டிருக்கின்றனர். அதைக் குறித்து அவர்களிடம் கூறுங்கள். இங்கு புதிய ஆகாரம் உள்ளது! 126இந்த சிறுமி அங்கு நின்று கொண்டு, மணவாட்டி செய்வது போல், பைத்தியம் பிடித்தவள் போல் உரக்க அலறினாள். ஆனால் என்ன தெரியுமா, அவளுடைய தம்பி அவளிடம், “அக்கா, பயப்படாதே (ஏனெனில் அவன் பொறியாளர் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான்) விளக்குகளை போடக்கூடிய ஒரு மனிதன் இங்கிருக்கிறார்” என்றான். பயப்படாதே சகோதரியே, விளக்குகளை போடுவதற்கு இங்கு ஒரு மனிதன் இருக்கிறார். அவரால் இந்த வார்த்தையை ஜீவிக்கும்படி செய்ய முடியும். அவர் எப்படி வரப்போகிறார் என்றும், எப்பொழுது வரப்போகிறார் என்றும் நமக்குத் தெரியாது. அதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவர் இங்கிருக்கிறார். அவரால் விளக்குகளைப் போட முடியும். இங்கிருந்து நாம் எப்படி வெளியேறப் போகிறோம்? எனக்குத் தெரியாது, ஆனால் அவர் இங்கிருக்கிறார், விளக்குகளைப் போடக் கூடியவர் அவரே. ஆம், ஐயா! அவரே; அவர் ஒளியாயிருக்கிறார். அவர் தம்மை வெளிப்படுத்துகிறார்; அப்படித்தான் அவர் விளக்கைப் போடுகிறார். முற்றிலும் உண்மை. அவருடைய வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்ய கிறிஸ்து அவசியம், அப்பொழுது எல்லா இருளும் சிதறுண்டு போகிறது. அவர் பிரிக்கிறார்; “என் நாமத்தினிமித்தம் புறஜாதிகளிலிருந்து ஒரு கூட்டம் ஜனத்தை தெரிந்து கொள்வேன். அவர்கள் என் நாமத்தை தரித்திருப்பார்கள்” என்று சொல்லி அவர் மணவாட்டியை வெளியே இழுத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய நாமம் என்ன? மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், லூத்தரன் அல்ல - இயேசு கிறிஸ்து. அது உண்மை. 127அவர் ஒளி, சத்தியம், ஒளி. அவரில் எந்த இருளும் இல்லை. அவர் உள்ளே வரும்போது இருளை சிதறப் பண்ணுகிறார், ஏனெனில் அவர் வார்த்தையாயிருக்கிறார். வார்த்தையே வெளிச்சம். ஏனெனில் அவர், “வெளிச்சம் உண்டாகக் கடவது என்று உரைத்தார். அந்த வார்த்தை வெளிச்சமாயிற்று. அவர் இதை பேசும்போது, அது ஒவ்வொரு முறையும் அந்தந்த காலத்து வெளிச்சமாயிற்று. அவர் இங்கு பொய்யான வெளிச்சத்தில் வாசம் செய்யவில்லை (ஜனங்கள் தாம் பொய்யான வெளிச்சத்தில் வாசம் செய்கின்றனர்). அவர் உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையாயிருக்கிறார். அவர் இருள் நேரத்தில் முற்றிலும் வெளிச்சமாயிருக்கிறார். ஆம், ஐயா! இந்த பொய்யான வெளிச்சங்களும் மற்றவைகளும் மறைந்துவிடும். ஆம், ஐயா! அவர் இங்கிருக்கிறார். பயப்படாதீர்கள்! அவர் விளக்குகளை போடும்போது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அவருடைய வார்த்தை ஜீவிக்கிறது. அது செய்கிறது... ''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை... தானும் செய்வான்” அது வார்த்தை. “பிதா என்னை அனுப்பினது போல், நான் உங்களை அனுப்புகிறேன். அவரை அனுப்பின பிதா அவருக்குள் வந்தார். உங்களை அனுப்பும் இயேசு உங்களுக்குள் வருகிறார். அவர் அப்பொழுது செய்த அதே கிரியைகளை இப்பொழுதும் செய்கிறார். ஏன்? வார்த்தை மாம்சமாகி, மாம்ச சரீரத்தில் இந்நாளின் வெளிச்சமாக தன்னை வெளிப்படுத்துகிறது. அது தான். அது வெளிச்சத்தில் ஜீவனுக்குப் போகும் வழியைக் காண்பிக்கிறது. கோட்பாடுகளினாலும் ஸ்தாபனங்களாலும் குருடாக்கப்படாத ஞானவான்கள் அந்த வெளிச்சத்தில் நடப்பார்கள். ஓ, என்னே! 128விளக்குகளை போடக்கூடிய மனிதன் இங்கிருக்கிறார் என்பது சரியே. அவர் என்ன செய்கிறார்?இந்நாளுக்கான அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்நாளுக்கான வார்த்தையை வாக்களித்த தேவனுடைய குமாரனாகிய இயேசு நம்முடன் கூட இருக்கிறார். பயப்படாதீர்கள். அவர்கள் செய்து கொண்டிருப்பவைகளுக்கு கவனம் செலுத்தாதீர்கள். நீங்கள் அப்படி செய்தால், இருளில் நடக்கிறவர்களாயிருப்பீர்கள். ஞானமுள்ளவர்களாயிருங்கள்! “ஞானவான்கள் கடைசி நாட்களில் அவர்களுடைய தேவனுக்கு சிறந்த காரியங்களைச் செய்வார்கள்'' என்று தானியேல் கூறியுள்ளான். அவர் ஒளியாயிருக்கிறது போல அவர்களும் ஒளியில் நடப்பார்கள். கவலைப்படாதீர்கள்; இருளாயிருக்கலாம், அவர்கள் ஒவ்வொருவரையும் கட்டாயப்படுத்துவார்கள் என்பது போல் தோன்றுகிறது... இவையனைத்தும்... பிரகடனம் சென்று கொண்டிருக்கிறதை நீங்கள் காண்கிறீர்கள். இந்த சிறு சபைகள் அனைத்தும் இப்பொழுது உள்ளே வர வேண்டும். நீங்கள் உலக சபைகளின் ஆலோசனை சங்கத்துக்குள் வரவேண்டும், இல்லையென்றால் அவர்கள் உங்களை மூடிவிடுவார்கள். அவர்கள் அப்படி செய்யப் போகிறார்கள். அதை இன்றிரவு ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறோம். அந்த நேரத்துக்கு வரும்போது. பாருங்கள்? 129இப்பொழுது நாம் முடிக்கப் போகிறோம். நீங்கள் அவர்களில் ஒருவராயிருக்க வேண்டும் அல்லது இல்லாமல் இருக்க வேண்டும். நீங்கள் அதற்குள் போக வேண்டும், இல்லையென்றால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது, வாங்கவும் விற்கவும் கூட முடியாது. அது உண்மை! நீங்கள் வியாதியஸ்தருக்கு ஜெபம் செய்ய துணிச்சல் கொள்ள முடியாது. நீங்கள் வியாதியஸ்தருக்கு ஜெபிக்கும்போது அல்லது வேறெந்த ஆவிக்குரிய காரியத்தில் ஈடுபட்டிருக்கும்போது பிடிபட்டால், நாட்டின் சட்டப்படி உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். அது முற்றிலும் உண்மை. அது உங்களுக்குத் தெரியும். அது உண்மை. அது செய்தித் தாள்களில் வெளியிடப்பட்டிருந்தது. ஆம், ஐயா! எனவே உங்களால் அதை செய்ய முடியாது. நீங்கள் அந்த மதக் கொள்கையை (cult) சேர்ந்திருக்க வேண்டும். சகோதரனே, உன்னிடம் ஒன்று கூற விரும்புகிறேன், இப்பொழுதே கிறிஸ்துவை உன் இருதயத்தில் ஏற்றுக் கொள்வது நலம். ஏனெனில் அவர் உனக்கு உண்மையில் தேவையாயுள்ள ஒரு நேரம் வரப் போகிறது. அப்பொழுது அவரை நீ ஏற்றுக் கொள்ளாமல் இருப்பாயானால், அந்த முத்திரை உன் மேல் போடப்படும். அவளோ இவ்விடம்விட்டு நிரந்தரமாய் சென்றிருப்பாள் என்பதை ஞாபகம் கொள். எனவே அதை செய்யாதே, அவர்கள் சொல்வதை நம்பாதே. இப்பொழுதே வார்த்தையாகிய கிறிஸ்துவுக்குள் நுழைந்து கொள். ஆம், ஐயா! அது வார்த்தையை உறுதிப்படுத்தி அது இந்நேரத்துக்கான வெளிச்சம் என்பதைக் காண்பிக்கிறது. அப்படித்தான் அவர் ஒளியாயிருக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். ஏனெனில் அவர் மாம்சத்தில் தம்மை வெளிப்படுத்தும் ஒளியாயிருக்கிறார். நமக்கு எப்படித் தெரியும்? அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனுடைய வார்த்தையாயிருந்தார். பாருங்கள்? தேவனுடைய வார்த்தை தன்னை காண்பித்து அவரை உறுதிப்படுத்தினது. மேசியா வரும்போது, அவர் என்ன செய்வார்? 130கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீ, ''மேசியா வரும்போது இவைகளைச் செய்வார். இவைகளை எங்களுக்கு முன்னறிவிக்கும் நீர் வார்த்தையாகிய தீர்க்கதரிசியாயிருக்க வேண்டும்“ என்றாள். அவர், “நானே அவர்” என்றார். பாருங்கள்? அது போதுமானதாயிருந்தது. வெளிச்சம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின் மேல் பிரகாசித்தது. அங்கு ஒரு வெளிச்சம் உள்ளது. அவள் ஊருக்குள்ளே ஓடி, “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள். அவர் மேசியா அல்லவா? என்றாள். அது தான். பாருங்கள்? மற்றவர் என்ன கூறின போதிலும், அவர் மேசியா என்பதை அறிந்து கொண்டாள். ஞாபகம் கொள்ளுங்கள், ஒவ்வொரு காலத்திலும் இருளின் நேரத்தில், இருளிலிருந்து வெளிச்சத்தை பிரிக்க தேவன் தமது வார்த்தையை வைத்திருந்தார். லூத்தரின் காலத்தில் கத்தோலிக்க சபை ஆதிக்கம் பெற்றிருந்தபோது அவர் அதை வைத்திருந்தார். அவர் லூத்தரை அப்பொழுது பிரகாசிக்கிற வெளிச்சமாக அனுப்பினார். லூத்தர் இருளிலிருந்து சத்தியத்தைப் பிரித்தார். லூத்தரன்கள் எல்லாவற்றையும் குழப்பினபோது, அவர் ஜான் வெஸ்லி என்னும் ஒருவரை எழுப்பினார். அவர் இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரித்தார். பெந்தெகொஸ்தே நாட்களில் வெஸ்லியன்கள், மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் அனைவரும் தங்கள் ஸ்தாபனங்களுடன் ஒட்டிக் கொண்டபோது, அவர் இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரிக்க பெந்தெகொஸ்தே செய்தியை அனுப்பினார். பெந்தெகொஸ்தேகாரர் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, கோட்பாடுகளையும் மற்றவைகளையும் ஏற்படுத்திக் கொண்டு மறுபடியும் இருளில் சென்றனர். இப்பொழுது இந்த வார்த்தை உறுதிப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே அவர் வெளிச்சத்தை அனுப்பி வார்த்தை வெளிப்படும்படி செய்கிறார். அவர் ஆதியில் செய்தது போல வார்த்தையை அனுப்புகிறார், அது தன்னை நிரூபிக்கிறது. வெளிச்சம் உண்டாகிறது. அவர் எப்பொழுதுமே பிரிக்கிறார். தொடக்கத்தில் நித்திய ஜீவன் இருந்தது போல இப்பொழுதும் உள்ளது. 131பிள்ளைகளே, பார்க்கும்போது... அளிக்கப்பட்ட நேரத்தில் ஐந்து நிமிடம் அதிகமாகிவிட்டது. இந்த ஒன்றைக் கூற விரும்புகிறேன். இங்கு ஒரு மனிதன் இருக்கிறார். யார் என்ன கூறின போதிலும் பயப்படாதீர்கள். அடுத்தபடியாக என்ன செய்ய வேண்டும் என்னும் நிலைக்கு நான் வந்திருப்பதைக் காண்கிறேன், ஆனால் அவர் எப்பொழுதும் பிரசன்னமாயிருக்கிறார். அவருடைய என்றென்றும் தவறாத பிரசன்னம் எப்பொழுதும் உள்ளது. அவரால் விளக்கை போட முடியும். ஆம், ஐயா! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று காண அவர் காத்துக் கொண்டிருக்கிறார். அவர் விரும்பும் எந்த நேரத்திலும் 'ஸ்விட்ச்'சை போட முடியும். ஆம். ஐயா! விளக்குகளை எரியச் செய்யக் கூடிய ஒரு மனிதன் இங்கிருக்கிறார். மரண நிழலின் இடங்களில் உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள், சிலர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சிலர் ஸ்தாபன மரணத்திலும், சிலர் கோட்பாடுகளின் மரணத்திலும், சிலர் பாரம்பரியங்களின் மரணத்திலும், எல்லாவிதமான மரணத்திலும் சிக்குண்டவர்கள், பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். அப்பொழுது வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்த அதே மனிதன் தான் ஆதியில் “வெளிச்சம் உண்டாகக் கடவது'' என்று சொன்னவர். நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிற அதே தேவன் இன்றைக்கு, இப்பொழுது பிரசன்னராயிருக்கிறார். பயப்படாதீர்கள். அவர் விளக்குகளை எரியச் செய்வார். உபத்திரவம் வரும்போது பயப்படாதீர்கள். அவர் தமது ஜனங்களை எடுத்துக் கொண்டு செல்வாரென்று வெளிச்சம் கூறியுள்ளது. அவள் உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து செல்வதில்லை. அவள் ஒரு போதும் செல்வதில்லை. அவள் உபத்திரவ காலத்தில் பிரவேசிப்பதில்லை என்று அவர் கூறியுள்ளார். அவள் எடுத்துக் கொள்ளப்படுவாள். ”சகோ. பிரான்ஹாமே, அவர்கள் எப்படி செல்லப் போகிறார்கள், மிகவும் இருளாயுள்ளதே!“ அது எவ்வளவு இருளாயிருந்த போதிலும், உங்களுக்கு முன்னால் உங்கள் கையை நீட்டினால் உங்களால் காண முடியாத அளவுக்கு இருளாய் இருந்தாலும் விளக்குகளை எரியச் செய்யக் கூடிய ஒரு மனிதன் இங்கிருக்கிறார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர் அந்த சபையை எடுத்துக் கொள்ளப்படுதலில் கொண்டு செல்வார். நீங்கள், “நல்லது, நான் அதுவரைக்கும்...'' எனலாம். 132ஆம், சாத்ராக், மேஷாக், ஆபெத்நேகோ எரிகிற அக்கினிசூளை வரைக்கும் வந்து அதில் போடப்பட்டனர். ஆனால் காற்று வீசச் செய்யக் கூடிய ஒரு மனிதன் அங்கிருந்தார், ஆம், ஐயா! பெந்தெகொஸ்தே நாளில் இறங்கி வந்த அதே பலத்த காற்றை அவர் சூளையில் இறங்கப் பண்ணி, காற்று வீசச் செய்து, அக்கினி அவர்கள் மேல் படாமல் அதை தூர நீக்கினார். அங்கு ஒரு மனிதன் இருந்தார். அவர் நாலாம் ஆள் என்று அழைக்கப்பட்டார் (தானி. 3:25). இன்றைக்கு இங்கு ஒருவர் இருக்கிறார். அவர் ஒருவர் மாத்திரமே! அல்லேலூயா! விளக்கின் 'ஸ்விட்ச்' அவர் கையில் உள்ளது. மரண நிழலின் இடங்களில் இருப்பவர்களிடம் பெரிய வெளிச்சம் தோன்றியுள்ளது. அதை புறக்கணிக்காதீர்கள். அதை கர்த்தரின் நாமத்தினால் ஏற்றுக் கொள்ளுங்கள். நாம் சற்று நேரம் தலைவணங்குவோம்: நாம் ஒளியில் நடப்போம்! அழகான ஒளியில்! இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு வந்து இயேசுவே, உலகத்தின் ஒளியே இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் பிரகாசியும். நாம் ஒளியில் நடப்போம்! அது மிகவும் அழகான ஒளி இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது இயேசுவே, உலகத்தின் ஒளியே இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் பிரகாசியும் ஒளியின் பரிசுத்தவான்களே, நீங்கள் வந்து இயேசுவே உலகத்தின் ஒளி என்று பிரஸ்தாபியுங்கள் அப்பொழுது பரலோகத்தின் மணிகள் இயேசுவே உலகத்தின் ஒளி என்று ஒலிக்கும் (அது என்ன? உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையே இன்றைய இயேசு; அவர் வார்த்தையாயிருக்கிறார்) நாம் ஒளியில் நடப்போம்! அது மிகவும் அழகான ஒளி! இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது இயேசுவே, உலகத்தின் ஒளியே ஓ, இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் பிரகாசியும். 133உங்கள் தலைகள் வணங்கியிருக்கும் இந்நேரத்தில் உங்களில் எத்தனை பேர் பரிசுத்த ஆவியின் தலைமையில் இந்த ஒளியில், இந்நாளின் உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையில் (பாருங்கள்?), தேவன் இந்நாளுக்கென வாக்களித்துள்ள வார்த்தை வெளிப்படுவதைக் கண்டு அதில் நடக்க விரும்புகிறீர்கள்? அவர் ஆதியில் அப்படித்தான் இருந்தார் அல்லவா? அவர் வார்த்தையாயிருந்தார். குமாரன் பிறந்தபோது, அவர் வார்த்தையாயிருந்தார், அவர் மேசியாவாயிருந்தார், அவர் உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையாயிருந்தார். எனவே வார்த்தை... தேவன் தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் வார்த்தையை உரைத்தார். எனவே இந்நாளுக்கென ஒரு வார்த்தை உள்ளது. அவர் குழப்பம், இருள், பொய்யான ஒளி இவைகளின் மத்தியில் அந்த வார்த்தையை இங்கு உறுதிப்படுத்துகிறார். மற்றவை காண்பதற்கு அது போல் உள்ளது. ஆனால் அது அதுவல்ல. அது அதுவென்று தன்னை நிரூபிப்பதில்லை. குற்றம் கண்டு பிடிப்பவன்... 134இயேசு, “நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்தினால், நீங்கள் அவைகளை யாராலே துரத்துகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவைகளைத் துரத்தவில்லை. பாருங்கள்? “நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே” என்றார். (லூக். 11 20). பாருங்கள்? ஓ, அதை நாம் சிந்தித்தவர்களாய், நமது கரங்களை மெதுவாக உயர்த்தி, அமைதியாக சந்திப்போம். நாம் ஒளியில் நடப்போம் இது மிகவும் அழகான ஒளி! இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது (உங்கள் அறிக்கையை செய்யுங்கள்; தேவனை இப்பொழுது விசுவாசியுங்கள்) இயேசுவே, உலகத்தின் ஒளியே இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் பிரகாசியும் நாம் ஒளியில் நடப்போம்! அது மிகவும் அழகான ஒளி! இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது இயேசுவே, உலகத்தின் ஒளியே இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் பிரகாசியும். 135அவர்கள் தொடர்ந்து இசைத்துக் கொண்டிருக்கும் போது, நான் கேட்க விரும்புகிறேன்... ஒவ்வொரு காலத்திலும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. நோவாவின் காலத்தில் வெளிச்சத்தைப் புறக்கணித்தவர்கள் என்ன செய்தனர்? தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குள் நடந்தனர். எரிகிற முட்செடியிலிருந்த ஒளியின் காலமாகிய மோசேயின் காலத்தில் பார்வோனுக்கு என்ன நேர்ந்தது? அவன் மரணக்கடலுக்குள் நடந்தான். பிரயாணம் செய்யத் தொடங்கி பின்பு வெளிச்சத்தைப் புறக்கணித்த தாத்தானுக்கு என்ன நேர்ந்தது? அவன் பூமியின் பிளவுக்குள் நடந்தான், அது அவனை விழுங்கினது. ஒவ்வொரு காலத்திலும் அந்நாளுக்கான வெளிச்சத்தில் நடக்கத் தவறினவர்களுக்கு என்ன நேர்ந்தது? அது எல்லா காலங்களிலும் இயேசு. அந்த மனிதர்களின் காலத்தில் அது இயேசு. அது இன்றைக்கும் இயேசு. ஏனெனில் அவர் வார்த்தையாயிருக்கிறார், வார்த்தை தான் வெளிச்சத்தை உண்டாக்குகிறது. இது இந்நாளின் வெளிச்சம். நாம் பாடும் போது இதை அமைதியாக சிந்தித்து, “நான் ஒளியில் நடக்கிறேனா” என்னும் கேள்வியை உத்தமத்துடன் உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். (சகோ. பிரான்ஹாம் மௌனமாக இசைக்கிறார்) அழகான ஒளி! இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது ஓ, இயேசுவே, உலகத்தின் ஒளியே இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் பிரகாசியும். 136இப்பொழுது நாம் எழுந்து நிற்போம். இங்குள்ளவர்களின் இருதயங்களிலும், இதை ஒலிநாடாவில் கேட்கப் போகிறவர்களுடைய இருதயங்களிலும் இந்த செய்தி ஆழமாகப் பதிய வேண்டுமென்று பரலோகப் பிதாவை நோக்கி வேண்டிக் கொள்கிறேன். விதையாகிய வார்த்தையின் மேல் வெளிச்சம் வீசி, வெவ்வேறு பொய்யான வெளிச்சங்களிலும் ஸ்தாபனங்களிலும் விதைக்கப்பட்டுள்ள முன்குறிக்கப்பட்ட ஒவ்வொரு வித்தையும் விளையச் செய்வதாக. அவர்கள் இரவிலே வர வேண்டியவர்களாயிருந்தாலும் நிக்கொதேமுவைப் போல் காண்பார்களாக. வெளிச்சத்துக்கு வாருங்கள்! பிதாவே, இதை அருளும். கைகளால் பெயர்க்கப்படாத இந்த கல் மலையிலிருந்து உருண்டு வருவதாக. அது எல்லா புறஜாதி ராஜ்யங்களையும் ஆவிக்குரிய ராஜ்யங்களையும் உலக ராஜ்யங்களையும் தரையோடு நசுக்கி, முழு உலகத்தையும் நிரப்பும். அது சுத்திகரிக்கப்பட்ட விவகாரமாயிருக்கும். அந்த கல் யாரை நசுக்குகிறதோ அவர்கள் தவிடு பொடியாவார்கள். அந்தக் கல்லின் மேல் விழுகிறவர்களுக்கு அது திடமான அஸ்திபாரமாய் இருக்கும். 137ஓ, கிறிஸ்துவே, உமது ஊழியக்காரன் என்னும் முறையில் நான் இந்தக் கல்லின் மேல், உமது வார்த்தையாகிய கல்லின் மேல், மரிப்பேனாக. தேவனாகிய கர்த்தாவே, தாவீதும் தாவீதுக்காக அவனோடு கூட நின்ற போர் வீரர்களும் நின்றது போல் நானும் நிற்பேனாக. இந்த வார்த்தை ஸ்தாபனங்களால் புறக்கணிக்கப்பட்டு எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கியிருப்பதை நான் காணும்போது, அந்த வார்த்தைக்காக நான் உறுதியாய் நிற்பேனாக. ஓ தேவனே, நான் நிற்பதற்கு எங்களுக்கு பெலனும் தைரியமும் பரிசுத்த ஆவியும் அருளுவீராக. ஏனெனில் நேரம் இருளடைந்து கொண்டே செல்கிறது. ஆனால் நீர் விரும்பும் எந்த நேரத்திலும் விளக்கை எரியச் செய்ய நீர் பிரசன்னராயிருக்கிறீர் என்பதை நாங்கள் எப்பொழுதும் நினைவு கூருவோமாக. பிதாவே, உம்மால் விளக்கை எரியச் செய்யக் கூடும். “நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” என்று நீர் கூறியுள்ளீர். கர்த்தாவே, உமக்கு ஊழியம் செய்யும் எங்களுடைய விளக்குகள் மற்றவர்களுக்கு பிரகாசமாக எரியவும், நாளுக்கு நாள் நாங்கள் சுவிசேஷத்தின்படி ஜீவித்து, இயேசு கிறிஸ்து இவ்வுலகில் இருந்த போது தாழ்மையும் இனிமையும் நிறைந்தவராய், அதே சமயத்தில் வார்த்தை அவர் மூலமாய் ஜீவித்தது போல, அந்த அவருடைய வாழ்க்கையை நாங்கள் அவர்களுக்கு பிரதிபலித்துக் காண்பிக்கவும், அவர்கள் சுவிசேஷத்தின் வெளிச்சத்தைக் காணும்படியும் அருள் புரியும். நாங்கள் உம்மையே, கையில் ஸ்விட்ச்சை வைத்துக் கொண்டிருக்கும் அந்த மகத்தானவரையே, நோக்குகிறோம். நீர் உலகத்தை உமது கரங்களில் கொண்டிருக்கிறீர். நீர் எல்லாவற்றையும் உமது கரங்களில் கொண்டவராய், உலகத்தை உமது வார்த்தையினால் தாங்குகிறீர். ஓ பிதாவே, நாங்கள் வார்த்தையை ஏற்றுக் கொள்வோமாக. கர்த்தாவே, தயவு கூர்ந்து இதை அருளுவீரா? அதுவே இங்குள்ள ஒவ்வொருவருடைய இருதயத்தின் விருப்பமும் சாட்சியுமாய் இருப்பதாக. பிதாவே, இந்த பாடல்களை நாங்கள் பாடும் போது... தாவீது பாடின சங்கீதங்கள் தீர்க்கதரிசனமாக அமைந்தன. அவைகளை நீர் தீர்க்கதரிசனமாக அங்கீகரித்தீர். கர்த்தாவே, நாம் ஒளியில் நடப்போம் என்னும் பாடலைப் பாடும் போது எங்கள் இருதயத்தில் அதை உணர்ந்து பாடுவோமாக. கர்த்தாவே, அது அப்படியே ஆகட்டும். இது மிகவும் அழகான ஒளி. இது வார்த்தை. இது கிறிஸ்து நமது மத்தியில் வாசம் பண்ணுதல். அவர் முன்பு என்னவாயிருந்தார் என்றல்ல. இப்பொழுது என்னவாயிருக்கிறார் என்பதே. அவர் என்னவாயிருந்தார் என்பது இப்பொழுது என்னவாயிருக்கிறார் என்பதைப் பிரதிபலிக்கிறது. பிதாவே, ஜனங்கள் இதை புரிந்து கொண்டு இந்த அழகான ஒளியில் நடக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். 138நாம் சிறிது நேரம் நின்ற வண்ணமாக எல்லோரும் பாடுவோம். இங்கு பிரஸ்பிடேரியன்கள், மெதோடிஸ்டுகள், கத்தோலிக்கர் போன்ற பல்வேறு ஸ்தாபனத்தினர் ஒன்றாக கலந்துள்ளனர். இதை ஞாபகம் கொள்ளுங்கள், இந்த பொய்யான வெளிச்சங்களில் உள்ள ஜனங்களுக்கு விரோதமாக நான் ஒன்றையும் கூறவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆனால் இவை பொய்யான வெளிச்சங்கள் என்று வேதத்தின் வாயிலாக நிரூபித்தேன். அப்படி இல்லாமல் போனால், கிறிஸ்து தாம் வாக்களித்ததை அவர்களில் நிறைவேற்றுவார். பாருங்கள்? அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். பாருங்கள்? நீங்கள் அங்கு செல்லும்போது, என்ன காண்கிறீர்கள்? சபையை சேர்ந்து கொள்ளுதல், கோட்பாட்டை திரும்பத் திரும்பக் கூறுதல். அதன் விளைவு என்ன? நீங்கள் பாதையின் முடிவுக்கு வரும்போது, அதுபொய்யான கானல் நீர் என்பதை அறிந்து கொள்கிறீர்கள். கிறிஸ்துவே வார்த்தை. அவரே ஒளி. நீங்கள் அதில் வாழ முடியும்போது வாழுங்கள். நீங்கள் எதற்கோ வாழ்கின்றீர்கள். 139நீங்கள் எதற்காக வாழ்கின்றீர்கள்? மரிப்பதற்காக. நீங்கள் ஒவ்வொருவரும் எதற்காக உழைக்கின்றீர்கள்? உண்பதற்காக. நீங்கள் எதற்காக உண்கிறீர்கள்? உயிர் வாழ்வதற்காக. நீங்கள் எதற்காக உயிர் வாழ்கிறீர்கள்? மரிப்பதற்காக. எனவே வாழ்வதற்கென்று நீங்கள் ஏன் வாழக் கூடாது? வாழ்வதற்கென்று ஏன் வாழக் கூடாது? நீங்கள் வாழக் கூடிய ஒரே வழி வார்த்தையை ஏற்றுக் கொள்வதன் மூலமே. எனெனில் “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல (நெற்றி வேர்வையைக் கொண்டு சம்பாதிக்கும் அப்பம்), தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” இப்பொழுது தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தை நமது முன்னிலையில் பரிசுத்த ஆவியால் உறுதிப்படுத்தப்படுகிறது, அதனால் பிழையுங்கள். அப்படி செய்வீர்களா? 140இந்த பாடலை நாம் மறுபடியும் பாடும்போது, நாம் ஒவ்வொருவரும் நமது இடத்தில் நின்று, கையை நீட்டி மற்றொருவரின் கையைப் பிடித்து, “சகோதரனே, இந்த ஒளியில் நாம் நடப்போம்” என்று சொல்லுவோம். “நாம் ஒளியில் நடப்போம்” என்னும் பாடலைப் பாடும் போது. அப்படி செய்வீர்களா? நீங்கள் கைகுலுக்கும் போது ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங்கள். நாம் சேர்ந்து பாடும் போது, கூடுமான வரைக்கும் நமது கண்கள் மூடியிருக்கட்டும். நாம் ஒளியில் நடப்போம்! மிகவும் அழகான ஒளி! இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது (அது யார்?) இயேசுவே, உலகத்தின் ஒளியே இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் பிரகாசியும் இப்பொழுது நமது கரங்களையுயர்த்துவோம். நாம் ஒளியில் நடப்போம்! அது மிகவும் அழகான ஒளி! இரக்கத்தின்பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது ஓ இயேசுவே, உலகத்தின் ஒளியே இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் பிரகாசியும். ஒளியின் பரிசுத்தவான்களே, நீங்கள் வந்து இயேசுவே உலகத்தின் ஒளி என்று பிரஸ்தாபியுங்கள் (அது என்ன?) அப்பொழுது பரலோகத்தின் மணிகள் இயேசுவே உலகத்தின் ஒளி என்று ஒலிக்கும் ஓ, இப்பொழுது நாம் பாடுவோம்: நாம் ஒளியில் நடப்போம்! அது மிகவும் அழகான ஒளி! இரக்கத்தின்பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது இயேசுவே, உலகத்தின் ஒளியே இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் பிரகாசியும். 141இப்பொழுது நாம் தலைவணங்கினவர்களாய்; ஞாபகம் கொள்ளுங்கள், இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பிரயாணத்தில் அனுதினமும் புது மன்னாவை புசித்துக் கொண்டிருந்த போது, அவர்கள் அக்கினி ஸ்தம்பத்தின் வெளிச்சத்தில் நடந்து சென்றார்கள். அக்கினி ஸ்தம்பம் இயேசு கிறிஸ்து. அப்படித்தான் வேதம் கூறுகிறது. இன்றைக்கு அவர் நம்மோடு கூட இருக்கிறார். அதை நாம் பெற்றிருக்கிறோம். அதே அக்கினி ஸ்தம்பம் நம்மோடு கூட இருந்து, அவருடைய வார்த்தையை நிறைவேற்றுவதற்கென, அவர் பூமியிலிருந்த போது செய்த அதே கிரியைகளை இப்பொழுது செய்து வருகிறார் என்று அறிந்திருக்கிறோம். இவ்விடம்விட்டு நாம் செல்லும் போது, இந்த பாடலை நம் இருதயங்களில் கொண்டவர்களாய் நமது வீடுகளுக்குச் செல்ல நாம் ஞாபகம் கொள்வோம் சக்கரங்கள் ஒரு பாடலை மௌனமாக இசைப்பது போல். நீங்கள் பகல் உணவு உண்பதற்கு முன்பு, உங்கள் சரீரங்களுக்கு தேவையான ஆகாரத்தை பூமியில் விளையச் செய்ய தேவன் வெளிச்சத்தை அனுப்பினதற்காக நாம் தலைவணங்கி அவருக்கு நன்றி செலுத்திவிட்டு, அதன் பிறகு ஆத்தும ஆகாரத்துக்காக அவர் ஆவிக்குரிய வெளிச்சத்தை, அவருடைய வார்த்தையை, அனுப்பினதற்காக அவருக்கு நன்றி செலுத்துவோம். ஏனெனில் “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” இந்த பாடலை உங்கள் வீட்டில் உங்களுக்குள்ளேயும் உங்கள் ஜனங்களின் மத்தியிலும் பாடிக் கொண்டேயிருந்து, மறுபடியும் இன்றிரவு 6.30 மணிக்கு ஜெப அட்டைகளுக்காகவும் மற்றவைகளுக்காகவும் எங்களை சந்தியுங்கள். அப்பொழுது உங்களைக் காண்போம். அது வரைக்கும்; இப்பொழுது தலைவணங்குங்கள். இப்பொழுது போதகரான சகோ. நெவில் இங்கு நடந்து வந்து ஜெபம் செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப் போகிறேன்.